கோலா நெராங்
கோலா நெராங் (மலாய்: Bandar Kuala Nerang; ஆங்கிலம்: Kuala Nerang; சீனம்: 瓜拉尼让) மலேசியா, கெடா, பாடாங் தெராப் மாவட்டம் (Padang Terap District), பாடாங் தெராப் மக்களவை தொகுதியில் (Padang Terap Federal Constituency) அமைந்துள்ள ஒரு கிராமப்புற நகரம்.[2]
கோலா நெராங் | |
---|---|
Kuala Nerang | |
கெடா | |
ஆள்கூறுகள்: 6°19′0″N 99°51′0″E / 6.31667°N 99.85000°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | கெடா |
நாடாளுமன்றம் | பாடாங் தெராப் |
மாவட்டம் | பாடாங் தெராப் |
நகரம் | கோலா நெராங் |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 7,802[1] |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 06300 |
மலேசிய தொலைபேசி எண் | +6-04-7xxxxxxx |
மலேசிய போக்குவரத்து பதிவெண் | K |
இந்த நகரம் பாடாங் தெராப் மாவட்டத்தின் (Padang Terap District) தலைநகரமாகவும்; நிர்வாக மையமாகவும் விளங்குகிறது.
பொது
தொகுகோலா நெராங் நகரத்தின் வரலாற்றை இரண்டு கதைகளின் அடிப்படையில் விளக்கலாம்; கோலா மற்றும் நெராங் எனும் சொற்களைக் கொண்ட வரலாற்றுக் கதைகள்.
மலாய் மொழியில் கோலா (Kuala) என்றால் ஆற்றுச்சந்தி. நெராங் (Nerang) என்றால் மரங்கள் மற்றும் காடுகளால் சூழப்பட்ட குடியிருப்புப் பகுதி அல்லது ஒளிமயமான பகுதி என்று பொருள்.
புக்கிட் பெராங்கின் வனப் பகுதி
தொகுகோலா நெராங் நகரத்திற்கு அருகில் பெடு ஆறு (Sungai Pedu) மற்றும் பாடாங் தெராப் ஆறு (Sungai Padang Terap) ஆகிய இரண்டு ஆறுகள் சந்திக்கின்றன. அதனால் இந்த நகரம், கோலா நெராங் எனும் பெயரைப் பெற்று இருக்கலாம் என்றும் அறியப் படுகிறது.
இந்த நகரத்திற்கு அருகில் புஞ்சாக் ஜானிங் பொழுதுபோக்கு வனம் (Puncak Janing Recreational Forest) உள்ளது. இந்த இடம் நீர்வீழ்ச்சியுடன் கூடிய பொழுதுபோக்கு காட்டு வளாகம் ஆகும். இந்தப் பொழுதுபோக்கு காட்டு வளாகம்; புக்கிட் பெராங்கின் வனப் பகுதிக்குள் (Bukit Perangin Forest Reserve) உள்ளது.[3][4]
வரலாறு
தொகுதுங்கு அப்துல் ரகுமான்
தொகு1932-ஆம் ஆண்டில், மலேசியாவின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் (Tunku Abdul Rahman Putra Al-Haj) அவர்கள் பாடாங் தெராப் மாவட்ட அதிகாரியாக (District Officer of Padang Terap) பணியாற்றியவர்.
கோலா நெராங் நகரத்தின் தாக்கத்தினால் தன்னுடைய மகனுடைய பெயரில் நெராங் எனும் சொல்லை இணைத்துக் கொண்டார். அந்த வகையில் தம்முடைய மகனுக்கு துங்கு அகமது நெராங் (Tunku Ahmad Nerang) என்றும் பெயர் வைத்தார்.
பாடாங் தெராப் மாவட்ட அதிகாரி
தொகுகோலா நெராங் மலேரியா நோயைப் பரப்பும் கொசுக்கள் நிரம்பியிய பகுதி. அதனால் பாடாங் தெராப் மாவட்ட அதிகாரி பதவியைப் பலரும் விரும்பவில்லை. துங்கு அவர்கள் மாவட்டத்தின் அதிகாரியாகப் பதவி ஏற்றதும், கோலா நெராங் நகரத்தின் எல்லையில் உள்ள சதுப்பு நிலங்களைச் சுத்தப்படுத்தும் வேலையில் கவனம் செலுத்தினார்.
சதுப்பு நிலங்களில் தேங்கி இருந்த சதுப்புநில நீரை வெளியேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டு வெற்ரியௌம் கண்டார். அதன் விளைவாக கோலா நெராங் பகுதியில் மலேரியா நோயின் தாக்கங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டன.
மேற்கோள்
தொகு- ↑ "The population development of Kuala Nerang". பார்க்கப்பட்ட நாள் 3 June 2023.
- ↑ "Kuala Nerang (GPS: 6.25677, 100.61004) is a small town in Kedah". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 3 June 2023.
- ↑ "Hutan Lipur Puncak Janing".
- ↑ "Taman Eko Rimba Puncak Janing".
மேலும் காண்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Padang Terap District தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Tunku Abdul Rahman Putra பரணிடப்பட்டது 2012-10-10 at the வந்தவழி இயந்திரம்
- Miller, Harry. Prince and premier: a biography of Tunku Abdul Rahman Putra Al-Haj, first prime minister of the Federation of Malaya (GG Harrap, 1959).
- "Tunku Abdul Rahman, 87, dead, First Prime Minister of Malaysia", New York Times, Obituaries, 12 July 1990.