மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் தொடருந்து சேவை

1896-ஆம் ஆண்டில் மலாயா கூட்டமைப்பு தொடருந்துச் சேவை

மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் தொடருந்து சேவை (ஆங்கிலம்: Federated Malay States Railways (FMSR); மலாய்: Keretapi Negeri-Negeri Melayu Bersekutu) என்பது 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரித்தானிய மலாயா எனும் இன்றைய தீபகற்ப மலேசியா மற்றும் சிங்கப்பூர் பகுதிகளில், செயல்பாட்டில் இருந்த ஓர் ஒருங்கிணைந்த தொடருந்து சேவையாகும்.[1]

மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் தொடருந்து
Federated Malay States Railways
FMSR
மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் தொடருந்து (1902)
கண்ணோட்டம்
தலைமையகம்கோலாலம்பூர், மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் (தற்போது மலேசியா)
வட்டாரம்பிரித்தானிய மலாயா
செயல்பாட்டின் தேதிகள்1901–1948
முந்தியவைபேராக் தொடருந்து
சிலாங்கூர் தொடருந்து
சிங்கப்பூர் தொடருந்து
மலாக்கா தொடருந்து
ஜொகூர் தொடருந்து
பின்தையவைமலாயா தொடருந்து நிறுவனம்
தொழில்நுட்பம்
தட அளவிகுற்றகலப் பாதை (1,000 மிமீ (3 அடி 3 38 அங்))

மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் உருவாக்கப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், 1896-ஆம் ஆண்டில் மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் (Federated Malay States) பெயரால் அந்தத் தொடருந்துச் சேவைக்கும் பெயரிடப்பட்டது.[2]

மலாயாவின் பல்வேறு பகுதிகளில் தனித்தனியாகச் செயல்பட்ட பல்வேறு தொடருந்து நிறுவனங்களை; மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் தொடருந்து சேவை, தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.

பொது

தொகு

மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் தொடருந்து சேவை உருவாகும் வரை, மலாயாவின் தொடருந்து அமைப்புகள் தனித் தனியாகச் செயல்பட்டன; மற்றும் அவை, வணிகரீதியாகச் செயல்பட்டன. பெரும்பாலும் அவை தீபகற்ப மலேசியாவின் மேற்கு கடற்கரையில் மையம் கொண்டு இருந்தன. அன்றைய நிலையில், எந்த ஒரு தொடருந்து அமைப்பும் மாநிலங்களுக்கு இடையிலான சேவைகளில் ஈடுபடவில்லை.

மேலும் அவை தனிப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகச் செயல்பட்டன. 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில், மலாயாவில் குறைந்தது ஆறு தனித்தனி தொடருந்து நிறுவனங்கள் இருந்தன.

சேவைகள்

தொகு

காட்சியகம்

தொகு

மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் தொடருந்து சேவையின் காட்சிப் படங்கள் (1910)

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Volunteers (7 December 2020). "The introduction of railways in our country occurred in the second half of the 19th century and the British played an important role in its development". Museum Volunteers, JMM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 1 December 2024.
  2. "The Federated Malay States Railway". searail.malayanrailways.com. பார்க்கப்பட்ட நாள் 1 December 2024.
  3. "The first railway in Malaya that the British built was in 1886 to transport tin from the mining sites near the west coast to the port for export. This line ran from Taiping to Port Weld in Perak and was only 23 kilometers long". Malaysia 1786 - 1957 (in ஆங்கிலம்). 29 May 2019. பார்க்கப்பட்ட நாள் 1 December 2024.

வெளி இணைப்புகள்

தொகு