தும்பாட் தொடருந்து நிலையம்
தும்பாட் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Tumpat Railway Station மலாய்: Stesen Keretapi Tumpat); சீனம்: 道北火车站) என்பது தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கரைப் பகுதியில், கிளாந்தான் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் தும்பாட் நகரில், தாய்லாந்து நாட்டிற்கு அருகில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும்.[1]
தும்பாட் | |||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| கேடிஎம் இண்டர்சிட்டி Tumpat Railway Station | |||||||||||||||||||||||||||||||
தும்பாட் தொடருந்து நிலையம் (2010) | |||||||||||||||||||||||||||||||
பொது தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||
அமைவிடம் | தும்பாட் மாவட்டம் கிளாந்தான் மலேசியா | ||||||||||||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 6°11′56″N 102°10′03″E / 6.198889°N 102.1675°E | ||||||||||||||||||||||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து | ||||||||||||||||||||||||||||||
இயக்குபவர் | மலாயா தொடருந்து | ||||||||||||||||||||||||||||||
தடங்கள் | மலாயா கிழக்கு கடற்கரை | ||||||||||||||||||||||||||||||
நடைமேடை | 2 தீவு மேடை | ||||||||||||||||||||||||||||||
கட்டமைப்பு | |||||||||||||||||||||||||||||||
கட்டமைப்பு வகை | உயர்த்திய தளம் | ||||||||||||||||||||||||||||||
தரிப்பிடம் | இலவசம் | ||||||||||||||||||||||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உண்டு | ||||||||||||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | ||||||||||||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||||||||||||
மறுநிர்மாணம் | 2018 | ||||||||||||||||||||||||||||||
சேவைகள் | |||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||
|
கிளாந்தான் மாநிலத் தலைநகர் கோத்தா பாரு நகரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. அத்துடன் மலேசியக் கிழக்கு கடற்கரை தொடருந்து சேவையின் (KTM East Coast Railway Line) வடக்கு இறுதி முனையில் உள்ளது.
பொது
தொகு2018-ஆம் ஆண்டில், தும்பாட் தொடருந்து நிலையம் ஒரு நாளைக்கு 1,500 பேருக்கு சேவை செய்யும் வகையில் மேம்படுத்தப்பட்டது. இந்த நிலையத்தின் வளாகம் 4.7 எக்டர் பரப்பளவில் 13 தொடருந்து பெட்டிகளுக்கு இடமளிக்கும் வகையில் தொடருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன.[2][3]
தொடருந்து சேவைகள்
தொகு- ராக்யாட் தீமோரான் விரைவு தொடருந்து 26/27 தும்பாட்-ஜொகூர் செண்ட்ரல் - (Ekspres Rakyat Timuran 26/27 Tumpat–JB Sentral)
- தீமோர் சிற்றிடைப் போக்குவரத்து 51/52/57/60 தும்பாட்-குவா மூசாங் - (Shuttle Timur 51/52/57/60 Tumpat–Gua Musang)
- தீமோர் சிற்றிடைப் போக்குவரத்து 51/52/57/60 தும்பாட்-தாபோங் - (Shuttle Timur 55/56 Tumpat–Dabong)
காட்சியகம்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Tempat Menarik di Kelantan 2021 (Aktiviti Percutian Best)". 22 June 2016.
- ↑ Idris, Siti Rohana (September 27, 2018). "An allocation of RM500 million was approved for the LTSIP expansion project". Berita Harian.
- ↑ "September 2018 – Page 40 – PORTAL SINARHARIAN". PORTAL SINARHARIAN. Archived from the original on 2019-08-02. பார்க்கப்பட்ட நாள் 2021-12-07.