ஆராவ் தொடருந்து நிலையம்
ஆராவ் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Arau Railway Station மலாய்: Stesen Keretapi Arau); சீனம்: 亚娄火车站) என்பது தீபகற்ப மலேசியா, பெர்லிஸ் மாநிலத்தில் ஆராவ் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் ஆராவ் மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது. [1] இந்த நிலையத்திற்கு ஓர் அரச தொடருந்து நிலையம் எனும் சிறப்புத் தன்மை வழங்கப்பட்டு உள்ளது.
ஆராவ் அரச நிலையம் Stesen Diraja Arau | |||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() ![]() ![]() | |||||||||||||||||||||||||||||||
![]() ஆராவ் தொடருந்து நிலையம் | |||||||||||||||||||||||||||||||
பொது தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||
அமைவிடம் | ஆராவ், பெர்லிஸ், மலேசியா | ||||||||||||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 6°25′55″N 100°16′06″E / 6.4319°N 100.2683°E | ||||||||||||||||||||||||||||||
உரிமம் | ![]() | ||||||||||||||||||||||||||||||
தடங்கள் | 1 மலாயா மேற்கு கடற்கரை ETS ![]() | ||||||||||||||||||||||||||||||
நடைமேடை | 3 நடை மேடைகள் | ||||||||||||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||||||||||||||||||||||
இணைப்புக்கள் | உள்ளூர் போக்குவரத்து | ||||||||||||||||||||||||||||||
கட்டமைப்பு | |||||||||||||||||||||||||||||||
தரிப்பிடம் | ![]() | ||||||||||||||||||||||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | ![]() | ||||||||||||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ![]() | ||||||||||||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||||||||||||
திறக்கப்பட்டது | 1917 | ||||||||||||||||||||||||||||||
மூடப்பட்டது | சூன் 22, 2011 | (பழைய நிலையம்)||||||||||||||||||||||||||||||
மறுநிர்மாணம் | 2014 | ||||||||||||||||||||||||||||||
மின்சாரமயம் | 2014 | ||||||||||||||||||||||||||||||
சேவைகள் | |||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||
|
மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் எனும் தீபகற்ப மலேசிய மேற்கு கரை வழித்தடத்தில் (KTM Wast Coast Railway Line), தாய்லாந்து நாட்டிற்கு மிக அருகில் உள்ள நிலையமாக இந்த நிலையம் அமைகிறது. பெர்லிஸ் மாநிலத்தின் அரச நகரமான ஆராவ் நகரத்தின் பெயர் இந்த நிலையத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையம் மாநிலத் தலைநகரமான கங்கார் நகருக்கு 10 கி.மீ. தெற்கில் அமைந்துள்ளது.
பொது
தொகுஇந்த நிலையம் கேடிஎம் கொமுட்டர் (KTM Komuter) தொடருந்து சேவை; கேடிஎம் இடிஎஸ் (KTM ETS) தொடருந்து சேவை; ஆகிய இரண்டு சேவைகளையும் வழங்குகிறது. தீபகற்ப மலேசியாவின் மேற்கு கரை பகுதியில் பெர்லிஸ் மாநிலத்தின் பாடாங் பெசார் தொடருந்து நிலையத்திற்கு அடுத்த நிலையமாக விளங்குகிறது.
தற்போதைய தொடருந்து நிலையம் ஈப்போ - பாடாங் பெசார் மின்மயமாக்கல் மற்றும் இரட்டை தண்டவாளத் திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்டது. கட்டுமான வேலைகள் டிசம்பர் 2014-இல் நிறைவடைந்தன. 22 ஜூன் 2011-இல் பழைய ஒற்றை நடைமேடை நிலையத்திற்குப் பதிலாக புதிய தொடருந்து நிலையம் கட்டப்பட்டது. [2]
ஆராவ் பேருந்து நிலையம்
தொகுகேடிஎம் இடிஎஸ் மற்றும் கேடிஎம் கொமுட்டர் தொடருந்துகள் இங்கு நின்று செல்வதால், இந்த இடம் பெர்லிஸ் மாநிலத்தில் மிகவும் முக்கிய இடமாகக் கருதப்படுகிறது. இந்த நிலையம் ஆராவ் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ளது. இங்குள்ள பேருந்து நிலையம், கங்கார், சாங்லூன் மற்றும் அலோர் ஸ்டார் நகரங்களுக்கு பேருந்து சேவைகளை வழங்குகிறது.
கோலா பெர்லிஸ் பட்டினத்திற்கு பயணிகளை அழைத்துச் செல்லும் வாடகைக்கார் சேவைகளும் உள்ளன. கெடாவில் உள்ள லங்காவி தீவின் முக்கிய படகுத் துறைகளில் கோலா பெர்லிஸ் படகுத் துறையும் ஒன்றாகும்.
லங்காவி தீவுக்குச் செல்லும் பயணிகள் பெரும்பாலும் இந்த நிலையத்திலும், கங்கார் மற்றும் அருகிலுள்ள இடங்களுக்குச் செல்லும் பொது மக்களும் பெரும்பாலும் ஆராவ் நகரில் இறங்கிச் செல்வது வழக்கம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Arau Royal Railway Station or Stesen Diraja Arau is a railway station located in Arau, Perlis, Malaysia". RailTravel Station. Retrieved 16 July 2023.
- ↑ "Arau Railway Station Ceases Operation". Bernama. 23 June 2011. Retrieved 31 August 2015.