சுங்கை பட்டாணி மக்களவைத் தொகுதி

(சுங்கை பட்டாணி மக்களவை தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சுங்கை பட்டாணி மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Sungai Petani; ஆங்கிலம்: Sungai Petani Federal Constituency; சீனம்: 双溪大年联邦选区) என்பது மலேசியா, கெடா மாநிலத்தில், கோலா மூடா மாவட்டத்தில் (Kuala Muda District) உள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P015) ஆகும்.

சுங்கை பட்டாணி (P015)
மலேசிய மக்களவைத் தொகுதி
கெடா
Sungai Petani (P015)
Federal Constituency in Kedah
சுங்கை பட்டாணி மக்களவைத் தொகுதி
மாவட்டம்கோலா மூடா மாவட்டம்; கெடா
வாக்காளர் தொகுதிசுங்கை பட்டாணி தொகுதி
முக்கிய நகரங்கள்சுங்கை பட்டாணி
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1958
நீக்கப்பட்ட காலம்1959
கட்சிபெரிக்காத்தான் நேசனல்
மக்களவை உறுப்பினர்முகமது தௌபிக் சொகாரி
(Mohammed Taufiq Johari)
வாக்காளர்கள் எண்ணிக்கை168,847
தொகுதி பரப்பளவு261 ச.கி.மீ
இறுதி தேர்தல்பொதுத் தேர்தல் 2022




2022-இல் சுங்கை பட்டாணி தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்

  மலாயர் (61.7%)
  சீனர் (25.8%)
  இதர இனத்தவர் (0.3%)

சுங்கை பட்டாணி தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 1959-ஆம் ஆண்டில் இருந்து மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. 31 அக்டோபர் 2022-இல் வெளியிடப்பட்ட மத்திய அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), சுங்கை பட்டாணி தொகுதி 50 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது.[1]

பொது

தொகு

சுங்கை பட்டாணி நகரம்

தொகு

சுங்கை பட்டாணி' (Sungai Petani); கெடா, கோலா மூடா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். கெடா மாநிலத்தில் மிகப் பெரிய நகரமாகக் கருதப்படும் சுங்கை பட்டாணி நகரம், மாநிலத்தின் தலைநகரமான அலோர் ஸ்டார் (Alor Setar) மாநகரத்தில் இருந்து 55 கி.மீ. தொலைவில் உள்ளது. ஜோர்ஜ் டவுன் நகரில் இருந்து 33 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

சுங்கை பட்டாணியில் எளிதில் அடையாளம் கண்டு கொள்ளக் கூடிய சின்னங்களில் முக்கியமானது சுங்கை பட்டாணி காவல் நிலையம் ஆகும். இது 1916-ஆம் ஆண்டில் அத்தாப்பு குடிசையாகக் கட்டப் பட்டது.

அப்போது பத்து காவல் துறை அதிகாரிகள் அந்த நிலையத்தில் பணிபுரிந்தனர். வெறும் அத்தாப்பு கூரைகள், பலகைகளால் ஆனது. அதில் பத்து சீக்கிய, மலாய்க்கார காவல் துறை அதிகாரிகள் பணிபுரிந்தனர்.

சுங்கை பட்டாணி மணிக்கூண்டு

தொகு

1950-ஆம் ஆண்டுகளில் சுங்கை பட்டாணி வாழ் மக்களுக்குப் பொழுது போக்குவதற்கு சரியான பூங்காக்கள் அல்லது போக்கிடங்கள் எதுவும் இல்லாமல் இருந்தது. அதனால் அவர்களில் சிலர், மாலை வேளைகளில் ஆங்காங் சாங்காய் வங்கிக்கு முன்னால் கூடி பொழுதுகளைக் கழிப்பார்கள். ஆங்காங் சாங்காய் வங்கி 1921-ஆம் ஆண்டு கட்டப் பட்டது.

அதற்கு முன்னரே சுங்கை பட்டாணி கூடலகம் (Sungai Petani Club) 1913-இல் கட்டப் பட்டு விட்டது. இந்த மன்றத்தில் பிரித்தானியர்கள், அரசு இலாகாகளின் தலைவர்கள், தோட்ட நிர்வாகிகள் உறுப்பினர்களாக இருந்தனர்.

