பூகிஸ் (Bugis) என்பவர்கள் ஆஸ்திரோனேசிய இனத்தைச் சார்ந்தவர்கள். இவர்கள் இந்தோனேசியாவின் சுலாவாசித் தீவில் காணப்படுகினறார்கள். இவர்களின் மூதாதையர்கள் கி.மு.2500 ஆண்டுகளுக்கு முன்னால் தென் சீனாவில் இருந்து குடியேறியவர்கள்.[1] 1605ஆம் ஆண்டில் ஆன்மவாதத்தில் இருந்து இஸ்லாமியத்திற்கு மதம் மாறினார்கள்.[2]

பூகிஸ் பெண்களின் பாரம்பரிய உடைகள்

பூகிஸ்காரர்கள் சுலாவாசியின் மாக்காசார், பாரேபாரே துறைமுகப் பட்டணங்களில் மிகுதியாக வாழ்ந்தாலும், பெரும்பலோர் உள்நிலப் பகுதிகளில் நெல் விவசாயம் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். மலேசியாவின் ஜொகூர் சுல்தானகத்தில் பூகிஸ்காரர்களின் தாக்கம் அதிகமாக உள்ளது.[3] இவர்களில் சிலர் வட ஆஸ்திரேலியாவிலும் வாழ்கின்றனர்.

சுலாவாசியில் வாழும் பூகிஸ்காரர்கள் பெரும்பாலும் நெல் விவசாயம், சிறு வர்த்தகங்கள், மீனவத்தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். விவசாயம் செய்வதில் பூகிஸ்காரப் பெண்கள் திறமைசாலிகளாக விளங்குகின்றனர். இவர்கள் பட்டுத் துணிகள் நெய்வதிலும் கெட்டிக்காரர்கள்.

இவர்களின் பெரும்பாலான திருமணங்கள் பெற்றோர் பார்த்து நடத்துபவையாக உள்ளன. திருமணத்திற்குப் பின் மாப்பிள்ளை, பெண் வீட்டாருடன் சில ஆண்டுகளுக்கு தங்கி வாழ வேண்டும். பூகிஸ்காரர்களிடையே விவாகரத்து என்பது மிகப் பரவலாக இருக்கின்றது.

மேற்கோள்கள் தொகு

  1. Susan G. Keates, Juliette M. Pasveer, Quaternary Research in Indonesia. Taylor & Francis, 2004. ISBN 9058096742
  2. Keat Gin Ooi, Southeast Asia: A Historical Encyclopedia, From Angkor Wat to East Timor. ABC-CLIO, 2004. ISBN 1576077705
  3. ""History", Embassy of Malaysia, Seoul" இம் மூலத்தில் இருந்து 2008-04-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080430182411/http://www.malaysia.or.kr/frame2.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூகிஸ்&oldid=3564511" இருந்து மீள்விக்கப்பட்டது