தாசேக் குளுகோர் தொடருந்து நிலையம்

தாசேக் குளுகோர் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Tasek Gelugor Railway Station மலாய்: Stesen Keretapi Tasek Gelugor); சீனம்: 打色牛汝莪火车站) என்பது தீபகற்ப மலேசியா, பினாங்கு மாநிலத்தில் தாசேக் குளுகோர் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் தாசேக் குளுகோர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.[1]


தாசேக் குளுகோர் தொடருந்து நிலையம்
Tasek Gelugor Railway Station
தாசேக் குளுகோர் தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்தாசேக் குளுகோர், பினாங்கு
ஆள்கூறுகள்5°29′00″N 100°30′00″E / 5.483333°N 100.5°E / 5.483333; 100.5
உரிமம் மலாயா தொடருந்து நிறுவனம்
தடங்கள் 1  பாடாங் ரெங்காஸ் வழித்தடம்
ETS கேடிஎம் இடிஎஸ்
நடைமேடை2 நடை மேடைகள்
இருப்புப் பாதைகள்2
இணைப்புக்கள்உள்ளூர் போக்குவரத்து
கட்டமைப்பு
தரிப்பிடம்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்Handicapped/disabled access
வரலாறு
திறக்கப்பட்டது1915
மறுநிர்மாணம்2013
மின்சாரமயம்2015
சேவைகள்
முந்தைய நிலையம்   தாசேக் குளுகோர்   அடுத்த நிலையம்
சுங்கை பட்டாணி
    புக்கிட் மெர்தாஜாம்
சுங்கை பட்டாணி
 
  Platinum  
  பாரிட் புந்தார்
சுங்கை பட்டாணி
 
  Gold  
  பாரிட் புந்தார்
அமைவிடம்
Map
தாசேக் குளுகோர் தொடருந்து நிலையம்

மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் எனும் தீபகற்ப மலேசிய மேற்கு கரை வழித்தடத்தில் (KTM Wast Coast Railway Line), பினாங்கு மாநிலத்தின் தாசேக் குளுகோர் நகரில் இந்த நிலையம் உள்ளது.

பொது தொகு

ஈப்போ - பாடாங் பெசார் மின்மயமாக்கல்; மற்றும் இரட்டை தண்டவாளத் திட்டத்தின் ஒரு பகுதியாக 2013-ஆம் ஆண்டில், தாசேக் குளுகோர் நகரில் புதிய தொடருந்து நிலையம் கட்டப்பட்டது. 10 சூன் 2014-இல் செயல்படத் தொடங்கிய இந்த நிலையம், கேடிஎம் இடிஎஸ்; கேடிஎம் கொமுட்டர் நிறுவனங்களின் தொடருந்துகளால் சேவை செய்யப் படுகிறது. இதற்கு முன்பு பன்னாட்டு விரைவு தொடருந்து சேவை (International Express) பயன்பாட்டில் இருந்தது.

தாசேக் குளுகோர் தொகு

தாசேக் குளுகோர் (Tasek Gelugor) நகரம், பினாங்கு, வட செபராங் பிறை மாவட்டத்தில்; அமைந்துள்ள நகரம். இந்த நகரம் வடக்கு-தெற்கு விரைவுச்சாலைக்கு அருகில் உள்ளது. பாடாங் செராய் நகருடன் இணைக்கும் சாலைகளும் உள்ளன

பினாங்கு, ஜார்ஜ் டவுன் நகரில் இருந்து 41 கி.மீ. தொலைவில்; பட்டர்வொர்த் நகரில் இருந்து சுங்கை பட்டாணிக்குச் செல்லும் வழியியில் அமைந்துள்ளது. தவிர கெடா மாநிலத்தின் எல்லையில் அமைந்து உள்ளது.[2]

தாசேக் குளுகோர் ஏரி தொகு

தாசேக் குளுகோர் நகரத்திற்கு அருகில் இருந்த ஆறு அடிக்கடி நிரம்பியதால் ஓர் ஏரி (Tasik Gelugor) உருவாக்கப்பட்டது. அந்த ஏரியின் நினைவாக இந்த இடம் பெயரிடப்பட்டதாகக் கூறப் படுகிறது.[3]

இந்த நகருக்கு அருகாமையில் உள்ள நகரங்கள் கெப்பாலா பத்தாஸ், பெனாகா, லூனாஸ் மற்றும் புக்கிட் மெர்தாஜாம். இந்த நகர்ப் பகுதியில் இருக்கும் தாசேக் குளுகோர் தொடருந்து நிலையம், இங்கு வசிக்கும் மக்களுக்கு, தெற்கு நோக்கி பயணிக்க மற்றொரு மாற்று வழியாக விளங்குகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "The KTM Tasek Gelugor railway station is located in the state of Penang in Malaysia, along the North - South, West Coast Railway Line that runs from Singapore / Johor Bahru, the capital Kuala Lumpur and the northern most station on the border with Thailand at Padang Besar. Tasek Gelugor is a major stop on this line and is served by regular Komuter services for short journeys, as well as the fast long distance ETS services". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 18 July 2023.
  2. "Gazetir Negeri Pulau Pinang Pulau Muntiara". mygeoname.mygeoportal.gov.my. Jawatankuasa Nama Geografi Kebangsaan Malaysia.
  3. "Tasik Gelugor, the place is said to have been named after a lake that was created from the overflooding of the nearby river. Gelugor, or asam gelugor, is a type of tree with edible fruits known scientifically as Garcinia atroviridis. The township of Tasek Gelugor is located roughly to the south-east of Kepala Batas". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 9 August 2022.

மேலும் காண்க தொகு

வெளி இணைப்புகள் தொகு