கோத்தா ஸ்டார் மாவட்டம்

மலேசியாவின் கெடா மாநிலத்தில் உள்ள மாவட்டம்

கோத்தா ஸ்டார் மாவட்டம் (ஆங்கிலம்: Kota Setar District; மலாய்: Daerah Kota Setar; சீனம்: 哥打士打县; ஜாவி: كوتا ستار) என்பது மலேசியா, கெடா மாநிலத்தில் அமைந்து உள்ள ஒரு மாவட்டம் ஆகும்.[1]

கோத்தா ஸ்டார் மாவட்டம்
Kota Setar District
 மலேசியா
கெடா மாநிலத்தில் கோத்தா ஸ்டார் மாவட்டம் அமைவிடம்
கெடா மாநிலத்தில்
கோத்தா ஸ்டார் மாவட்டம் அமைவிடம்
Map
கோத்தா ஸ்டார் மாவட்டம் is located in மலேசியா
கோத்தா ஸ்டார் மாவட்டம்
      கோத்தா ஸ்டார் மாவட்டம்
ஆள்கூறுகள்: 6°5′N 100°20′E / 6.083°N 100.333°E / 6.083; 100.333
நாடு மலேசியா
மாநிலம் கெடா
மாநகரம்கோத்தா ஸ்டார்
நகராட்சிகோத்தா ஸ்டார் நகராட்சி மன்றம்
(Bandar Baharu District Council)
அரசு
 • மாவட்ட அதிகாரிஅப்துல்லா அசீம்
(Abdullah Hashim)
பரப்பளவு
 • மொத்தம்890 km2 (340 sq mi)
மக்கள்தொகை
 (2020)
 • மொத்தம்3,74,051
நேர வலயம்ஒசநே+8 (மலேசிய நேரம்)
மலேசிய அஞ்சல் குறியீடு
05xxx
மலேசியத் தொலைபேசி எண்கள்+6-04
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்K

இந்த மாவட்டத்தில் தான் கெடா மாநிலத்தின் தலைநகரமான அலோர் ஸ்டார் அமைந்துள்ளது. கெடா மாநிலத்தின் வடமேற்குப் பகுதியில், பினாங்கின் தலைநகரான ஜார்ஜ் டவுன் நகருக்கு வடமேற்கே 116 கி.மீ. தொலைவில், தாய்லாந்து எல்லைக்கு அருகில் உள்ளது.

பொது

தொகு

கோத்தா ஸ்டார் மாவட்டத்தின் வடக்கில் குபாங் பாசு மாவட்டம்; கிழக்கில் பொக்கோ சேனா மாவட்டம்; தென்கிழக்கில் பெண்டாங் மாவட்டம்; தெற்கில் யான் மாவட்டம்; மேற்கில் மலாக்கா நீரிணை ஆகியவை எல்லைகளாக உள்ளன.[2]

பெயர்

தொகு

கோத்தா ஸ்டார் என்ற பெயர் செட்டார் அல்லது 'ஸ்டாக்' (Stak) மரத்தில் இருந்து வந்தது. இது உண்ணக்கூடிய ஆரஞ்சு நிறப் பழங்களைக் கொண்ட ஒரு உள்நாட்டு (Bouea macrophylla) தாவரமாகும்.

நிர்வாகப் பிரிவுகள்

தொகு
 
கோத்தா ஸ்டார் மாவட்ட வரைப்படம்
 
கோத்தா ஸ்டார் மாவட்ட அலுவலகம்
 
கோத்தா ஸ்டார் மற்றும் யான் மாவட்ட எல்லைப் பகுதி

கோத்தா ஸ்டார் மாவட்டம் 28 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. ஒரு மாவட்டத்தின் ஒரு துணைப் பிரிவு முக்கிம் (Mukim) என அழைக்கப் படுகின்றது.[3]

