பாடாங் தெராப் மாவட்டம்
பாடாங் தெராப் மாவட்டம் என்பது (மலாய்: Daerah Padang Terap; ஆங்கிலம்: Padang Terap District; சீனம்: 巴东得腊县) மலேசியா, கெடா மாநிலத்தில் அமைந்து உள்ள ஒரு மாவட்டம் ஆகும்.
பாடாங் தெராப் மாவட்டம் | |
---|---|
Padang Terap District | |
மலேசியா | |
கெடா மாநிலத்தில் பாடாங் தெராப் மாவட்டம் | |
ஆள்கூறுகள்: 6°15′N 100°40′E / 6.250°N 100.667°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | கெடா |
மாவட்டம் | பாடாங் தெராப் மாவட்டம் |
தொகுதி | கோலா நெராங் |
நகராட்சி | பாடாங் தெராப் மாவட்ட ஊராட்சி (Padang Terap District Council) |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,356.84 km2 (523.88 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 82,692 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 06xxx |
மலேசிய தொலைபேசி | +6-04 |
மலேசிய போக்குவரத்து பதிவெண் | K |
இந்த மாவட்டம் பாடாங் தெராப் மாவட்ட ஊராட்சி மன்றத்தால் (Padang Terap District Council) நிர்வகிக்கப் படுகிறது. கெடா மாநிலத்தின் மூன்றாவது பெரிய மாவட்டமாகும்.[1]
பொது
தொகுபாடாங் தெராப் மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் தாய்லாந்து நாடு எல்லையாக உள்ளது. மேற்குப் பகுதியில் சிக் மாவட்டம் (Sik District) மற்றும் பெண்டாங் மாவட்டம் (Pendang District) ஆகிய மாவட்டங்கள் எல்லைகளாக உள்ளன.
இந்த மாவட்டத்தின் நிர்வாக மையம் கோலா நெராங் (Kuala Nerang) என்று அழைக்கப் படுகிறது. இந்த மாவட்டத்தில் நாகா (Naka) மற்றும் பெடு (Pedu) ஆகியவை முக்கிய நகரங்கள் ஆகும்.
நிர்வாகப் பிரிவுகள்
தொகுபாடாங் தெராப் மாவட்டம் 11 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன:
- பத்தாங் துங்காங் கானான் (Batang Tunggang Kanan)
- பத்தாங் துங்காங் கீரி (Batang Tunggang Kiri)
- பெலிம்பிங் கானான் (Belimbing Kanan)
- கூரோங் ஈத்தாம் (Kurong Hitam)
- பாடாங் தெமாக் (Padang Temak)
- பாடாங் தெராப் கானான் (Padang Terap Kanan)
- பாடாங் தெராப் கீரி (Padang Terap Kiri)
- பெடு (Pedu)
- தெக்காய் (Tekai)
- தோலாக் (Tolak)
மேற்கோள்கள்
தொகுமேலும் காண்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Padang Terap தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.