சுங்கை பட்டாணி தொடருந்து நிலையம்
சுங்கை பட்டாணி தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Sungai Petani Railway Station மலாய்: Stesen Keretapi Sungai Petani); சீனம்: 双溪大年火车站) என்பது தீபகற்ப மலேசியா, கெடா மாநிலத்தின் தலைநகரமான சுங்கை பட்டாணி நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் சுங்கை பட்டாணி மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.[1]
சுங்கை பட்டாணி Sungai Petani | ||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுங்கை பட்டாணி தொடருந்து நிலையம் | ||||||||||||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||||||||||||
அமைவிடம் | சுங்கை பட்டாணி, கெடா | |||||||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 5°38′35″N 100°29′24″E / 5.6431°N 100.4899°E | |||||||||||||||||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து | |||||||||||||||||||||||||
தடங்கள் | 1 மலாயா மேற்கு கடற்கரை ETS கேடிஎம் இடிஎஸ் | |||||||||||||||||||||||||
நடைமேடை | 2 நடை மேடைகள் | |||||||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | |||||||||||||||||||||||||
இணைப்புக்கள் | உள்ளூர் போக்குவரத்து | |||||||||||||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||||||||||||
தரிப்பிடம் | இலவசம் | |||||||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | |||||||||||||||||||||||||
வரலாறு | ||||||||||||||||||||||||||
திறக்கப்பட்டது | 1915 | |||||||||||||||||||||||||
மறுநிர்மாணம் | 2013 | |||||||||||||||||||||||||
மின்சாரமயம் | 2015 | |||||||||||||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||
|
மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் எனும் தீபகற்ப மலேசிய மேற்கு கரை வழித்தடத்தில் (KTM Wast Coast Railway Line), கெடா மாநிலத்தின் சுங்கை பட்டாணி நகரில் இந்த நிலையம் உள்ளது.
பொது
தொகுஈப்போ - பாடாங் பெசார் மின்மயமாக்கல்; மற்றும் இரட்டை தண்டவாளத் திட்டத்தின் ஒரு பகுதியாக 2013-ஆம் ஆண்டில், சுங்கை பட்டாணி நகரில் புதிய தொடருந்து நிலையம் கட்டப்பட்டது. 10 சூன் 2014-இல் செயல்படத் தொடங்கிய இந்த நிலையம், கேடிஎம் இடிஎஸ்; கேடிஎம் கொமுட்டர் நிறுவனங்களின் தொடருந்துகளால் சேவை செய்யப் படுகிறது. இதற்கு முன்பு பன்னாட்டு விரைவு தொடருந்து சேவை (International Express) பயன்பாட்டில் இருந்தது.
சுங்கை பட்டாணி
தொகுசுங்கை பட்டாணி (Sungai Petani) நகரம்; கெடா, கோலா மூடா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். கெடா மாநிலத்தில் மிகப் பெரிய நகரமாகக் கருதப்படும் சுங்கை பட்டாணி நகரம், மாநிலத்தின் தலைநகரமான அலோர் ஸ்டார் (Alor Setar) மாநகரத்தில் இருந்து 55 கி.மீ. தொலைவில் உள்ளது.
மலேசிய மொழியில் ’சுங்கை’ (Sungai) என்றால் ஆறு; ’பட்டாணி’ (Petani) என்றால் விவசாயி; சுங்கை பட்டாணி என்றால் விவசாயின் ஆறு என்று பொருள் படும். 1912-ஆம் ஆண்டிற்கு முன்னால் சுங்கை பட்டாணி எனும் ஒரு நகரம் இருந்ததாக வரலாற்றில் எந்தத் தடயமும் இல்லை.
கோல மூடா மாவட்டம்
தொகுசுங்கை பட்டாணி நகரம் ஒரு சின்னக் குடியேற்றப் பகுதியாய் மட்டுமே இருந்தது. மலாய்க்காரர்கள் ‘பெங்கூலி இம்’ எனும் கிராமத்தில் வாழ்ந்து வந்தனர். சீனர்கள் பெக்கான் லாமா எனும் பகுதியில் வாழ்ந்து வந்தனர். இந்தியர்கள் சுங்கை பட்டாணியின் சுற்று வட்டாரத் தோட்டங்களில் வாழ்ந்து வந்தனர்.
அப்போது கோத்தா கோல மூடா எனும் நகரமே கோல மூடா மாவட்டத்தின் தலையாய பட்டணமாக இருந்து வந்தது. அந்தக் காலகட்டத்தில் வில்லியம் ஜார்ஜ் மெக்சுவல் என்பவர் கெடா மாநிலத்தின் பிரித்தானிய ஆலோசகராக இருந்தார். [2]
சுங்கை பட்டாணி உருவாக்கம்
தொகுஅலோர் ஸ்டார் நகரத்திற்கும் கூலிம் நகரத்திற்கும் இடையே ஒரு புதிய நகரம் உருவாக்கப் பட வேண்டும் என்று மெக்சுவல் ஆசைப் பட்டார். அந்தச் சமயத்தில் கோலாலம்பூருக்கும் அலோர் ஸ்டார் நகருக்கும் இடையே புகைவண்டிச் சேவை தொடங்கப் பட்டது. புகைவண்டிகள் சுங்கை பட்டாணியில் நின்று சரக்குகளை ஏற்றிச் சென்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "The KTM Sungai Petani railway station is located in the state of Kedah in Malaysia, along the North - South, West Coast Railway Line that runs from Singapore / Johor Bahru, the capital Kuala Lumpur and the northern most station on the border with Thailand at Padang Besar. Sg. Petani is a major stop on this line and is served by regular Komuter services for short journeys, as well as the fast long distance ETS services". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 18 July 2023.
- ↑ [Malaysia, Singapore and Brunei By Charles De Ledesma, Mark Lewis, Pauline Savage, Rough Guides (Firm) Published by Rough Guides, 2003; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-84353-094-5, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84353-094-7]