ஜொகூர் பாரு சென்ட்ரல்

(ஜொகூர் பாரு மத்திய நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஜொகூர் பாரு சென்ட்ரல் அல்லது ஜொகூர் பாரு மத்திய நிலையம்; அல்லது லார்க்கின் சென்ட்ரல்; (சுருக்கம்:ஜேபி சென்ட்ரல்); (ஆங்கிலம்: Johor Bahru Sentral அல்லது JB Sentral மலாய்: Johor Bahru Sentral); ஜாவி: جوهر بهرو سينترال; சீனம்: 新山中央車站) என்பது மலேசியா, ஜொகூர், ஜொகூர் பாரு, புக்கிட் சகார் (Bukit Chagar) பகுதியில் அமைந்துள்ள ஓர் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் ஆகும்.

ஜொகூர் பாரு சென்ட்ரல்
| Seremban Line கேடிஎம் இண்டர்சிட்டி

Johor Bahru Sentral Station
ஜொகூர் பாரு சென்ட்ரல் (2020)
பொது தகவல்கள்
அமைவிடம்தெற்கு ஒருங்கிணைந்த நுழைவாயில்; புக்கிட் சாகர், ஜொகூர் பாரு
 ஜொகூர்,  மலேசியா
ஆள்கூறுகள்1°27′45″N 103°45′53″E / 1.46250°N 103.76472°E / 1.46250; 103.76472
உரிமம் பிரதமர் துறையின் சொத்து மற்றும் நில மேலாண்மை பிரிவு
இயக்குபவர் மலாயா தொடருந்து
தடங்கள் மலாயா மேற்கு கடற்கரை 
நடைமேடை3 தீவு நடைமேடை
இருப்புப் பாதைகள்6
கட்டமைப்பு
தரிப்பிடம்Parking இலவசம்
துவிச்சக்கர வண்டி வசதிகள் உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
வரலாறு
திறக்கப்பட்டது21 அக்டோபர் 2010
முந்தைய பெயர்கள்கெம்பாஸ் பாரு
சேவைகள்
முந்தைய நிலையம்   கேடிஎம் இண்டர்சிட்டி   அடுத்த நிலையம்
   
கெம்பாஸ் பாரு
தும்பாட்
 
 Ekspres Timuran 
கிழக்கு நகரிடை சேவை
 
ஜொகூர் பாரு
(முனையம்)
கெம்பாஸ் பாரு
கிம்மாஸ்
 
 Ekspres Selatan 
தெற்கு நகரிடை சேவை
 
ஜொகூர் பாரு
(முனையம்)
ஜொகூர் பாரு
 
 Shuttle Tebrau 
தெப்ராவ் சிங்கப்பூர் நகரிடை சேவை
 
உட்லேண்ட்ஸ், சிங்கப்பூர்
(முனையம்)
   
கெம்பாஸ் பாரு
பாடாங் பெசார்
 
  Gold    பாடாங்  பெசார்   கிம்மாஸ்  (எதிர்காலத்தில்)
 
ஜொகூர் பாரு
(முனையம்)
அமைவிடம்
Map
ஜொகூர் பாரு சென்ட்ரல்

இந்தப் போக்குவரத்து மையம் 2010 அக்டோபர் 21-ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்த மையம், முன்பு 200 மீ தெற்கே அமைந்து இருந்த ஜொகூர் பாரு தொடருந்து நிலையத்தில் (Johor Bahru Railway Station) இருந்து புக்கிட் சகார் பகுதிக்கு மாற்றப்பட்டது. பழைய ஜொகூர் பாரு தொடருந்து நிலையம் தற்சமயம் மூடப்பட்டுவிட்டது.

பொது

தொகு

ஒருங்கிணைந்த தெற்கு நுழைவாயிலின் (Southern Integrated Gateway) ஒரு பகுதியாக விளங்கும் இந்தப் போக்குவரத்து மையம், சுல்தான் இசுகந்தர் கட்டிடத்தில் அமைந்துள்ள சுல்தான் இசுகந்தர் சுங்கம், குடியேற்றம் மற்றும் தனிமைப் படுத்துதல் வளாகத்துடன் (Customs, Immigration and Quarantine (CIQ) Complex) இணைக்கப்பட்டுள்ளது.[1]

மலேசியா-சிங்கப்பூர் தரைப்பாலத்தின் (Johor–Singapore Causeway) வடக்கு முனையில் இந்த வளாகம் அமைக்கப்பட்டு உள்ளது. மலேசியா-சிங்கப்பூர் எல்லை வழியாக மலேசியாவிற்குள் நுழைவதற்கான இரண்டு தரைவழி இடங்களில் இதுவும் ஒன்றாகும். ஜொகூர் சுல்தான் இசுகந்தரின் (Sultan Iskandar of Johor) நினைவாக இந்தக் கட்டிடத்திற்குப் பெயரிடப்பட்டது.

