இந்தோனேசிய நேரம்
இந்தோனேசிய நேரம் அல்லது இந்தோனேசிய சீர் நேரம் (ஆங்கில மொழி: Indonesia Standard Time), (மலாய்: Waktu Piawai Indonesia), (இந்தோனேசிய மொழி: Zona waktu Indonesia) என்பது இந்தோனேசியாவில் கடைப்பிடிக்கப்படும் ஒரு நேர முறைமையாகும். இந்த நேர வலயம், கிரீன்விச் துள்ளிய நேரத்திற்கு (ஆங்கில மொழி: Greenwich Mean Time - GMT)) +06:00 மணி நேரம் முன்னதாக அமைகின்றது.
இந்தோனேசிய தீவுக்கூட்டம் புவியியல் ரீதியாக; ஆச்சே (Aceh) (UTC+06:00) நிலப்பகுதியில் தொடங்கி பப்புவா நியூ கினி (Papua) (UTC+09:00) நிலப்பகுதிகள் வரை; நான்கு நேர மண்டலங்களைக் கொண்டுள்ளது. இருப்பினும், இந்தோனேசிய அரசாங்கம் அதன் நாட்டில் மூன்று நேர மண்டலங்களை மட்டுமே அங்கீகரிக்கின்றது.[1]
பொது
தொகுஇந்தோனேசிய அரசாங்கம் அதன் நாட்டில் அங்கீகரித்த மூன்று நேர மண்டலங்கள்:
- மேற்கு இந்தோனேசியா நேரம் (Western Indonesia Time - WIB) — ஏழு மணி நேரம் முன்னால் (ஒ.ச.நே + 07:00);
- மத்திய இந்தோனேசியா நேரம் (Central Indonesia Time - WITA) — எட்டு மணி நேரம் முன்னால் (ஒ.ச.நே + 08:00);
- கிழக்கு இந்தோனேசியா நேரம் (Eastern Indonesia Time - WIT) — ஒன்பது மணி நேரம் முன்னால் (ஒ.ச.நே + 09:00).
வரலாறு
தொகுஇந்தோனேசியாவின் மேற்கு மற்றும் மத்திய நேர மண்டலங்களுக்கு இடையிலான எல்லை; மேற்கு கலிமந்தான் (West Kalimantan) மற்றும் மத்திய கலிமந்தான் (Central Kalimantan) மாநில எல்லைகளின் வழியாக ஜாவா மற்றும் பாலிக்கு இடையே வடக்கே செல்லும் ஒரு கோடாக நிறுவப்பட்டது.[2][3]
மத்திய மற்றும் கிழக்கு நேர மண்டலங்களுக்கு இடையிலான எல்லை இந்தோனேசியாவின் கிழக்குத் திமோர் (Timor) முனையில் இருந்து சுலவேசியின் (Sulawesi) கிழக்கு முனை வரை வடக்கே செல்கிறது.[4]
பகலொளி சேமிப்பு நேரம் (Daylight Saving Time - DST) இந்தோனேசியாவில் எங்கும் பயன்பாட்டில் இல்லை.
மேற்கோள்
தொகு- ↑ "Indonesia Pernah Ubah 9 Kali Zona Waktu". Viva.co.id. 28 May 2012. பார்க்கப்பட்ட நாள் 9 April 2016.
- ↑ "Garuda Indonesian Airways". TimetableImages.com. 1963. பார்க்கப்பட்ட நாள் 4 March 2019.
- ↑ "Eggert/Tz". GitHub. 10 February 2022.
- ↑ "Time Zone in Jayapura, Papua, Indonesia". timeanddate.com. பார்க்கப்பட்ட நாள் 9 April 2016.
வெளி இணைப்புகள்
தொகு- Indonesian Standard Time பரணிடப்பட்டது 2016-01-21 at the வந்தவழி இயந்திரம்
- [1]