ஜித்ரா (மலாய்: Jitra; ஆங்கிலம்: Jitra; சீனம்: 日得拉) என்பது மலேசியா, கெடா மாநிலத்தின் குபாங் பாசு மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும்.[1] இந்த நகரம் அலோர் ஸ்டார் நகருக்கும் சங்லூன் நகருக்கும் இடையில் அமைந்து உள்ளது.

ஜித்ரா
Jitra
கெடா
ஜித்ரா is located in மலேசியா
ஜித்ரா
      ஜித்ரா
ஆள்கூறுகள்: 6°16′N 100°25′E / 6.267°N 100.417°E / 6.267; 100.417
நாடு மலேசியா
மாநிலம் கெடா
தோற்றம்1900களில்
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்63,489
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு06000
மலேசியத் தொலைபேசி எண்+6044 (தரைவழித் தொடர்பு)

அலோர் ஸ்டார், சுங்கை பட்டாணி, கூலிம் நகரங்களுக்கு அடுத்த படியாக நான்காவது பெரிய நகரமாக ஜித்ரா நகரம்விளங்குகிறது.[2]

பொது தொகு

இங்கு வாழும் மக்களில் பெரும்பாலோர், மலேசியர்களாக இருந்தாலும் தாய்லாந்து மொழியில் பேசக் கூடியவர்கள். தாய்லாந்து எல்லைக்கு அருகில் வாழ்ந்து வருவதால் அவர்களால் தாய்லாந்து மொழியில் நன்கு உரையாட முடிகிறது.

இங்கு சயாமிய இனத்துடன் ஒன்றரக் கலந்துவிட்ட மலேசியர் பலரும் உள்ளனர். அந்த வகையில் ஒரு மலேசிய - தாய்லாந்து கலப்பினச் சமுதாயம் உருவாகி வருகிறது.

துரிதமான வளர்ச்சிகள் தொகு

அண்மைய காலங்களில் ஜித்ரா நகரம் மிகத் துரிதமான வளர்ச்சிகளைக் கண்டு வருகிறது. அதன் விளைவாக சுற்று வட்டாரங்களில் நிறைய குடியிருப்புப் பகுதிகள் தோன்றியுள்ளன. மலேசியாவின் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலைக்கு மிக அருகாமையில் ஜித்ரா நகரம் இருக்கிறது.

இங்கு இருந்து வடக்கு எல்லையில் இருக்கும் புக்கிட் காயூ ஈத்தாம், தெற்கில் இருக்கும் கோலாலம்பூர், மலாக்கா, ஜொகூர் பாரு, சிங்கப்பூர் நகரங்களுக்கு எளிதாகச் சென்று அடைய முடியும்.

வரலாறு தொகு

இரண்டாம் உலகப்போரின் தொடக்கக் காலத்தில் சப்பானியர்கள் மலாயாவைத் தாக்கிய போது, பிரித்தானியருக்கு இந்த ஜித்ரா நகரம் தான் மிகப்பெரிய தடுப்பு அரணாக விளங்கியது. சப்பானியர்களுக்கும் பிரித்தானியர்களுக்கும் இந்த இடத்தில் தான் மிகக் கொடூரமான மோதல்கள் நடைபெற்றன.[3]

1941 டிசம்பர் 11 இல் இருந்து 13 ஆம் தேதி வரை அந்தப் போர் நடைபெற்றது. சப்பானியர்கள் தாய்லாந்து வழியாக மலாயாவிற்குள் நுழையும் போது கங்கார், ஜித்ரா, அலோர் ஸ்டார், சங்லூன், நகரங்கள் மலாயா நிலப்பகுதியின் முகப்பு நகரங்களாக விளங்கின. அந்த நகரங்களைத் கடந்த பிறகுதான் சப்பானியர்கள் மலாயாவின் இதர பகுதிகளில் கால் வைக்க முடியும்.

பிரித்தானியர்கள் சரண் தொகு

மலேசிய வரலாற்றில் ஜித்ரா போர் (Battle of Jitra) என்று சொல்லப்படுகிறது. மலாயா தற்காப்புத் தரப்பில் பிரித்தானியப் படைக்கு உதவிக்கு இந்திய, பஞ்சாப் படைகளும் களம் இறங்கின. இருப்பினும் சப்பானியர்களின் தாக்குதல்களுக்கு எதிராகப் பிரித்தானியர்களால் சமாளிக்க முடியவில்லை. இறுதியில் சிங்கப்பூரில் பிரித்தானியர்கள் சரண் அடைந்தனர்.

மேற்கோள் தொகு

மேற்கோள் நூல்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜித்ரா&oldid=3729350" இலிருந்து மீள்விக்கப்பட்டது