தெற்கு முனையமாக ஜொகூர் பாரு சென்ட்ரல்

தொகு

கேடிஎம் இண்டர்சிட்டி தொடருந்துச் சேவையின்; கிம்மாஸ் - புலாவ் செபாங்/தம்பின் வழித்தடத்தின் தென் மண்டல விரைவுத் தொடருந்து (Ekspres Selatan) துணைச் சேவை; தும்பாட் வரையிலான கிழக்கு மண்டல விரைவுத் தொடருந்து (Ekspres Timuran) துணைச் சேவை; ஆகிய சேவைகளுக்கு ஜொகூர் பாரு சென்ட்ரல் நிலையம், தெற்கு முனையமாகவும் இருந்தது.

தெப்ராவ் - சிங்கப்பூர் வழித்தடத்தின் மலேசியா-சிங்கப்பூர் தரைப்பாலம் வழியாக சிங்கப்பூரில் உள்ள சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் தொடருந்து சோதனைச் சாவடிக்கும், இந்த நிலையம் சேவை செய்தது. இருப்பினும், கோலாலம்பூர் சென்ட்ரல், பட்டர்வொர்த் மற்றும் பாடாங் பெசார் செல்லும் பயணிகள் கிம்மாஸ் நிலையத்தில் இறங்கி வேறு ஒரு தொடருந்து மூலமாகப் பயணத்தைத் தொடர வேண்டிய நிலை உள்ளது.

கிம்மாஸ்-ஜொகூர் பாரு இரட்டைப் பாதை

தொகு

கிம்மாஸ்-ஜொகூர் பாரு இரட்டைப் பாதை திட்டத்தால் 2022-ஆம் ஆண்டு சனவரி முதல் சூன் வரை தொடருந்து சேவைகள் எதையும் இந்த நிலையம் வழங்கவில்லை. மேலும் ஜொகூர் பாரு மற்றும் கெம்பாஸ் பாரு இடையே புதிய தடங்கள் தயாரான பிறகு சூலை 2022-இல் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன.[2]

ஜொகூர் பாருவில் இருந்து சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் நோக்கி தென்பகுதிக்குச் செல்லும் பயணிகளுக்கான மலேசிய குடிவரவு சோதனைச் சாவடியாக ஜொகூர் பாரு சென்ட்ரல் செயல்படுகிறது. சிங்கப்பூர் உட்லண்ட்ஸில் இருந்து மலேசிய வடக்கு பகுதிக்குச் செல்லும் பயணிகள், தொடருந்துகளில் ஏறுவதற்கு முன் உட்லண்ட்ஸ் தொடருந்துச் சோதனைச் சாவடியில் மலேசிய குடிவரவு மற்றும் சுங்க அதிகாரிகளால் சோதனை செய்யப்படுகிறார்கள்.

இசுகந்தர் மலேசியா விரைவுப் பேருந்து போக்குவரத்து

தொகு

ஜொகூர் பாருவில் தொடருந்து மற்றும் பேருந்து போக்குவரத்துக்கான முக்கிய மையமாகச் செயல்பட ஜொகூர் பாரு சென்ட்ரல் திட்டமிடப்பட்டுள்ளது. கேடிஎம் இடிஎஸ், கேடிஎம் கொமுட்டர், நகரிடை பேருந்து மையம் (Transit Bus Terminal) ஆகியவற்றின் முக்கிய நிலையமாக மாற்றுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், எதிர்காலத்தில் ஜொகூர் பாரு-சிங்கப்பூர் விரைவுப் போக்குவரத்து அமைப்பு (Johor Bahru–Singapore Rapid Transit System); இசுகந்தர் மலேசியா விரைவுப் பேருந்து போக்குவரத்து (Iskandar Malaysia Bus Rapid Transit) நிலையங்களுடன் ஜொகூர் பாரு சென்ட்ரல் இணைக்கப்படும்.[3][4]

