அலோர் ஸ்டார் மாநகராட்சி
அலோர் ஸ்டார் மாநகராட்சி (மலாய்: Majlis Bandaraya Alor Setar; ஆங்கிலம்: Alor Setar City Council); (சுருக்கம்: MBAS) என்பது மலேசியா, கெடா, மாநிலத்தில் அலோர் ஸ்டார் மாநகரத்தை நிர்வகிக்கும் மாநகராட்சி ஆகும். இந்த மாநகராட்சி மலேசியாவின் கெடா மாநில அரசாங்கத்தின் கீழ் உள்ளது.[1]
அலோர் ஸ்டார் மாநகராட்சி Alor Setar City Council Majlis Bandaraya Alor Setar | |
---|---|
வகை | |
வகை | மாநகர் மன்றம் of அலோர் ஸ்டார் |
வரலாறு | |
முன்பு | கோத்தா ஸ்டார் நகராட்சி மன்றம் |
தலைமை | |
நகர முதல்வர் | முகமட் சோடி சாடார் Mohd Zohdi Saadr |
தலைமைச் செயலாளர் | அக்கிம் அரிப் நூர் Hakim Ariff Md Noor |
கூடும் இடம் | |
Jalan Kolam Air, 05675 Alor Setar, Kedah, Malaysia | |
வலைத்தளம் | |
www |
அலோர் ஸ்டார் மாநகராட்சியின் அதிகார வரம்பு 333 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த மாநகராட்சி, கெடாவில் உள்ள கோத்தா ஸ்டார் மாவட்டம் (Kota Setar District); மற்றும் பொக்கோக் சேனா மாவட்டம் (Pokok Sena District) ஆகிய இரு மாவட்டங்களை நிர்வகிக்கிறது. கோத்தா ஸ்டார் மாவட்டத்தில் தான் அலோர் ஸ்டார் மாநகரமும் உள்ளது.
பொது
தொகு2003 டிசம்பர் 21-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக நகரத் தகுதி வழங்கப்பட்ட பிறகு அலோர் ஸ்டார் நகராட்சி நிறுவப்பட்டது.
அலோர் ஸ்டார் மாநகராட்சியின் முதல்வர் (மேயர்); மற்றும் அதன் 24 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும் கெடா மாநில அரசாங்கம் ஓராண்டு காலத்திற்கு நியமிக்கிறது. மேற்சொன்ன அலோர் ஸ்டார் மாநகராட்சியின் பொறுப்புகள் அனைத்தும் நியமனப் பொறுப்புகளாகும்.
பொதுவாக மற்ற எல்லா மாநகராட்சிகளைப் போலவே இந்த மாநகராட்சியும் பொதுச் சுகாதாரம்; கழிவு மேலாண்மை; நகர மேலாண்மை; நகரத் திட்டமிடல்; சுற்றுச்சூழல் பாதுகாப்பு; கட்டடக் கட்டுப்பாடு; சமூகப் பொருளாதார மேம்பாடு; மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பின் பொது பராமரிப்பு; போன்ற செயல்பாடுகளைக் கவனித்துக் கொள்கிறது.
வரலாறு
தொகுஅலோர் ஸ்டார் சுகாதார வாரியம் (Alor Star Sanitary Board) 1905-இல் நிறுவப்பட்டது. இந்த வாரியம் 1958-இல் அலோர் ஸ்டார் ஊராட்சி வாரியமாக (Alor Star Municipal Board) மாறியது. பின்னர் 1 மார்ச் 1976-இல் கோத்தா ஸ்டார் மாவட்ட ஊராட்சியாக (Kota Setar District Council) தரம் உயர்த்தப்பட்டது.[2]
மீண்டும் 1 பிப்ரவரி 1978-இல் கோத்தா ஸ்டார் நகராட்சி மன்றமாக (Kota Setar Municipal Council) தரம் உயர்த்தப்பட்டது. இறுதியாக 21 டிசம்பர் 2003-இல் அலோர் ஸ்டார் மாநகராட்சியாக (Alor Star City Council) தகுதி உயர்த்தப்பட்டது.<ref name="Sanitary Board">
அலோர் ஸ்டார் நகரம் 31 டிசம்பர் 1735-இல் நிறுவப்பட்டது. இதன் மூலம், தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் உள்ள பழமையான நகரங்களில் அலோர் ஸ்டார் மாநகரமும் ஒன்று என அறியப்பட்டுகிறது.
அலோர் ஸ்டார் நகராட்சி முதல்வர்கள்
தொகுஎண் | முதல்வர் | தொடக்கம் | முடிவு |
---|---|---|---|
1 | முகமது இசுமாயில் அனுவார் | 1 பிப்ரவரி 1978 | 13 சனவரி 1983 |
2 | துங்கு அகமது துங்கு முகம்மது | 14 சனவரி 1983 | 6 அக்டோபர் 1985 |
3 | அப்துல்லா அசுமின் | 6 அக்டோபர் 1985 | 11 செப்டம்பர் 1990 |
4 | யூசப் நயன் | 11 செப்டம்பர் 1990 | 31 டிசம்பர் 1990 |
5 | சாம்ப்ரி முகம்மது | 1 சனவரி 1991 | 17 ஜூன் 1993 |
6 | டத்தி அசீசா மசியான் நோர்டின் | 17 சூன் 1993 | 30 ஆகஸ்டு 1994 |
7 | செப்ரி அகமத் சாத் | 31 ஆகஸ்து 1994 | 21 சனவரி 1995 |
8 | யூசப் நயன் | 21 சனவரி 1995 | 21 டிசம்பர் 2003 |
அலோர் ஸ்டார் மாநகராட்சி முதல்வர்கள்
தொகுஎண் | முதல்வர் | தொடக்கம் | முடிவு |
---|---|---|---|
1 | யூசப் நயன் | 22 டிசம்பர் 2003 | 31 அக்டோபர் 2006 |
2 | அப்துல் முக்தி அப்துல்லா | 1 நவம்பர் 2006 | 30 நவம்பர் 2006 |
3 | கசாலி தின் | 1 டிசம்பர் 2006 | 16 சூலை 2011 |
4 | மத் நோ அகமத் | 17 சூலை 2011 | 15 ஆகஸ்ட் 2016 |
5 | முகமட் சோடி சாடார் | 15 ஆகஸ்டு 2016 | பதவியில் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "MBAS - Majlis Bandaraya Alor Setar". alorsetar.city.com.my. பார்க்கப்பட்ட நாள் 26 August 2022.
- ↑ "Local Authority was known as Badan Kebersihan Bandar or 'Sanitary Board'. The Sanitary Board was established with the aim of maintaining cleanliness, guaranteeing the health of the people and the city of Alor Setar. The area covers 7.36 square km". pbt.kedah.gov.my. பார்க்கப்பட்ட நாள் 26 August 2022.