குவா மூசாங் தொடருந்து நிலையம்

குவா மூசாங் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Gua Musang Railway Station மலாய்: Stesen Keretapi Gua Musang) என்பது தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கரைப் பகுதியில், கிளாந்தான், குவா மூசாங் மாவட்டம், குவா மூசாங் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் கிளாந்தான் மாநிலத்தின் தலைநகரான கோத்தா பாரு நகரில் இருந்து சுமார் 196 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.[1]

குவா மூசாங்
| Seremban Line கேடிஎம் இண்டர்சிட்டி

Gua Musang Railway Station
குவா மூசாங் தொடருந்து நிலையம் (2023)
பொது தகவல்கள்
அமைவிடம்குவா மூசாங், குவா மூசாங் மாவட்டம்
கிளாந்தான்
 மலேசியா
ஆள்கூறுகள்4°52′44.9″N 101°58′00.3″E / 4.879139°N 101.966750°E / 4.879139; 101.966750
உரிமம் மலாயா தொடருந்து
தடங்கள்மலாயா கிழக்கு கடற்கரை
நடைமேடை2 பக்க நடைப்பாதை
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
தரிப்பிடம்Parking இலவசம்
துவிச்சக்கர வண்டி வசதிகள் உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
வரலாறு
திறக்கப்பட்டது1914
மறுநிர்மாணம்2008
சேவைகள்
முந்தைய நிலையம்   கேடிஎம் இண்டர்சிட்டி   அடுத்த நிலையம்
   
தாபோங்
தும்பாட்
 
 Ekspres Timuran 
கிழக்கு நகரிடை சேவை
 
மெராப்போ
ஜொகூர்
மலாயன்
தும்பாட்
 
 Shuttle Timur 
கிழக்கு நகரிடை சேவை
 
மெந்தாரா
லிப்பிஸ்}
பெர்த்தாம்
தும்பாட்
 
 Shuttle Timur 
கிழக்கு நகரிடை சேவை
 
(முனையம்)
மலாயன்
தும்பாட்
 
 Shuttle Timur 
கிழக்கு நகரிடை சேவை
 
மெந்தாரா
லிப்பிஸ்
அமைவிடம்
Map
குவா மூசாங் தொடருந்து நிலையம்

இந்த நிலையம் குவா மூசாங் மற்றும் தும்பாட் நகரங்களுக்கு இடையிலான கிழக்கு நகரிடை சேவையின் ஒரு முனையமாக விளங்குகிறது. குவா மூசாங் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள இந்த நிலையம், அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது. குவா மூசாங் நகரின் பெயரால் இந்த நிலையத்திற்குப் பெயரிடப்பட்டுள்ளது.[1]

பொது

தொகு

குவா முசாங் தொடருந்து நிலையம், உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் குவா மூசாங் நகரத்திற்குப் பயணிக்க ஒரு பொதுப் போக்குவரத்துத் தேர்வாக உள்ளது. தூரப் பயணங்களுக்கு, தனியார் பேருந்துச் சேவைகளைவிட பொதுத் தொடருந்துச் சேவைகளைப் பயன்படுத்தவே இங்குள்ள மக்கள் விரும்புகின்றனர். அத்துடன் இந்த நிலையம் கோலா லிப்பிஸ் - குவா மூசாங் வழித்தடத்திற்கான முனையமாகவும் செயல்படுகிறது.[2]

ஜொகூர் பாரு மற்றும் தும்பாட் இடையிலான தொடருந்துச் சேவை ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே செயல்படுகிறது. அத்துடன் இந்தச் சேவையில் ஈடுபட்டுள்ள தொடருந்துகள், ஜொகூர், நெகிரி செம்பிலான், பகாங் மற்றும் கிளாந்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள பல தொடருந்து நிலையங்களில் நின்று செல்கின்றன.[2]

நிலைய வசதிகள்

தொகு
  • 2 பக்க மேடைகள்
  • காத்திருப்புப் பகுதி
  • பொது கழிப்பறைகள்
  • வாகன நிறுத்துமிடம்
  • கடவுச்சீட்டு விற்பனை இயந்திரங்கள்
  • வாடிக்கையாளர் சேவை அலுவலகம்
  • பானங்கள் விற்பனை இயந்திரங்கள்

தொடருந்து சேவைகள்

தொகு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Gua Musang KTM Railway Station is a KTM train station situated at and named after the town of Gua Musang, Kelantan". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 14 April 2024.
  2. 2.0 2.1 "Gua Musang station serves as a terminus for Kuala Lipis – Gua Musang route and operates as a first departing station for the route from Gua Musang to Tumpat. The railway route between JB Sentral and Tumpat is served only once per day, stopping at numerous train stations in Johor, Negeri Sembilan, Pahang and Kelantan". www.easybook.com. பார்க்கப்பட்ட நாள் 14 April 2024.
  3. "Gua Musang Railway Station • RailTravel Station". RailTravel Station. பார்க்கப்பட்ட நாள் 14 April 2024.

வெளி இணைப்புகள்

தொகு