வரலாறு

தொகு

ஜொகூர் மாநிலத்தின் தொடருந்து வரலாறு 1869-இல் தொடங்கியது. ஜொகூர் சுல்தான் அபு பக்கர் (மகாராஜா) ஜொகூர் தொடருந்து கட்டுமானத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தவர் ஆகும். ஜொகூர் பாரு முனையத்திலிருந்து 18 மைல் தொலைவில் உள்ள பூலாய் மலையை நோக்கி அந்த வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டது. அந்த வழித்தடம் ஜொகூர் பாருவில் இருந்து உருவாக்கப்பட்டது. 1875-ஆம் ஆண்டு முதல் 6 மைல் தூரத்திற்கு இயங்கி வந்தது. பின்னர் 1889-இல் அந்த வழித்தடம் செயலிழந்ததாக அறிவிக்கப்பட்டது.[5]

ஜொகூர் மாநிலத் தொடருந்து நிறுவனத்தின் கீழ் ஜொகூர் பாருவின் பழைய நிலையம் 1909-இல் திறக்கப்பட்டது. 1904-இல் கிம்மாஸ் முதல் ஜொகூர் பாரு வரையிலான முதமை இணைப்பு திறக்கப்பட்ட பின்னர்தான் ஜொகூர் பாருவின் பழைய தொடருந்து நிலையம் திறக்கப்பட்டது. அந்த நேரத்தில் ஜொகூர் பாருவில் இருந்து சிங்கப்பூருக்குத் தரைவழிப் போக்குவரத்துகள் எதுவும் இல்லை.

மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் தொடருந்து சேவை

தொகு

அந்தக் கட்டத்தில் தீபகற்ப மாநிலங்களின் தொடருந்துகளுக்கான தெற்கு முனையமாக ஜொகூர் பாரு பழைய தொடருந்து நிலையம் இருந்தது. இருப்பினும், சிங்கப்பூருக்குத் தரைவழிப் போக்குவரத்து இல்லாத காரணத்தினால், மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் தொடருந்து சேவை (Federated Malay States Railways), தீபகற்ப மாநிலங்களின் தொடருந்துகளுக்கும்; சிங்கப்பூர் அரசு தொடருந்துகளுக்கும் ஓர் ஒருங்கிணைந்த தொடருந்து படகுச் சேவையை இயக்கி வந்தது.[6]

1912-இல், ஜொகூர் அரசாங்க தொடருந்து சேவையும்; சிங்கப்பூர் அரசாங்க தொடருந்து சேவையும்; தீபகற்ப மலேசியாவின் மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் தொடருந்து சேவை நிர்வாகத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டன.[7]

காட்சியகம்

தொகு

சான்றுகள்

தொகு
  1. "The Sultan Iskandar Complex Custom consists of an immigration checkpoint and a custom checkpoint. The Sultan Iskandar Complex Custom has a distinct look of Malaysian with a modern structure building". johor.attractionsinmalaysia.com. பார்க்கப்பட்ட நாள் 18 April 2022.
  2. Station, RailTravel (2021-11-17). "Temporary Suspension of KTM Train Services between JB Sentral and Kempas Baru • RailTravel Station". RailTravel Station (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-18.
  3. Station, RailTravel (2022-01-08). "Empty JB Sentral, Johor Bahru City Square & Komtar JBCC • RailTravel Station". RailTravel Station (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-18.
  4. "KTM Berhad - NOTIS Pemberhentian sementara operasi tren di antara Stesen JB Sentral dan Kempas Baru #KTMB #ETS #KTMKomuter #KTMKomuterUtara #KTMIntercity #SkyparkLink #DMU #KTMKargo | Facebook". www.facebook.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-18.
  5. Bala, Mahen (22 July 2020). "1869—1874 The Johore Wooden Railway: A revised history". Projek Keretapi kita (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 12 August 2022.
  6. "FMSR Singapore section timetables from 1st January 1912". searail.malayanrailways.com. பார்க்கப்பட்ட நாள் 12 August 2022.
  7. "The Federated Malay States Railway". searail.malayanrailways.com. பார்க்கப்பட்ட நாள் 12 August 2022.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜொகூர்_பாரு_சென்ட்ரல்&oldid=4156528" இலிருந்து மீள்விக்கப்பட்டது