கூலாய் தொடருந்து நிலையம்

கூலாய் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Kulai Railway Station; மலாய்: Stesen KTMB Kulai) என்பது மலேசியா, ஜொகூர், கூலாய் மாவட்டம், கூலாய் நகர்ப்பகுதியில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் கூலாய் நகரத்தின் மையப் பகுதியில் அமைந்து இருப்பதால், நகரத்தின் ஒவ்வோர் இடத்தில் இருந்தும் எளிதாகப் பயணிக்கும் தூரத்தில் உள்ளது.[1]

கூலாய்
| Seremban Line கேடிஎம் இண்டர்சிட்டி

Kulai Railway Station
கூலாய் தொடருந்து நிலையம் (2022)
பொது தகவல்கள்
அமைவிடம்கூலாய், கூலாய் மாவட்டம்
 ஜொகூர்,  மலேசியா
ஆள்கூறுகள்1°39′52″N 103°35′53″E / 1.6644°N 103.5981°E / 1.6644; 103.5981
உரிமம் மலாயா தொடருந்து
இயக்குபவர் மலாயா தொடருந்து
தடங்கள் மலாயா மேற்கு கடற்கரை 
நடைமேடை1 நடைமேடை
இருப்புப் பாதைகள்3
இணைப்புக்கள்கூலாய் பேருந்து நிலையம்
கட்டமைப்பு
தரிப்பிடம்Parking இலவசம்
துவிச்சக்கர வண்டி வசதிகள் உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
வரலாறு
திறக்கப்பட்டது1909
சேவைகள்
முந்தைய நிலையம்   கேடிஎம் இண்டர்சிட்டி   அடுத்த நிலையம்
   
குளுவாங்
தும்பாட்
 
 Ekspres Timuran 
கிழக்கு நகரிடை சேவை
 
கெம்பாஸ்
ஜொகூர்
லாயாங்
கிம்மாஸ்
 
 Ekspres Selatan 
தெற்கு நகரிடை சேவை
 
கெம்பாஸ்
ஜொகூர்
அமைவிடம்
Map
கூலாய் தொடருந்து நிலையம்

இந்த நிலையம் கூலாய் நகரத்திற்கும்; மற்றும் கூலாய் ஜெயா; ஆயர் பெம்பான்; பண்டார் புத்ரா கூலாய் புக்கிட் பத்து இண்டாபுரா; கெலாப்பா சாவிட், சாலேங்; செடனாக்; சீலோங்; செனாய்; செங்காங் ஆகிய நகர்ப் பகுதிகளுக்கும் சேவை செய்கிறது.[2]

கூலாய் நகரம் இசுகந்தர் மலேசியா எனும் பொருளாதார மண்டலத்திற்குள் அமைந்து இருப்பதால் கூலாய் தொடருந்து நிலையத்தின் சேவைகளை அதிகமானோர் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

பொது

தொகு

மலேசியாவின் பழைமையான தொடருந்துகளில் இதுவும் ஒன்றாகும். இந்த நிலையம் 1909-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் எனும் தீபகற்ப மலேசிய மேற்கு கரை வழித்தடத்தில் (KTM West Coast Railway Line) அமைந்துள்ள இந்த நிலையம் கேடிஎம் இண்டர்சிட்டி சேவைகளை வழங்குகிறது.[3]

கூலாய் நகரத்தில் இந்த நிலையம் அமைந்துள்ளதால், கூலாய் நகரத்தின் பெயர் இந்த நிலையத்திற்கும் வழங்கப்பட்டது.[4]

கிம்மாஸ் - ஜொகூர் பாரு மின்மயமாக்கல் திட்டம்

தொகு

கிம்மாஸ் - ஜொகூர் பாரு மின்மயமாக்கப்பட்ட இரட்டை கண்காணிப்பு திட்டத்தின் (Gemas-Johor Bahru Double Tracking and Electrification Project) ஒரு பகுதியாக புதிய கூலாய் நிலையம் கட்டப்பட்டது.

புதிய கேடிஎம் இடிஎஸ் மின்சாரச் தொடருந்து சேவைகளுக்கு இடமளிக்கும் வகையில், ஜொகூர் மாநிலத்தில் உள்ள மற்ற தொடருந்து வழித்தடங்களில் தற்போது மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.[5]

மலாயா கடற்கரை மேற்குத் தொடருந்து வழித்தடத்தில் இரட்டைப் பாதை மற்றும் ஒற்றைப் பாதைகளை மின்மயமாக்கும் திட்டமே மலேசிய மின்மயமாக்கல் திட்டம் ஆகும்.[6]

மேலும் காண்க

தொகு

மேற்சான்றுகள்

தொகு
  1. Singapore Bulletin (in ஆங்கிலம்). Vol. 24. Singapore. Ministry of Communications and Information (1985-1990). Publicity Division, Ministry of Culture. 1996. பார்க்கப்பட்ட நாள் 2024-03-01.{{cite book}}: CS1 maint: others (link)
  2. "Kulai Railway Station is a railway station in Kulai, Johor. It is located off Federal Route 1, the Kulai Main Road". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 8 April 2024.
  3. "The railway station (Stesen Keretapi Kulai, Johor) is in the centre of Kulai town and has services on both the North-South Line and East-South Line of the KTMB Malaysian Railways network, with trains to JB and Singapore in the south, Kuala Lumpur, Ipoh and Penang to the north". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 8 April 2024.
  4. "The Kulai KTM Railway Station is a KTM train station located and named after the town of Kulai, Johor". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 8 April 2024.
  5. "The railway line in this part of the country is currently undergoing upgrading work which is being done to accommodate the newer, faster Electric Train Services (ETS). (Jadual) Ekspres Selatan". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 7 April 2024.
  6. "List Of Station - KTM Berhad". பார்க்கப்பட்ட நாள் 7 April 2024.

வெளி இணைப்புகள்

தொகு