மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம்

மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம், (மலாய்: Laluan Kereta Api Pantai Barat; ஆங்கிலம்: KTM West Coast Railway Line (WCRL); சீனம்: 西海岸鐵路線); என்பது மலேசியா பெர்லிஸ் மாநிலத்தில்; மலேசியா-தாய்லாந்து எல்லைக்கு அருகில் உள்ள பாடாங் பெசார் தொடருந்து நிலையத்திற்கும் சிங்கப்பூர், உட்லேண்ட்ஸ் தொடருந்து சோதனைச் சாவடிக்கும் இடையிலான தொடருந்து வழித்தடம் ஆகும்.


மலாயா மேற்கு கடற்கரை
KTM West Coast Railway Line
தாப்பா - கமபார் தொடருந்து
வழித்தடத்தில் ஒரு பகுதி
கண்ணோட்டம்
நிலைஇயங்குகிறது
உரிமையாளர்மலாயா தொடருந்து நிறுவனம்
வட்டாரம்தீபகற்ப மலேசியா
முனையங்கள்
இருந்து தொடர்கிறதுதாய்லாந்து தொடருந்து வழித்தடம்
நிலையங்கள்121
சேவை
வகை
கேடிஎம் இண்டர்சிட்டி;
சேவைகள்
செய்குநர்(கள்)மலாயா தொடருந்து நிறுவனம்
பணிமனை(கள்)
வரலாறு
திறக்கப்பட்டதுசூன் 1, 1885 (1885-06-01)
முடிக்கப்பட்டதுசெப்டம்பர் 17, 1923 (1923-09-17)
மூடப்பட்டதுசூலை 1, 2011 (2011-07-01) (உட்லேண்ட்ஸ்தஞ்சோங் பகார்)
தொழில்நுட்பம்
வழித்தட நீளம்1,151 km (715 mi)
தண்டவாளங்களின் எண்ணிக்கை1 அல்லது 2
தட அளவி1,000 mm (3 ft 3 3⁄8 in)
மின்மயமாக்கல்வார்ப்புரு:25 kV 50 Hz (பாடாங் பெசார் – கிம்மாஸ்)

இந்த வழித்தடம் மேற்குக் கடற்கரை தொடருந்து பாதை என்றும் அழைக்கப்படுகிறது; ஏனெனில், தீபகற்ப மலேசியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் இந்த வழித்தடம் சேவை செய்வதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது.

பொது

தொகு

1,151-கி.மீ. நீளம் கொண்ட இந்த வழித்தடம், கிழக்குக் கடற்கரை தொடருந்து வழித்தடத்தை (East Coast Railway Line) விட பரபரப்பானது. ஏனெனில் இந்த வழித்தடம், கேடிஎம் இடிஎஸ் சேவைகள் (KTM ETS); கேடிஎம் இண்டர்சிட்டி KTM Intercity சேவைகள்; பன்னாட்டு எக்சுபிரஸ் சேவைகள் (International Express); கிள்ளான் பள்ளத்தாக்கு, பினாங்கு பெருநகரம் (Greater Penang Conurbation) ஆகிய பகுதிகளில் கேடிஎம் கொமுட்டர் (KTM Komuter) சேவைகள்; சரக்குச் சேவைகள் போன்ற பல்வேறு தொடருந்துச் சேவைகளைக் கையாளுகிறது. [1]

இந்த வழித் தடத்தில், 759 கி.மீ. நீளத்திற்கு மின்மயமாக்கப்பட்ட இரட்டைத் தடங்கள் உள்ளன.

முக்கிய நிலையங்கள்

தொகு

வரலாறு

தொகு

மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் ஜூன் 1, 1885-இல் தைப்பிங்-போர்ட் வெல்ட் வழித்தடம் Taiping–Port Weld Line திறப்புடன் உருவாக்கப்பட்டது. 1932-இல் இந்த மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் சிங்கப்பூர் தஞ்சோங் பகார் வரை திறக்கப்பட்டது. அதன் பின்னர் அதன் சேவைகள் தீபகற்ப மலேசியாவின் மேற்குக் கடற்கரை முழுவதும் பரவியது. [2]

அடுத்த நிலையில் மலேசியா-தாய்லாந்து எல்லையில் உள்ள பாடாங் பெசார் வரை பரவின. கரையோரத் துறைமுகங்களை ஈயச் சுரங்கப் பகுதிகளுடன் இணைக்கும் கிளை வழித்தடங்களை அமைத்தன் மூலம் மேலும் அதன் செயல்பாடுகள் பெருகின. அதன் பின்னர் தீபகற்ப மலேசியாவின் மேற்குக் கடற்கரை மாநிலங்களின் உட்பகுதியில் செல்லும் வழித்தடங்கள் மூலம் பிரதான வழித்தடம் படிப்படியாக இணைக்கப்பட்டது. [3]

சேவைகள்

தொகு

மேற்கு கடற்கரை தொடருந்து வழிதடத்தின் சேவைகள்:[4][5][6]

மேற்கோள்கள்

தொகு
  1. "In 1886, the line expanded to Kuala Lumpur and Klang, and in 1891, a new line was constructed between Seremban and Port Dickson. KTM Bhd introduced the first commuter train service in 1995 to connect Kuala Lumpur and Rawang and Kuala Lumpur-Seremban". பார்க்கப்பட்ட நாள் 15 July 2023.
  2. "The attempt to build a railway commenced in 1881. The line ran 12 km between the river port of Sapetang to Taiping. It took 4 years to get this project up and running with the first train service in Malaysia arrived at Taiping Railway station on the 1st June 1885". 20 July 2021. பார்க்கப்பட்ட நாள் 15 July 2023.
  3. Chan, Ruby (30 September 2020). "The rail stretched only 13 km from Port Weld (Kuala Sepetang) to Taiping, Perak. It was then operated by the Malayan Railway, which is now better known as Keretapi Tanah Melayu Bhd (KTMB)". Gamuda Berhad. பார்க்கப்பட்ட நாள் 15 July 2023.
  4. "State Railway of Thailand". Archived from the original on 2020-02-04. பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.
  5. "Keretapi Tanah Melayu".
  6. Ong, Ryan (2019-09-29). "You Can Now Take a Single-Seater Business Class KTM Train from KL to Perlis! - WORLD OF BUZZ". worldofbuzz.com/ (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-19.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு