கிழக்கு கலிமந்தான்

இந்தோனேசிய மாகாணம்

கிழக்கு கலிமந்தான் (ஆங்கிலம்: East Kalimantan; மலாய்: Kalimantan Timur; இந்தோனேசியம்: Provinsi Kalimantan Timur; சீனம்: 东加里曼丹) என்பது போர்னியோ தீவின் இந்தோனேசியப் பகுதியான கலிமந்தானில் அமைந்துள்ள ஒரு மாநிலமாகும்.

கிழக்கு கலிமந்தான்
மாநிலம்
East Kalimantan
இந்தோனேசியா
கிழக்கு கலிமந்தான் மாநிலம்-இன் கொடி
கொடி
கிழக்கு கலிமந்தான் மாநிலம்-இன் சின்னம்
சின்னம்
அடைபெயர்(கள்):
ஏதம் கண்டம்
Benua Etam
Place of origin
குறிக்கோளுரை:
روحوي رحايو
Ruhui Rahayu
Perfect harmony by the blessings of God
அமைவிடம்: கிழக்கு கலிமந்தான்  (கருஞ்சிவப்பு) [Legend] (சொடுக்கி பார்க்கவும்)
அமைவிடம்: கிழக்கு கலிமந்தான்  (கருஞ்சிவப்பு)

[Legend]

(சொடுக்கி பார்க்கவும்)
OpenStreetMap
Map
ஆள்கூறுகள்: 1°3′N 116°19′E / 1.050°N 116.317°E / 1.050; 116.317
தலைநகரம்சமரிந்தா
(Samarinda)
அரசு
 • நிர்வாகம்கிழக்கு கலிமந்தான் மாநில அரசு
 • ஆளுநர்இசுரான் நூர்
(Isran Noor)
பரப்பளவு
 • மொத்தம்1,27,346.92 km2 (49,168.92 sq mi)
 • பரப்பளவு தரவரிசை4-ஆவது
மக்கள்தொகை
 (2021)[1]
 • மொத்தம்38,08,235
 • அடர்த்தி30/km2 (77/sq mi)
 2012
மக்கள் தொகை
நேர வலயம்இந்தோனேசிய நேரம் (UTC+8)
HDI 0.766 (High)
HDIஇந்தோனேசியாவில் 3-ஆவது இடம் (2019)
ஐ.எசு.ஓ 3166ID-KB
இணையதளம்kaltimprov.go.id

2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சுமார் 3.03 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டிருந்தது; 2015-ஆம் ஆண்டில் மக்கள் தொகை 3.42 மில்லியன்; மற்றும் 2020 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 3.766 மில்லியன்.[2] 2021-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அதிகாரப்பூர்வ மதிப்பீடு 3,808,235 ஆகும்.[1] இதன் தலைநகரம் சமரிந்தா.

பொது

தொகு

கிழக்கு கலிமந்தானின் மொத்த பரப்பளவு 127,346.92 சதுர கிலோமீட்டர்கள் (49,168.92 sq mi). இந்தோனேசியாவில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் இரண்டாவது மாநிலமாகும். இந்த மாநிலத்தின் முன்னாள் வடக்குப் பகுதி அக்டோபர் 2012-இல் பிரிக்கப்பட்டு தற்போது வடக்கு கலிமந்தான் மாநிலமாக உள்ளது.

கிழக்கு கலிமந்தானின் பெரும்பகுதி கிழக்கே, மேற்கு சுலவேசி மற்றும் மத்திய சுலவேசியுடன் கடல் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது; அதன் மங்கலிகாட் முனை, மாக்காசார் நீரிணையை செலிப்ஸ் கடலில் இருந்து பிரிக்கிறது.[3][4]

இந்த மாநிலம் மேற்கு கலிமந்தான்; மத்திய கலிமந்தான் ஆகிய மாநிலங்களுடன் நில எல்லையை மேற்கில் பகிர்ந்து கொள்கிறது. அதன் தெற்கில், தெற்கு கலிமந்தான் எல்லையாக உள்ளது. இந்த மாநிலம் பிரிக்கப்படுவதற்கு முன்பு மலேசியாவின் சபா மாநிலத்துடன் எல்லையைக் கொண்டு இருந்தது. ஆனால் இப்போது சரவாக் மாநிலத்தில் மட்டுமே எல்லையைக் கொண்டு உள்ளது.

