குபாங் பாசு மாவட்டம்

மலேசியாவின் கெடா மாநிலத்தில் உள்ள மாவட்டம்

குபாங் பாசு மாவட்டம் (ஆங்கிலம்: Kubang Pasu District; மலாய்: Daerah Kubang Pasu; சீனம்: 古邦巴素县; ஜாவி: كوبڠ ڤاسو) என்பது மலேசியா, கெடா மாநிலத்தில் அமைந்து உள்ள ஒரு மாவட்டம் ஆகும்.

குபாங் பாசு மாவட்டம்
Kubang Pasu District
 மலேசியா
கெடா மாநிலத்தில் குபாங் பாசு மாவட்டம் அமைவிடம்
கெடா மாநிலத்தில்
குபாங் பாசு மாவட்டம் அமைவிடம்
Map
குபாங் பாசு மாவட்டம் is located in மலேசியா
குபாங் பாசு மாவட்டம்
      குபாங் பாசு மாவட்டம்
ஆள்கூறுகள்: 6°20′N 100°20′E / 6.333°N 100.333°E / 6.333; 100.333
நாடு மலேசியா
மாநிலம் கெடா
மாநகரம்ஜித்ரா
நகராட்சிகுபாங் பாசு நகராட்சி மன்றம்
(Kubang Pasu Municipal Council)
அரசு
 • மாவட்ட அதிகாரிமுகமட் அரோப் டாருஸ்
(Muhamad Arof Darus)
பரப்பளவு
 • மொத்தம்945.96 km2 (365.24 sq mi)
மக்கள்தொகை
 (2010)[2]
 • மொத்தம்2,15,491
நேர வலயம்ஒசநே+8 (மலேசிய நேரம்)
மலேசிய அஞ்சல் குறியீடு
06xxx
மலேசியத் தொலைபேசி எண்கள்+6-04
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்K

இந்த மாவட்டத்தில் தான் மலேசியா-தாய்லாந்து எல்லை (Malaysia–Thailand border) நகரமான புக்கிட் காயூ ஈத்தாம் (Bukit Kayu Hitam) உள்ளது. அத்துடன் சாங்லூன் (Changlun) கல்வி வளாகம்; மற்றும் மாவட்டத்தின் மிகப்பெரிய நகரமான ஜித்ரா (Jitra) நகரமும் இங்குதான் உள்ளன.

குபாங் பாசு மாவட்டம், கெடா மாநிலத்தின் வடமேற்குப் பகுதியில், பினாங்கு மாநிலத்தின் தலைநகரான ஜார்ஜ் டவுன் நகருக்கு வடமேற்கே 130 கி.மீ. தொலைவில், தாய்லாந்து எல்லைக்கு அருகில் உள்ளது.

பொது

தொகு

குபாங் பாசு மாவட்டத்தின் வடக்கில் பெர்லிஸ் மாநிலம், மற்றும் தாய்லாந்து; கிழக்கில் பாடாங் தெராப் மாவட்டம்; தெற்கில் கோத்தா ஸ்டார் மாவட்டம், பொக்கோக் சேனா மாவட்டம்; மேற்கில் மலாக்கா நீரிணை ஆகியவை எல்லைகளாக உள்ளன.

வரலாறு

தொகு

19-ஆம் நூற்றாண்டில் குபாங் பாசு ஓர் அரைத் தற்சார்பான (semi-independent) இராச்சியமாக இருந்தது. அப்போது அதன் பெயர் குபாங் பாசு டாருல் கியாம் (Kubang Pasu Darul Qiyam).

1839-ஆம் ஆண்டில், குபாங் பாசு டாருல் கியாம் இராச்சியம்; பாயா (Phaya) அல்லது துங்கு அனோம் (King Tunku Anom) எனும் அரசரால் ஆளப் படுவதற்கு சயாம் அரசினால் ஒப்படைக்கப்பட்டது.

