கோலா கெடா
கோலா கெடா (மலாய்: Kuala Kedah; ஆங்கிலம்: Kuala Kedah; சீனம்: 瓜拉吉打) மலேசியா, கெடா மாநிலத்தில், கோத்தா ஸ்டார் மாவட்டத்தில் (Kota Setar District), கோலா கெடா மக்களவை தொகுதியில் (Kuala Kedah Federal Constituency) அமைந்துள்ள ஒரு நகரம்; ஒரு முக்கிம் ஆகும்.
கோலா கெடா | |
---|---|
Kuala Kedah | |
கெடா | |
ஆள்கூறுகள்: 6°06′N 100°18′E / 6.100°N 100.300°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | கெடா |
மாவட்டம் | கோத்தா ஸ்டார் |
நாடாளுமன்றம் | கோலா கெடா |
பரப்பளவு | |
• மொத்தம் | 32.52 km2 (12.56 sq mi) |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 40,797[1] |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 06600 |
மலேசியத் தொலைபேசி எண் | +6-04-4xxxx |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | K |
கெடா மாநிலத்தின் தலைநகரமான அலோர் ஸ்டார் மாநகரில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்தத் துறைமுக நகரம், அலோர் ஸ்டார் மாநகரத்திற்கான துறைமுகம் என்றும் அறியப் படுகிறது.
பொது
தொகுகோலா கெடா உள்ளூர் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான சுற்றுலா மையமாக விளங்குகிறது. அத்துடன் அலோர் ஸ்டார் வாழ் மக்களுக்கு ஒரே கடல் உணவு இடமாகவும் (Seafood Destination) திகழ்கிறது. இங்கு பல கடல் உணவு விடுதிகள் உள்ளன. சுற்றுலா பயணிகளுக்கு பிடித்த உணவுகளில் வறுவல் மீன் (Grilled Fish) மற்றும் கோலா கெடா லக்சா (Kuala Kedah Laksa) போன்றவை பிரபலமானவை.[2]
பொதுவாகவே, வரலாற்றுக் காலத்தில் இருந்தே கோலா கெடா ஒரு மீன்பிடி துறைமுகமாக விளங்கி வந்துள்ளது. இந்தத் துறைமுக நகரம், கெடா ஆற்றின் (Kedah River) முகப்பில் அமைந்துள்ளதால், லங்காவி (Langkawi) தீவிற்குச் செல்வதற்கான படகுத்துறை முனையமாகவும் செயல்படுகிறது. அத்துடன் கோலா கெடா கோட்டை (Kuala Kedah Fort) எனும் கோட்டையின் இருப்பிடமாகவும் பிரபலம் அடைந்துள்ளது.[3]
வரலாறு
தொகுகோலா கெடா துறைமுகத்தில் 1611-ஆம் ஆண்டில் ஒரு கோட்டை கட்டப்பட்டது. அதற்கு கோலா கெடா பழைய கோட்டை என்று பெயர். அதற்குப் பதிலாக 1782-ஆம் ஆண்டில் கோலா கெடா கோட்டை கட்டப்பட்டது. அப்போது அந்தக் கோட்டை, கோத்தா கோலா பகாங் கோட்டை (Kota Kuala Bahang) என்று அழைக்கப்பட்டது.
1611-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் போர்த்துகீசிய கடல்படை தளபதியான புர்த்தாடோ (Portuguese Admiral Furtado) என்பவர் கோலா கெடா நகரத்தைச் சூறையாடி அழித்தார். அத்துடன் கோட்டையையும் எரித்து விட்டார். இருப்பினும் கோட்டை மீண்டும் கட்டப்பட்டது[4]
அச்சே சுல்தானகம்
தொகு1619-ஆம் ஆண்டில் அச்சே சுல்தானகத்தின் (Aceh Sultanate) படையெடுப்பு. அப்போதைய அச்சே சுல்தான் இசுகந்தர் மூடா (Sultan Iskandar Muda of Aceh), கெடாவைக் கைப்பற்றினார். அந்தக் கட்டத்தில் கோலா கெடா கோட்டை இரண்டாவது முறையாக அழிக்கப்பட்டது. அத்துடன் சுல்தான் இசுகந்தர் மூடா, கோலா கெடாவில் இருந்த மிளகுத் தோட்டங்களையும் அழித்தார்.
