செந்தூல்
செந்தூல், மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் மிக முக்கியமான நகரப் பகுதியாகும். இது கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசத்தில் இருக்கிறது. இந்த நகரப் பகுதி இரு பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது. மேற்கு செந்தூல் (Sentul Barat), கிழக்கு செந்தூல் (Sentul Timur) என இரு பிரிவுகள். மலாயா ரயில்வே நிறுவனத்தின் பயிற்சி மையம் இங்கே தான் உள்ளது.
மலேசியாவில் அதிகமானத் தமிழர்கள் வாழும் இடங்களில் செந்தூலும் ஒரு பகுதியாகும். செந்தூலில் அதிகமான அளவில் இந்துக்களின் கோயில்களையும், மாதா கோயில்களையும் காண முடியும். 1896 ஆம் ஆண்டு பிரித்தானியர்களால் மலாய் மாநிலங்களின் கூட்டமைப்பு உருவாக்கிய போது இங்கு தமிழர்கள் அதிகமாக வந்து குடியேறினர். அதனால் இங்கு தமிழர்களை அதிகமாகக் காண முடிகின்றது.