மலேசிய மாநகரங்கள்

இது மலேசியாவில் உள்ள மாநகரங்களின் பட்டியல். மலேசியாவைப் பொருத்த வரையில், மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளுக்கு, சட்டப்படியான மாநகரத் தகுதி வழங்கப் படுகிறது. அந்த மாநகரத் தகுதி, பண்டார் ராயா என்றும் அழைக்கப் படுகிறது. எனினும், மிகையாக நகர்மயமான ஒரு சில பகுதிகளுக்கும்; மிகையாக மக்கள் தொகை கொண்ட ஒரு சில பகுதிகளுக்கும், மாநகரத் தகுதிகள் இன்னும் கிடைக்கப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், பேச்சு வழக்கில் அவை மாநகரங்கள் என்றே அழைக்கப் படுகின்றன.

பெரும்பாலும், உள்ளூராட்சிக்குள் அமைந்து இருக்கும் ஓர் இடத்திற்கு மாநகரத் தகுதி வழங்கப்பட்டு விடுகிறது. அந்த வகையில், மாநகரத் தகுதி கிடைக்கப் பெறாத ஒரு பகுதி இருந்தால், அது சட்டப்படியான ஒரு நகராட்சியாகப் பட்டியலிடப் படுகிறது. அல்லது சட்டப்படியான ஒரு நகரமாகப் பட்டியலிடப் படுகிறது.

மலேசியாவில் உள்ள மாநகரங்கள் தொகு

மலேசியாவில் மாநகரத் தகுதி வழங்கப்பட்ட இடங்களின் பட்டியல். (தேதி வாரியாக)[1]

பினாங்கு தொகு

மலேசியாவிலேயே மாநகரம் எனும் தகுதியை முதன்முதலில் பெற்றது ஜோர்ஜ் டவுன், பினாங்கு. மலாயா சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகவே 1 ஜனவரி 1957-இல், எலிசபெத் மகாராணியார் வழங்கிய அரச பட்டயத்தின் மூலமாக ஜோர்ஜ் டவுன் நகரம், மாநகரத் தகுதியைப் பெற்றது.[2] அதற்கு முன்னர் 1951-ஆம் ஆண்டிலேயே சிங்கப்பூர் மாநகரத் தகுதியைப் பெற்று விட்டது.

எனினும், 1965-இல் ஜோர்ஜ் டவுன் நகரத்தின் ஊராட்சி அரசு தேர்தலை நடுவண் அரசு ரத்து செய்தது. 1966-இல், நகராண்மைக் கழகத்தின் நிர்வாகம், பினாங்கு முதலமைச்சரின் கீழ் கொண்டு வரப்பட்டது. 1974-இல் அனைத்து பினாங்கு தீவிற்கும் ஒரே ஒரு நகராண்மைக் கழகம் அமைக்கப் பட்டது. அதாவது, பினாங்கு ஊராட்சி மாவட்டக் கழகத்துடன் ஜோர்ஜ் டவுன் நகராண்மைக் கழகம் இணைக்கப்பட்டது. அதனால், ஜோர்ஜ் டவுன் மாநகர்த் தகுதியை இழந்தது.[3]

இதற்கிடையில், 2014 நவம்பர் மாதம், பினாங்கு ஊராட்சி மாவட்டக் கழகத்தை நகராண்மைக் கழகமாகத் தகுதி உயர்த்த மலேசிய அமைச்சரவை கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டது.[3] ஜோர்ஜ் டவுன் மாநகரத் தகுதி அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்படவில்லை என்றாலும், ஜோர்ஜ் டவுன் என்பது கூட்டாண்மைக்குரிய தகுதியுடன் விளங்குகிறதா அல்லது மாநகரமாக விளங்குகிறதா என்பது ஒரு கேள்விக்குறியாக இருந்து வந்தது.[3] பல கோரிக்கைகளுக்குப் பின்னர் 2015-இல் ஜோர்ஜ் டவுனுக்கு மாநகர் தகுதி வழங்கப்பட்டது.[4]

படத் தொகுப்பு தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_மாநகரங்கள்&oldid=3687033" இருந்து மீள்விக்கப்பட்டது