  • அலோர் மலை (Alor Malai)
  • அலோர் மேரா (Alor Merah)
  • அனாக் புக்கிட் (Anak Bukit)
  • புக்கிட் பினாங் (Bukit Pinang)
  • டெர்கா (Derga)
  • குனோங் (Gunong)
  • ஊத்தான் கம்போங் (Hutan Kampung)
  • காங்கோங் (Kangkong)
  • கோத்தா ஸ்டார் (Kota Setar)
  • கோலா கெடா (Kuala Kedah)
  • குபாங் ரோத்தான் (Kubang Rotan)
  • லங்கார் (Langgar)
  • லெங்குவாஸ் (Lengkuas)
  • லெப்பை (Lepai)
  • லிம்போங் (Limbong)
  • மெர்கோங் (Mergong)
  • பாடாங் ஆங் (Padang Hang)
  • பாடாங் லாலாங் (Padang Lalang)
  • பெங்காலான் குண்டோர் (Pengkalan Kundor)
  • பும்போங் (Pumpong)
  • சாலா கெச்சில் (Sala Kechil)
  • சுங்கை பாரு (Sungai Baharu)
  • தாஜார் (Tajar)
  • தெபெங்காவ் (Tebengau)
  • தெலாகா மாஸ் (Telaga Mas)
  • தெலோக் செங்கை (Telok Chengai)
  • தெலோக் கெச்சாய் (Telok Kechai)
  • தித்தி காஜா (Titi Gajah)

மலேசிய நாடாளுமன்றம்

தொகு

மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) கோத்தா ஸ்டார் மாவட்டத்தின் நாடாளுமன்றத் தொகுதிகள்.

நாடாளுமன்றம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி
P8 பொக்கோக் சேனா மாபுஸ் ஒமார் பாக்காத்தான் ஹரப்பான் (அமாணா)
P9 அலோர் ஸ்டார் சான் மிங் காய் பாக்காத்தான் ஹரப்பான் (பி.கே.ஆர்)
P10 கோலா கெடா அசுமான் அலி பாக்காத்தான் ஹரப்பான் (பி.கே.ஆர்)

கெடா மாநிலச் சட்டமன்றம்

தொகு

கெடா மாநிலச் சட்டமன்றத்தில் கோத்தா ஸ்டார் மாவட்டப் பிரதிநிதிகள்; (2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்):

நாடாளுமன்றம் மாநிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கட்சி
P8 N10 புக்கிட் பினாங் வான் ரொமானி சலீம் பாரிசான் நேசனல் (அம்னோ)
P8 N11 டெர்கா தான் கோக் இயூ பாக்காத்தான் ஹரப்பான் (ஜ.செ.க)
P9 N12 சுக்கா மெனாந்தி சாம்ரி யூசோப் பாக்காத்தான் ஹரப்பான் (பி.கே.ஆர்)
P9 N13 கோத்தா டாருல் அமான் தே சுவீ லியோங் பாக்காத்தான் ஹரப்பான் (ஜ.செ.க)
P9 N14 அலோர் மெங்குடு பாரோல்ராசி பாக்காத்தான் ஹரப்பான் (அமாணா)
P10 N15 அனாக் புக்கிட் அமிருடின் அம்சா பெஜுவாங்
P10 N16 குபாங் ரோத்தான் அமிருல் அனுவார் பாக்காத்தான் ஹரப்பான் (அமாணா)
P10 N17 பெங்காலான் குண்டுர் இஸ்மாயில் சாலே பாக்காத்தான் ஹரப்பான் (அமாணா)

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "The entire Kota Setar District is under the administration of the Kota Setar District Office, while the land administration is divided into the administration of the Kota Setar Land Office and the Pokok Sena Land Office". பார்க்கப்பட்ட நாள் 8 November 2022.
  2. "Latar Belakang Daerah Kota Setar".{{cite web}}: CS1 maint: url-status (link)
  3. "Latar Belakang Majlis Bandaraya Alor Setar".{{cite web}}: CS1 maint: url-status (link)
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kota Setar District
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கோத்தா_ஸ்டார்_மாவட்டம்&oldid=3931199" இலிருந்து மீள்விக்கப்பட்டது