டிசம்பர் 2012-இல், தற்போதுள்ள மேற்கு கூத்தாய் துணை மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அந்த வகையில் கிழக்கு கலிமந்தானில் இப்போது ஏழு துணை மாநிலங்கள்; மூன்று பெரும் நகரங்கள் உள்ளன. கிழக்கு கலிமந்தானின் தற்போதைய ஆளுநராக இசுரான் நூர் என்பவரும்; துணை ஆளுநராக அடி முல்யாடி என்பவரும் உள்ளனர்.[5]

புதிய தேசிய தலைநகர்

தொகு

கூத்தாய் கீர்த்தநகரா (Kutai Kartanegara) மற்றும் பெனாஜாம் நார்த் பாசர் (Penajam North Paser) துணைமாநிலங்களின் எல்லையில் கட்டப்படும் இந்தோனேசியாவின் எதிர்கால தலைநகரை இந்த மாநிலம்தா வழி நடத்தும். எதிர்கால தலைநகருக்கு நுசந்தாரா (Nusantara) என்று பெயரிடப்பட உள்ளது.[6]

புதிய தேசிய தலைநகரின் கட்டுமானம் 2020-இல் தொடங்கியது. 2024-இல் முடிவடையும் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது. கட்டுமானத்திற்கு இந்தோனேசிய அரசாங்கம் 100.46 டிரில்லியன் ரூப்பியா (149.81 Trillion Rupiah) (7 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) மதிப்புள்ள நிதியை ஒதுக்கியது.

முன்னதாக, தேசிய திட்டமிடல் மேம்பாட்டு ஆணையம் (National Planning Development Authority), தலைநகரை அதன் தற்போதைய இடமான ஜகார்த்தாவில் இருந்து கிழக்கு கலிமந்தான் மாநிலத்திற்கு நகர்த்துவதற்குத் தேவையான மொத்தத் தொகை 486 டிரில்லியன் ரூப்பியா (486 Trillion Rupiah) என்றும்; இதில் 265.2 டிரில்லியன் ரூப்பியா (265.2 Trillion Rupiah) பொது-தனியார் கூட்டு (Public-Private Partnership) மூலம் திரட்டப்படும் என்றும் கூறியது.

வரலாறு

தொகு
 
40,000 ஆண்டுகள் பழைமையான லுபாங் செரிஜி சாலே குகையில் கண்டுபிடிக்கப்பட்ட பழைமையான உருவக ஓவியம்.

கிழக்கு கலிமந்தான் மாநிலம், ஒரு காலத்தில் பெரும்பாலும் வெப்பமண்டல மழைக் காடுகளால் மூடப்பட்டு இருந்தது. கிழக்கு கூத்தாய் மாவட்டத்தில் (East Kutai Regency) உள்ள சங்குலிராங் - மங்கலிகாட் (Sangkulirang-Mangkalihat Karst) மலைச்சரிவில் லுபாங் செரிஜி சாலே (Lubang Jeriji Saléh) என்ற வரலாற்றுக்கு முந்திய காலத்துச் சுண்ணாம்புக் குகை கண்டுபிடிக்கப்பட்டது. இது உலகின் பழமையான உருவகக் கலைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.[7]

குகை ஓவியங்கள் முதன்முதலில் 1994-ஆம் ஆண்டில், கலிமந்த்ரோப் (Kalimanthrope) எனும் இடத்தில் பிரெஞ்சு ஆய்வாளர் என்றி பேச் (Henri Fage); பிரெஞ்சு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஜீன்-மைக்கேல் சாசின் (Jean-Michel Chazine), ஆகிய இருவரால் கண்டுபிடிக்கப்பட்டன.[8]

உலகின் மிகப் பழமையான உருவகக்கலை ஓவியம்

தொகு

2018-ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியா, கிரிப்பித் பல்கலைக்கழகத்தைச் (Griffith University) சேர்ந்த மாக்சிம் ஆபர்ட் (Maxime Aubert); மற்றும் பாண்டுங் தொழில்நுட்பக் கழகத்தை (Bandung Institute of Technology) சேர்ந்த பிண்டி செத்தியவான் (Pindi Setiawan); தலைமையிலான ஆய்வாளர்கள் குழுவினர் அந்தக் குகையை ஆராய்ந்து, நேச்சர் இதழில் (Nature Journal) ஓர் அறிக்கையை வெளியிட்டனர். அந்த ஓவியங்களை உலகின் மிகப் பழமையான உருவகக் கலை என்று அடையாளப் படுத்தினர்.[9][10]

இந்தக் குழுவினர் முன்பு அண்டை தீவான சுலவேசியில் உள்ள குகை ஓவியங்களை ஆய்வு செய்தனர். ஓவியங்களைத் தேதியிடுவதற்காக, சுண்ணாம்பு படிவுகளில் அறிவியல் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தியது.[11][12][13]

கூத்தாய் மர்தாதிபுரா இராச்சியம்

தொகு
 
4-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கூத்தாய் மர்தாதிபுரா மன்னன் முல்லைவர்மனின் கல்வெட்டு.

இந்தோனேசியாவின் முதல் மற்றும் பழமையான இந்து இராச்சியம், 4-ஆம் நூற்றாண்டில், கிழக்கு கலிமந்தானில் நிறுவப்பட்ட கூத்தாய் மர்தாதிபுரா இராச்சியம் ஆகும். இந்த இராச்சியம் இந்தோனேசியாவின் பல இராச்சியங்களுக்கும் தாயகமாக உள்ளது.