அச்சே சுல்தானகம், கெடாவில் இருந்து பின்வாங்கிய பிறகு, கோலா கெடாவில் மற்றொரு கோட்டை செங்கல் சுவர்களால் கட்டப்பட்டது. அதன் பின்னர் 1654-ஆம் ஆண்டில் கெடா சுல்தானகத்துடன் (Sultanate of Kedah) வணிகம் செய்து கொள்வற்காக மற்றொரு கோட்டையும் டச்சுக்காரர்களால் கட்டப்பட்டது.[4]
கெடா சுல்தானகத்தில் வாரிசு சர்ச்சை
தொகு1710-ஆம் ஆண்டில், கெடாவில் இருந்த சில டச்சுக்காரர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து டச்சுக்காரர்கள் கோலா கெடா கோட்டையைக் கைப்பற்றினர். இருப்பினும் கொஞ்ச காலம் கழித்து டச்சுக்காரர்கள் அங்கிருந்து வெளியேறினர்.
அதன் பின்னர் கெடா சுல்தானகத்தில் ஒரு வாரிசு சர்ச்சை ஏற்பட்டது. கெடா சுல்தானகத்தின் சுல்தானாக இருந்த அகமத் தாஜுதீன் ஆலிம் சா I (Ahmad Tajuddin Halim Shah I) இறந்த பின்னர்; முகம்மது ஜீவா சைனல் அடிலின் II (Muhammad Jiwa Zainal Adilin II), என்பவர் பூகிஸ்மக்களின் (Bugis People) உதவியுடன், தன்னை கெடாவின் சுல்தானாக அறிவித்துக் கொண்டார்.[5]
கெடா சுல்தான் முகம்மது ஜீவா சைனல் அடிலின்
தொகு1770-ஆம் ஆண்டில் மற்றோர் உள்நாட்டுப் போர் வெடித்தது. பூகிஸ் படையினர் கோலா கெடாவைத் தாக்கினர். 1724-ஆம் ஆண்டில் பூகிஸ் தலைவரான ராஜா பிசாபில்லா (Raja Haji Fisabilillah), தம் முன்னோர்கள் செய்த உதவிக்கு சுல்தான் முகம்மது ஜீவா சைனல் அடிலினிடம் இருந்து பணம் கேட்டார். கெடா சுல்தான் அந்தக் கோரிக்கையை நிராகரித்தார்.[4]
அதனால் ராஜா பிசாபில்லா, கோலா கெடாவின் மீது படையெடுத்து கோலா கெடா கோட்டையைக் கைப்பற்றினார். பின்னர் ராஜா பிசாபில்லா மேலே அலோர் ஸ்டார் வரை சென்று அந்த நகரத்தையும் சூறையாடினார்.[4]
கோலா கெடா காட்சியகம்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Kuala Kedah (City, Malaysia) - Population Statistics, Charts, Map and Location". www.citypopulation.de. பார்க்கப்பட்ட நாள் 2 June 2023.
- ↑ "Kuala Kedah is very popular with local tourists as the only Seafood Destination. There are several seafood restaurants here. Favorite dishes include Grilled Fish and Kuala Kedah Laksa". Penang Travel Tips (in மலாய்). பார்க்கப்பட்ட நாள் 2 June 2023.
- ↑ Richmond, Simon (2007). Malaysia, Singapore and Brunei. Lonely Planet. p. 203. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-74059-708-1.
kuala kedah fort.
- ↑ 4.0 4.1 4.2 4.3 Augustine, James Frederick (1992). "Chapter 18". In Bygone Kedah. State Museum Kedah Darul Aman. p. 40. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789839969849.
- ↑ "Raja-Raja Melayu Paling Lama Memerintah Dalam Sejarah - The Patriots". 25 October 2017. பார்க்கப்பட்ட நாள் 3 June 2023.
மேலும் காண்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Kuala Kedah தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.