பெண்டாங் மாவட்டம்

பெண்டாங் மாவட்டம் என்பது (மலாய்: Daerah Pendang; ஆங்கிலம்: Pendang District; சீனம்: 本同县) மலேசியா, கெடா மாநிலத்தில் அமைந்து உள்ள ஒரு மாவட்டம் ஆகும்.[1]

பெண்டாங் மாவட்டம்
Pendang District
 மலேசியா
பெண்டாங் மாவட்ட ஊராட்சியகம்
பெண்டாங் மாவட்ட ஊராட்சியகம்
Location of பெண்டாங் மாவட்டம்
Map
பெண்டாங் மாவட்டம் is located in மலேசியா
பெண்டாங் மாவட்டம்
பெண்டாங் மாவட்டம்
      பெண்டாங் மாவட்டம்
ஆள்கூறுகள்: 6°0′N 100°28′E / 6.000°N 100.467°E / 6.000; 100.467
நாடு மலேசியா
மாநிலம் கெடா
மாவட்டம்பெண்டாங் மாவட்டம்
நகராட்சிபெண்டாங் மாவட்ட ஊராட்சி
(Pendang District Council)
பரப்பளவு
 • மொத்தம்629 km2 (243 sq mi)
மக்கள்தொகை
 • மொத்தம்98,922 (2,020)
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு06xxx
மலேசிய தொலைபேசி+6-04
மலேசிய போக்குவரத்து பதிவெண்K

இந்த மாவட்டம் நெல் வயல்களால் மிகுதியாய்ச் சூழப்பட்டு உள்ளது. மற்றும் பல இனங்கள் மற்றும் மதங்களின் மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.

அதன் முக்கிய பொருளாதார நடவடிக்கை வேளாண்மை ஆகும். பெண்டாங் நகரம் கெடா மாநிலத் தலைநகரமான அலோர் ஸ்டார் (Alor Setar) நகரில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது.

பொது தொகு

வரலாற்று ரீதியாக, தாய்லாந்திற்கு விளைப் பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் யானைகளை இனப்பெருக்கம் (Elephants Breeding Grounds) செய்வதற்கான மிகப்பெரிய இடமாக பெண்டாங் இருந்தது.

பெண்டாங் முன்பு அலோர் ஸ்டாரின் ஒரு பகுதியாக இருந்தது. பிப்ரவரி 1975-இல் சொந்த மாவட்டமாக மாறியது.

நிர்வாகப் பிரிவுகள் தொகு

பெண்டாங் மாவட்டம் 8 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன:

  • ஆயர் பூத்தே (Air Puteh)
  • புக்கிட் ராயா (Bukit Raya)
  • குவார் கெப்பாயாங் (Guar Kepayang)
  • பாடாங் கெர்பாவ் (Padang Kerbau)
  • பாடாங் பெலியாங் (Padang Peliang)
  • பாடாங் பூசிங் (Padang Pusing)
  • ரம்பாய் (Rambai)
  • தோபியார் (Tobiar)

மேற்கோள்கள் தொகு

  1. "Info Daerah Pendang". Majlis Daerah Pendang. பார்க்கப்பட்ட நாள் 10 January 2017.

மேலும் காண்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெண்டாங்_மாவட்டம்&oldid=3729368" இலிருந்து மீள்விக்கப்பட்டது