சுங்கை பட்டாணி நாடாளுமன்றத் தொகுதி

தொகு
சுங்கை பட்டாணி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள்
நாடாளுமன்றம் ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
சுங்கை பட்டாணி தொகுதி சுங்கை மூடா தொகுதியில் இருந்து புதிதாக உருவாக்கப்பட்டு, சுங்கை பட்டாணி தொகுதி என மறுபெயரிடப்பட்டது
சுங்கை பட்டாணி
மலாயா கூட்டரசு நாடாளுமன்றம்
1-ஆவது 1959–1963 அப்துல் சமாட் ஒசுமான்
(Abdul Samad Osman)
கூட்டணி (அம்னோ)
மலேசிய நாடாளுமன்றம்
1-ஆவது 1963–1964 அப்துல் சமாட் ஒசுமான்
(Abdul Samad Osman)
கூட்டணி (அம்னோ)
2-ஆவது 1964–1969 முகமது சாகிர் இசுமாயில்
(Mohamed Zahir Ismail)
1969–1971 நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
3-ஆவது 1971–1973 அசாரி முகமட் தைப்
(Azahari Md. Taib)
கூட்டணி (அம்னோ)
1973–1974 பாரிசான் (அம்னோ)
4-ஆவது 1974–1978 வான் சைனாப் எம்.ஏ.பக்கார்
(Wan Zainab M. A. Bakar)
5-ஆவது 1978–1982
6-ஆவது] 1982–1986
சுங்கை பட்டாணி
7-ஆவது 1986–1990 அப்துல் மனாப் அகமத்
(Abdul Manaf Ahmad)
பாரிசான் (அம்னோ)
8-ஆவது 1990–1995 செ இப்ராகிம் முசுதபா
(Che Ibrahim Mustafa)
9-ஆவது 1995–1999
10-ஆவது 1999–2004 மகாசிர் முகமது கிர்
(Mahadzir Mohd Khir)
11-ஆவது 2004–2008
12-ஆவது 2008–2013 சொகாரி அப்துல்
(Johari Abdul)
மக்கள் நீதிக்கட்சி (பிகேஆர்)
13-ஆவது 2008–2013
14-ஆவது 2018–2022 பாக்காத்தான் (பிகேஆர்)
15-ஆவது 2022–தற்போது முகமது தௌபிக் சொகாரி
(Mohammed Taufiq Johari)

சுங்கை பட்டாணி தேர்தல் முடிவுகள்

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொது வாக்குகள் %
பதிவு பெற்ற வாக்காளர்கள் 168,847 100.00%
வாக்களித்தவர்கள் 131,447 77.85%
செல்லுபடி வாக்குகள் 130,004 -
செல்லாத வாக்குகள் 1,443 -

சுங்கை பட்டாணி வேட்பாளர் விவரங்கள்

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள் (%)
முகமது தௌபிக் சொகாரி
(Mohammed Taufiq Johari)
பாக்காத்தான் 50,580 38.91%
ராபர்ட் லிங் குய் ஈ
(Robert Ling Kui Ee)
பெரிக்காத்தான் 49,465 38.05%
சகானிம் முகமது யூசோப்
(Shahanim Mohamad Yusoff)
பாரிசான் 27,391 21.07%
மர்சுகி யாகயா
(Marzuki Yahya)
உள்நாட்டு போராளிகள் கட்சி 2,342 1.80%
டான் சௌ காங்
(Tan Chow Kang)
மலேசிய மக்கள் கட்சி 226 0.17%

மேற்கோள்கள்

தொகு
  • "Keputusan Pilihan Raya Suruhanjaya Pilihan Raya". Election Commission of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2018-08-12.
  • "15th General Elaction Malaysia".
  1. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 13 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |access-date= (help)

மேலும் காண்க

தொகு

வார்ப்புரு:கெடா மக்களவைத் தொகுதிகள்