துங்கு அனோம்

தொகு

துங்கு அனோம் அரசர் 1821-இல் பிசிக் (Perang Musuh Bisik) போரின் போது கெடாவிற்கும் சயாமிற்கும் இடையே இராஜதந்திர உறவுகளை அமைத்துக் கொடுப்பதில் வெற்றி பெற்றார். அதற்காக குபாங் பாசு டாருல் கியாம் இராச்சியம் துங்கு அனோமிடம் வழங்கப்பட்டது.[3]

பின்னர் 1860-களில், இந்த டாருல் கியாம் இராச்சியம் கெடா மாநிலத்துடன் மீண்டும் இணைக்கப்பட்டது. 22 அக்டோபர் 2018-இல், குபாங் பாசுவுக்கு நகராட்சி தகுதி வழங்கப்பட்டது.

நிர்வாகப் பிரிவுகள்

தொகு
 
புக்கிட் காயூ ஈத்தாம் சுங்கச் சாவடி
 
சாங்லூன் நகர நுழைவாயில்
 
பாடாங் பெசார் சோதனைச் சாவடிக்கு அருகில் தாய்லாந்து மலேசியா எல்லைச் சுவர்

குபாங் பாசு மாவட்டம் 21 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. ஒரு மாவட்டத்தின் ஒரு துணைப் பிரிவு முக்கிம் (Mukim) என அழைக்கப் படுகின்றது.[4]

# முக்கிம் மக்கள் தொகை

(2010)[5]

பரப்பளவு

(km²)[6]

1 முக்கிம் ஆ (Mukim Ah) 4,243 28.12
2 முக்கிம் பிஞ்சால் (Mukim Binjal) 3,504 22.9
3 முக்கிம் புக்கிட் திங்கி (Mukim Bukit Tinggi) 6,724 8.12
4 முக்கிம் கெலோங் (Mukim Gelong) 10,830 28.6
5 முக்கிம் உஸ்பா (Mukim Husba) 3,393 26.41
6 முக்கிம் ஜெராம் (Mukim Jeram) 7,828 38.17
7 முக்கிம் ஜெர்லுன் (Mukim Jerlun) 17,299 65.05
8 முக்கிம் ஜித்ரா (Mukim Jitra) 23,710 13.12
9 முக்கிம் கெப்பெலு (Mukim Kepelu) 9,271 40.72
10 முக்கிம் குபாங் பாசு (Mukim Kubang Pasu) 2,698 41.13
11 முக்கிம் மாலாவ் (Mukim Malau) 3,209 48
12 முக்கிம் நாகா (Mukim Naga) 28,135 47.15
13 முக்கிம் பெராகு (Mukim Perahu) 3,276 19.57
14 முக்கிம் பெலுபாங் (Mukim Pelubang) 9,371 12.38
15 முக்கிம் பெரிங் (Mukim Pering) 6,679 40.51
16 முக்கிம் புத்தாட் (Mukim Putat) 5,012 28.39
17 முக்கிம் சாங்லாங் (Mukim Sanglang, Kedah) 11,891 42.84
18 முக்கிம் லாக்கா (Mukim Laka) 13,351 110.4
19 முக்கிம் தெமின் (Mukim Temin) 35,913 220.3
20 முக்கிம் துஞ்சாங் (Mukim Tunjang) 6,542 31.58
21 முக்கிம் வாங் தெப்புஸ் (Mukim Wang Tepus) 1,600 27.27

புக்கிட் காயூ ஈத்தாம்

தொகு

புக்கிட் காயூ ஈத்தாம் (Bukit Kayu Hitam); மலேசியா, கெடா, குபாங் பாசு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறுநகரம்.

இந்த நகரம் மலேசியா-தாய்லாந்து எல்லை (Malaysia–Thailand border) அருகே அமைந்து உள்ளது. மலேசியா தாய்லாந்து நாடுகளுக்கு இடையே எல்லைக் கடக்கும் பரபரப்பான சாலை இந்த நகரில் உள்ளது.[7]

மலேசியா-தாய்லாந்து எல்லையில் பான் டானோக் கிராமம் (Ban Danok) உள்ளது. அங்கு தான் தாய்லாந்து நாட்டிற்கான சடாவோ (Sadao) சோதனைச் சாவடியும் அமைந்துள்ளது.

