குளுவாங் தொடருந்து நிலையம்
குளுவாங் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Kluang Railway Station; மலாய்: Stesen KTMB Kluang) என்பது மலேசியா, ஜொகூர், குளுவாங் மாவட்டம், குளுவாங் நகர்ப்பகுதியில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் குளுவாங் நகரத்தின் மையப் பகுதியில் அமைந்து இருப்பதால், நகரத்தின் ஒவ்வோர் இடத்தில் இருந்தும் நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது.[1]
குளுவாங் | |||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| கேடிஎம் இண்டர்சிட்டி Kluang Railway Station | |||||||||||||||||||||
புதிய குளுவாங் தொடருந்து நிலையம் | |||||||||||||||||||||
பொது தகவல்கள் | |||||||||||||||||||||
அமைவிடம் | குளுவாங் ஜொகூர், மலேசியா | ||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 2°2′1″N 103°19′3″E / 2.03361°N 103.31750°E | ||||||||||||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து | ||||||||||||||||||||
இயக்குபவர் | மலாயா தொடருந்து | ||||||||||||||||||||
தடங்கள் | மலாயா மேற்கு கடற்கரை | ||||||||||||||||||||
நடைமேடை | 1 நடைமேடை | ||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||||||||||||
கட்டமைப்பு | |||||||||||||||||||||
தரிப்பிடம் | இலவசம் | ||||||||||||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உண்டு | ||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | ||||||||||||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||||||||||||
நிலை | இரட்டைப் பாதை; மின்மயமாக்கம் | ||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||
திறக்கப்பட்டது | 1909 | ||||||||||||||||||||
சேவைகள் | |||||||||||||||||||||
| |||||||||||||||||||||
|
மலேசியாவின் பழைமையான தொடருந்துகளில் இதுவும் ஒன்றாகும். இந்த நிலையம் 1909-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் எனும் தீபகற்ப மலேசிய மேற்கு கரை வழித்தடத்தில் (KTM West Coast Railway Line) அமைந்துள்ள இந்த நிலையம் கேடிஎம் இண்டர்சிட்டி சேவைகளை வழங்குகிறது. குளுவாங் நகரத்தில் இந்த நிலையம் அமைந்துள்ளதால், குளுவாங் நகரத்தின் பெயரில் இந்த நிலையம் அழைக்கப்படுகிறது.[2]
பொது
தொகுகுளுவாங் ரெயில்காபி (Kluang RailCoffee) என்ற பெயரில் இங்கு ஒரு பிரபலமான காபிக்கடை உள்ளது. இந்தக் காபிக்கடை அதன் காபி பானங்கள் மற்றும் கரியில் வறுக்கப்பட்ட காயா ரொட்டிகளுக்காக நாடு முழுவதும் பிரபலமானது . 3 ஆகஸ்ட் 2022-இல், மலேசியத் சாதனைப் புத்தகத்தில், மலேசியாவின் மிகப் பழைமையான தொடருந்து காபிக்கடை என்ற அங்கீகாரத்தைப் பெற்றது.[3][4]
2021-இன் பிற்பகுதியில் இருந்து, பயணிகளின் செயல்பாடுகள் குளுவாங் தற்காலிகத் தொடருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டன. குளுவாங் நிலையத்திற்கு தெற்கே ஒரே ஒரு வழித்தடத்தைக் கொண்ட ஒரு நிலையம் தற்காலிகமாகக் கட்டப்பட்டு உள்ளது. கம்போங் மஸ்ஜித் லாமாவில் புதிய நிலையம் கட்டப்பட்டு வருகிறது.[5]
புதிய பாலோ நிலையம் திறக்கப்பட்டதும், பழைய நிலையம் ஒரு பாரம்பரியக் கட்டிடமாக, பழைய நிலையில் அப்படியே தக்க வைக்கப்படும் மலாயா தொடருந்து நிறுவனம் (KTM) அறிவித்துள்ளது.
நிலையச் சீரமைப்பின் காரணமாக, பழைய குளூவாங் நிலையம் பயணிகளின் பொது வசதிகளுக்காக மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. அங்கு பயணிகளுக்கான செயல்பாடுகள் எதுவும் நடைபெறவில்லை. குளுவாங் நிலையத்தைச் சுற்றியுள்ள பாதைகளை அகற்றும் பணிகள் வசதி 2021 டிசம்பரில் தொடங்கப்பட்டது.
கிம்மாஸ் - ஜொகூர் பாரு மின்மயமாக்கல் திட்டம்
தொகுகிம்மாஸ் - ஜொகூர் பாரு மின்மயமாக்கப்பட்ட இரட்டை கண்காணிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய பாலோ நிலையம் கட்டப்படுகிறது. இந்த நிலையம் 23 ஜூன் 2021 அன்று மூடப்பட்டு, அதற்குப் பதிலாக பாலோ நகரத்தில் ஒரு தற்காலிக நிலையம் அமைக்கப்பட்டது.
புதிய, வேகமான கேடிஎம் இடிஎஸ் மின்சாரச் தொடருந்து சேவைகளுக்கு இடமளிக்கும் வகையில், ஜொகூர் மாநிலத்தில் உள்ள தொடருந்து வழித்தடங்களில் தற்போது மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.[6]
மலாயா கடற்கரை மேற்குத் தொடருந்து வழித்தடத்தில் இரட்டைப் பாதை மற்றும் ஒற்றைப் பாதைகளை மின்மயமாக்கும் திட்டமே மலேசிய மின்மயமாக்கல் திட்டம் ஆகும்.[7]
மேலும் காண்க
தொகுமேற்சான்றுகள்
தொகு- ↑ "The Kluang KTM Railway Station is a KTM train station located and named after the town of Kluang, Johor". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 8 April 2024.
- ↑ "Among the main places which must be visited upon arriving in the Kluang District is the Kluang Railway Station which has been in operation since 1909". Official Portal of Kluang Municipal Council (MPK). 8 January 2016. பார்க்கப்பட்ட நாள் 8 April 2024.
- ↑ A. Thirumalni (3 Aug 2022). "Kluang eatery receives national recognition". The Star (Malaysia). https://www.thestar.com.my/metro/metro-news/2022/08/03/kluang-eatery-receives-national-recognition.
- ↑ "Oldest Railway Kopitiam in Malaysia. Since 1938". www.instagram.com. பார்க்கப்பட்ட நாள் 8 April 2024.
- ↑ "Kluang Railway Station". Transport Malaysia. 6 January 2011. பார்க்கப்பட்ட நாள் 8 April 2024.
- ↑ "The railway line in this part of the country is currently undergoing upgrading work which is being done to accommodate the newer, faster Electric Train Services (ETS). (Jadual) Ekspres Selatan". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 7 April 2024.
- ↑ "List Of Station - KTM Berhad". பார்க்கப்பட்ட நாள் 7 April 2024.
காட்சியகம்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Kluang Railway Station தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- பொதுவகத்தில் Old Kluang Railway Station தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Kluang KTM Railway Station
- Video of the construction of the new Kluang Railway Station