அலோர் ஸ்டார் தொடருந்து நிலையம்
அலோர் ஸ்டார் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Alor Setar Railway Station மலாய்: Stesen Keretapi Alor Setar); சீனம்: 亚罗士打火车站) என்பது தீபகற்ப மலேசியா, கெடா மாநிலத்தின் தலைநகரமான அலோர் ஸ்டார் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் அலோர் ஸ்டார் மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.
அலோர் ஸ்டார் | |||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Alor Setar Railway Station | |||||||||||||||||||||||||||||||
அலோர் ஸ்டார் தொடருந்து நிலையம் | |||||||||||||||||||||||||||||||
பொது தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||
அமைவிடம் | அலோர் ஸ்டார் கெடா மலேசியா | ||||||||||||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 6°06′47″N 100°22′10″E / 6.113056°N 100.369444°E | ||||||||||||||||||||||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து நிறுவனம் | ||||||||||||||||||||||||||||||
தடங்கள் | 1 மலாயா மேற்கு கடற்கரை ETS கேடிஎம் இடிஎஸ் | ||||||||||||||||||||||||||||||
நடைமேடை | 2 நடை மேடைகள் | ||||||||||||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||||||||||||||||||||||
இணைப்புக்கள் | உள்ளூர் போக்குவரத்து | ||||||||||||||||||||||||||||||
கட்டமைப்பு | |||||||||||||||||||||||||||||||
தரிப்பிடம் | இலவசம் | ||||||||||||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | ||||||||||||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||||||||||||
திறக்கப்பட்டது | 1914 | ||||||||||||||||||||||||||||||
மறுநிர்மாணம் | 2014 | ||||||||||||||||||||||||||||||
மின்சாரமயம் | 2015 | ||||||||||||||||||||||||||||||
சேவைகள் | |||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||
|
மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் எனும் தீபகற்ப மலேசிய மேற்கு கரை வழித்தடத்தில் (KTM Wast Coast Railway Line), கெடா மாநிலத்தின் தலைநகரமான அலோர் ஸ்டார் மாநகரில் இந்த நிலையம் உள்ளது.[1]
பொது
தொகுஈப்போ - பாடாங் பெசார் மின்மயமாக்கல்; மற்றும் இரட்டை தண்டவாளத் திட்டத்தின் ஒரு பகுதியாக அலோர் ஸ்டார் நகரில் புதிய தொடருந்து நிலையம் கட்டப்பட்டது. 2015-ஆம் ஆண்டில் செயல்படத் தொடங்கிய இந்த நிலையம், கேடிஎம் இடிஎஸ்; கேடிஎம் கொமுட்டர் நிறுவனங்களின் தொடருந்துகளால் சேவை செய்யப் படுகிறது.
புதிய நவீன நிலையத்தைக் கட்டுவதற்கு வசதியாக, தனித்துவமான கடிகாரக் கோபுரத்துடன் கூடிய பழைய தொடருந்து நிலையம், 29 ஜனவரி 2013-இல் மூடப்பட்டது.[2]
தற்காலிக நிலையம்
தொகுபழைய நிலையத்திற்கு எதிரே ஒரு தற்காலிக நிலையம், தஞ்சோங் பெண்டகாரா சாலையில் கட்டப்பட்டது. அந்தத் தற்காலிக நிலையம், 12 ஜூன் 2014-இல் புதிய நிலையம் செயல்படத் தொடங்கும் வரை செயல்பாட்டில் இருந்தது.[3]
பழைய நிலையம் பாதுகாக்கப்பட்டு வடுகிறது. தற்போது உணவகம் மற்றும் சிற்றுண்டி சாலையாக மாற்றப்பட்டுள்ளது.[4]
இந்து ஆலயம்
தொகு2020-ஆம் ஆண்டில், தொடருந்து நிலையத்தின் நுழைவாயிலில் அமைந்திருந்த நூற்றாண்டு பழமையான இந்து ஆலயம், சாலைத் திட்டத்திற்கு வழி வகுக்கும் வகையில் இடிக்கப்பட்டது.
20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பட்டர்வொர்த் நகரில் இருந்து வடக்கு எல்லைக்கு தொடருந்து வழித்தடங்களை அமைத்த இந்திய தொழிலாளர்களால் அந்த ஆலயம் கட்டப்பட்டது.[5]
இந்த ஆலயம் 2011-இல் மலேசியத் திரைப்படமான ’ஓம்பாக் ரிண்டு’ (Ombak Rindu) எனும் திரைப்படத்தில் இடம்பெற்று உள்ளது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Alor Setar Train Station is on Malaysia's North - South Line, that connects with Thailand's Southern Line at the border station of Padang Besar, then travels all the way down Peninsular Malaysia, via Butterworth Penang, Ipoh and Kuala Lumpur, to Singapore". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 17 July 2023.
- ↑ "Alor Setar railway station to be closed on Jan 29". astroawani.com. 21 January 2013. பார்க்கப்பட்ட நாள் 25 February 2023.
- ↑ "Four new KTM railway stations begin operations in stages". Malay Mail (in ஆங்கிலம்). 13 June 2014. பார்க்கப்பட்ட நாள் 25 February 2023.
- ↑ Teh Leam Seng, Alan (5 May 2019). "The former Alor Setar Railway Station gets a new breath of life!". New Straits Times. பார்க்கப்பட்ட நாள் 25 February 2023.
- ↑ Siti (25 June 2020). "Century-old Hindu shrine outside Alor Setar railway station faces demolition". malaysiamarketing.my. பார்க்கப்பட்ட நாள் 25 February 2022.
- ↑ "Century-old Hindu Shrine In Alor Setar Demolished!". astroulagam.com.my. 10 July 2020. பார்க்கப்பட்ட நாள் 25 February 2022.