தாய்லாந்து பெட்காசெம் சாலை

தொகு

மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுசாலை; மற்றும் மலேசியாவின் கூட்டரசு சாலை 1; ஆகியவற்றின் வடக்கு முனையில் புக்கிட் காயூ ஈத்தாம் உள்ளது.

மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுசாலை, தீபகற்ப மலேசியாவின் தெற்கில் ஜொகூர், ஜொகூர் பாரு மாநகரில் சிங்கப்பூர் எல்லையைக் கடக்கும் இடத்தில் முடிவுறுகிறது. அதே வேளையில் வடக்கில், தாய்லாந்தின் பாதை 4 (Thailand's Route 4) எனும் பெட்காசெம் சாலையுடன் (Phetkasem Road) இணைக்கப்படுகிறது. மேலும் அந்தச் சாலை அப்படியே பாங்காக் மாநகரம் வரை செல்கிறது.

புக்கிட் காயூ ஈத்தாம் நகரம், கோலாலம்பூர் மாநகருக்கு வடக்கே 476 கி.மீ. தொலைவிலும்; கெடாவின் தலைநகரான அலோர் ஸ்டார் மாநகருக்கு வடக்கே 48 கி.மீ. தொலைவிலும் உள்ளது. அருகிலுள்ள நகரமான சாங்லுன் (Changlun) நகருக்குத் தெற்கே சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது.

எல்லைக் கடப்பு சோதனைச் சாவடி

தொகு

புக்கிட் காயூ ஈத்தாமில் உள்ள சுங்கம், குடியேற்றம், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு சோதனைச் சாவடி (Customs, Immigration and Quarantine (CIQ) Complex); அதன் உண்மையான எல்லையில் இருந்து 800 மீட்டர் தெற்கே உள்ளது. தாய்லாந்து சோதனைச் சாவடியானது டானோக் நகரின் எல்லைக்கு மிக அருகில் அமைந்துள்ளது.

புதிய சோதனைச் சாவடி வளாகம்; பழைய வளாகத்தின் விரிவாக்கம் ஆகும். புதிய சோதனைச் சாவடி வளாகம் ரிங்கிட்RM 425 மில்லியன் செலவில் சீரமைப்பு செய்யப்பட்டு, 1 நவம்பர் 2017-இல், பயன்பாட்டிற்கு முழுமையாகத் திறக்கப் பட்டது.[8][9]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Latar Belakang". பார்க்கப்பட்ட நாள் 30 December 2021.{{cite web}}: CS1 maint: url-status (link)
  2. "Taburan penduduk mengikut kawasan pihak berkuasa tempatan dan mukim 2010". பார்க்கப்பட்ட நாள் 2021-12-30. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)
  3. "Sultan Kubang Pasu". பார்க்கப்பட்ட நாள் 2021-12-30. {{cite web}}: |archive-date= requires |archive-url= (help)
  4. "Latar Belakang Majlis Bandaraya Alor Setar".{{cite web}}: CS1 maint: url-status (link)
  5. "Taburan penduduk mengikut kawasan pihak berkuasa tempatan dan mukim 2010". Jabatan Perangkaan Malaysia. pp. 266–267.{{cite web}}: CS1 maint: url-status (link)
  6. "Kubang Pasu, District in Malaysia". citypopulation.de.{{cite web}}: CS1 maint: url-status (link)
  7. "Songkhla keen on 24-hour checkpoint with Malaysia". The Bangkok Post. பார்க்கப்பட்ட நாள் 5 July 2019.
  8. "Bukit Kayu Hitam ICQS opens today for heavy vehicles; to be fully operational Nov 1" (in en). New Straits Times. 2017-07-09. https://www.nst.com.my/news/nation/2017/09/275835/bukit-kayu-hitam-icqs-opens-today-heavy-vehicles-be-fully-operational-nov. 
  9. "New Malaysian complex at Thai border gets equipment boost to stem smuggling" (in en). Straits Times. 2017-11-20. https://www.straitstimes.com/asia/se-asia/new-malaysian-complex-at-thai-border-gets-equipment-boost-to-stem-smuggling. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குபாங்_பாசு_மாவட்டம்&oldid=3931188" இலிருந்து மீள்விக்கப்பட்டது