கலிமந்தான் இராச்சியம்

தொகு

அந்தக் காலக்கட்டத்தில் கலிமந்தான் இராச்சியத்தை ஓர் இந்து மன்னர் ஆட்சி செய்ததாகவும்; அந்த அரசரின் பெயர் மகாராஜா கலிமாந்தகன் (ஆங்கிலம்: Maharaja Klainbantangan; சீனம்: 麻哈剌吐葛 剌麻丁) என்று சீனப் பதிவுகள குறிப்பிடுகின்றன.

கலிமந்தான் இராச்சியம், பிலிப்பீன்சு இராச்சியத்திற்கு (Philippine Kingdom) அடிமையாக இருந்த ஒரு இராச்சியம் என்றும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மகாராஜா கலிமாந்தகனின் பட்டப் பெயரான கலிமாந்தகன் எனும் பெயரில் இருந்து கலிமந்தான் இராச்சியத்திற்கு (Kingdom of Kalimantan) பெயரிடப்பட்டதாக சீனப் பதிவுகள குறிப்பிடுகின்றன.[14]

வடக்கு கலிமந்தான் மாநிலம், பின்னர் புலுங்கான் சுல்தானகத்தின் (Sultanate of Bulungan) ஒரு பிரதேசமாக மாறியது. இந்த புலுங்கான் சுல்தானகம் கடலோரத்தில் வாழ்ந்த காயான் (Kayan) குழுவின் தலைவராக இருந்த உமாப்பன் (Uma Apan) என்பவரால் நிறுவப்பட்டது.

மேற்கோள்

தொகு
  1. 1.0 1.1 Badan Pusat Statistik, Jakarta, 2022.
  2. Badan Pusat Statistik, Jakarta, 2021.
  3. Badan Pusat Statistik. "Hasil Sensus Penduduk 2010 Data Agregat Per Provinsi" (PDF). Badan Pusat Statistik. Archived from the original (PDF) on 2010-11-13.
  4. revised area following the removal of Tarakan city and four regencies to form the new North Kalimantan province in 2012, and subsequently amended by BPS.
  5. "Organisasi". Kaltimprov.go.id. Archived from the original on 15 January 2013. பார்க்கப்பட்ட நாள் 13 January 2013.
  6. "Indonesia minister announces name of new national capital in eastern Kalimantan". Channel News Asia.
  7. Aubert, M.; Setiawan, P.; Oktaviana, A. A.; Brumm, A.; Sulistyarto, P. H.; Saptomo, E. W.; Istiawan, B.; Ma'rifat, T. A. et al. (7 November 2018). "Palaeolithic cave art in Borneo". Nature (Springer Nature America, Inc) 564 (7735): 254–257. doi:10.1038/s41586-018-0679-9. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-0836. பப்மெட்:30405242. Bibcode: 2018Natur.564..254A. 
  8. Delbecq, Denis (7 November 2018). "A Bornéo, des fresques parmi les plus anciennes du monde ont été découvertes" (in fr). Le Temps. https://www.letemps.ch/sciences/borneo-fresques-parmi-plus-anciennes-monde-ont-decouvertes. 
  9. Maxime Aubert (Nov 2018). "Palaeolithic cave art in Borneo". Nature 564 (7735): 254–257. doi:10.1038/s41586-018-0679-9. பப்மெட்:30405242. Bibcode: 2018Natur.564..254A. 
  10. Gabbatiss, Josh (8 November 2018). "Oldest ever figurative painting discovered in Borneo cave". The Independent. https://www.independent.co.uk/news/science/archaeology/oldest-figurative-painting-borneo-cave-art-cows-banteng-prehistoric-a8622256.html. 
  11. Carl Zimmer (7 November 2018). "In Cave in Borneo Jungle, Scientists Find Oldest Figurative Painting in the World – A cave drawing in Borneo is at least 40,000 years old, raising intriguing questions about creativity in ancient societies.". The New York Times. https://www.nytimes.com/2018/11/07/science/oldest-cave-art-borneo.html. 
  12. Aubert, M. (7 November 2018). "Palaeolithic cave art in Borneo". Nature (journal) 564 (7735): 254–257. doi:10.1038/s41586-018-0679-9. பப்மெட்:30405242. Bibcode: 2018Natur.564..254A. https://www.nature.com/articles/s41586-018-0679-9. பார்த்த நாள்: 8 November 2018. 
  13. Weule, Genelle (8 November 2018). "Scientists say this is the world's oldest known animal rock art" (in en-AU). ABC News. https://www.abc.net.au/news/science/2018-11-08/worlds-oldest-known-cave-painting-of-an-animal-in-borneo/10466076. 
  14. Reading Song-Ming Records on the Pre-colonial History of the Philippines By Wang Zhenping Page 258.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிழக்கு_கலிமந்தான்&oldid=3637491" இலிருந்து மீள்விக்கப்பட்டது