கெம்பாஸ் பாரு தொடருந்து நிலையம்
கெம்பாஸ் பாரு தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Kempas Baru Railway Station; மலாய்: Stesen KTMB Kempas Baru) என்பது மலேசியா, ஜொகூர், ஜொகூர் பாரு மாவட்டம், கெம்பாஸ் நகர்ப்பகுதியில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும்.[1]
கெம்பாஸ் பாரு | |||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| கேடிஎம் இண்டர்சிட்டி Kempas Baru Railway Station | |||||||||||||||||||||||||||||||
கெம்பாஸ் பாரு தொடருந்து நிலையம் | |||||||||||||||||||||||||||||||
பொது தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||
அமைவிடம் | கெம்பாஸ் பாரு ஜொகூர், மலேசியா | ||||||||||||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 1°32′8″N 103°43′16″E / 1.53556°N 103.72111°E | ||||||||||||||||||||||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து | ||||||||||||||||||||||||||||||
இயக்குபவர் | மலாயா தொடருந்து | ||||||||||||||||||||||||||||||
தடங்கள் | மலாயா மேற்கு கடற்கரை | ||||||||||||||||||||||||||||||
நடைமேடை | 6 நடைமேடை | ||||||||||||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 4 | ||||||||||||||||||||||||||||||
இணைப்புக்கள் | கூலாய் பேருந்து நிலையம் | ||||||||||||||||||||||||||||||
கட்டமைப்பு | |||||||||||||||||||||||||||||||
தரிப்பிடம் | உண்டு | ||||||||||||||||||||||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உண்டு | ||||||||||||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | ||||||||||||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||||||||||||
திறக்கப்பட்டது | 1909 | ||||||||||||||||||||||||||||||
முந்தைய பெயர்கள் | கெம்பாஸ் பாரு | ||||||||||||||||||||||||||||||
சேவைகள் | |||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||
|
கெம்பாஸ் நகரத்தில் இந்த நிலையம் அமைந்துள்ளதால், கெம்பாஸ் பாரு என இந்த நிலையத்திற்குப் பெயரிடப்பட்டது. மலேசியாவின் பழைமையான தொடருந்துகளில் இதுவும் ஒன்றாகும். இந்த நிலையம் 1909-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.[2]
இந்த நிலையம் மறுசீரமைக்கப்பட்டு 6 பிப்ரவரி 2024-இல் திறக்கப்பட்டது.[3]
பொது
தொகு1909-ஆம் ஆண்டில், மலாய் இராச்சியங்களின் கூட்டமைப்பு தொடருந்து (Federated Malay States Railways) எனும் தொடருந்து அமைப்புக்காக கெம்பாஸ் தொடருந்து நிலையம் கட்டப்பட்டது. பின்னர் இந்த அமைப்பு மலாயா தொடருந்து நிர்வாகம் (Malayan Railway Administration) எனவும் அழைக்கப்பட்டது.[4]
அப்போது அந்த நிலையம், தற்போதைய நிலையத்திலிருந்து சுமார் 100 தொலைவில் கட்டப்பட்டது. இருப்பினும் கெம்பாஸ் லாமா தொடருந்து நிலையம் ஜப்பானியர்களால் இரண்டாம் உலகப் போரில் அழிக்கப்பட்டது. போருக்குப் பிறகு மீண்டும் கட்டப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நிலையம் இடிக்கப்பட்டது. பின்னர் பல ஆண்டுகளாக கைவிடப்பட்டது.
மலாயா தொடருந்து நிறுவனம்
தொகுஅண்மையக் காலத்தில்தான், மலாயா தொடருந்து நிறுவனம், புதிய தொடருந்து நிலையத்தைக் கட்ட உத்தரவிட்டது. கெம்பாஸ் பாரு என புதிய நிலையத்திற்கு பெயர் தேர்வு செய்யப்பட்டது.
மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் எனும் தீபகற்ப மலேசிய மேற்கு கரை வழித்தடத்தில் (KTM West Coast Railway Line) அமைந்துள்ள இந்த நிலையம் கேடிஎம் இண்டர்சிட்டி சேவைகளை வழங்குகிறது.[5]
கிம்மாஸ் - ஜொகூர் பாரு மின்மயமாக்கல் திட்டம்
தொகுகிம்மாஸ் - ஜொகூர் பாரு மின்மயமாக்கப்பட்ட இரட்டை கண்காணிப்பு திட்டத்தின் (Gemas-Johor Bahru Double Tracking and Electrification Project) ஒரு பகுதியாக புதிய கெம்பாஸ் பாரு நிலையம் கட்டப்பட்டது.
புதிய கேடிஎம் இடிஎஸ் மின்சாரச் தொடருந்து சேவைகளுக்கு இடமளிக்கும் வகையில், ஜொகூர் மாநிலத்தில் உள்ள மற்ற தொடருந்து வழித்தடங்களில் தற்போது மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.[6]
மலாயா கடற்கரை மேற்குத் தொடருந்து வழித்தடத்தில் இரட்டைப் பாதை மற்றும் ஒற்றைப் பாதைகளை மின்மயமாக்கும் திட்டமே மலேசிய மின்மயமாக்கல் திட்டம் ஆகும்.[7]
மேற்சான்றுகள்
தொகு- ↑ "The Kempas Baru KTM Railway Station is a KTM train station located and named after the town of Kempas Baru, Johor. The Station provides KTM Intercity train services". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 8 April 2024.
- ↑ "The railway station (Stesen Keretapi Kempas Baru) is in the town of Kempas and has KTMB Malaysian Railways services provided by Shuttle trains to JB Sentral to the south and Gemas to the north". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 8 April 2024.
- ↑ Station, RailTravel (13 February 2024). "New Kempas Baru Railway Station! • RailTravel Station". RailTravel Station. பார்க்கப்பட்ட நாள் 8 April 2024.
- ↑ "KTM Berhad". Transport Malaysia.
- ↑ "The railway station (Stesen Keretapi Kulai, Johor) is in the centre of Kulai town and has services on both the North-South Line and East-South Line of the KTMB Malaysian Railways network, with trains to JB and Singapore in the south, Kuala Lumpur, Ipoh and Penang to the north". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 8 April 2024.
- ↑ "The railway line in this part of the country is currently undergoing upgrading work which is being done to accommodate the newer, faster Electric Train Services (ETS). (Jadual) Ekspres Selatan". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 7 April 2024.
- ↑ "List Of Station - KTM Berhad". பார்க்கப்பட்ட நாள் 7 April 2024.
வெளி இணைப்புகள்
தொகு- Kulai KTM Railway Station பரணிடப்பட்டது 10 சூலை 2013 at the வந்தவழி இயந்திரம்