கொடியாங் தொடருந்து நிலையம்
கொடியாங் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Kodiang Railway Station மலாய்: Stesen Keretapi Kodiang); சீனம்: 柯江火车站) என்பது தீபகற்ப மலேசியா, பெர்லிஸ் மாநிலத்தில் கொடியாங் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் கொடியாங் மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.[1]
கொடியாங் | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Kodiang Railway Station | ||||||||||||||||
கொடியாங் தொடருந்து நிலையம் (2023) | ||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||
அமைவிடம் | கொடியாங், குபாங் பாசு, கெடா | |||||||||||||||
ஆள்கூறுகள் | 6°22′15″N 100°18′10″E / 6.3707°N 100.3027°E | |||||||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து நிறுவனம் | |||||||||||||||
தடங்கள் | 1 மலாயா மேற்கு கடற்கரை | |||||||||||||||
நடைமேடை | 2 நடை மேடைகள் | |||||||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | |||||||||||||||
இணைப்புக்கள் | உள்ளூர் போக்குவரத்து | |||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||
தரிப்பிடம் | இலவசம் | |||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | |||||||||||||||
வரலாறு | ||||||||||||||||
திறக்கப்பட்டது | 1917 | |||||||||||||||
மின்சாரமயம் | 2015 | |||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||
| ||||||||||||||||
|
மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் எனும் தீபகற்ப மலேசிய மேற்கு கரை வழித்தடத்தின் (KTM Wast Coast Railway Line), கொடியாங் துணைத் தடத்தில் (KTM Komuter Northern Sector Route No. 2.) உள்ளது. கெடா மாநிலத்தின் சாங்லூன் நகரம் சற்று அருகில் உள்ளது.
பொது
தொகுஈப்போ - பாடாங் பெசார் மின்மயமாக்கல்; மற்றும் இரட்டை தண்டவாளத் திட்டத்தின் ஒரு பகுதியாக கொடியாங் நகரில் புதிய தொடருந்து நிலையம் கட்டப்பட்டது. 2015-ஆம் ஆண்டில் செயல்படத் தொடங்கிய இந்த நிலையம் கேடிஎம் கொமுட்டர் நிறுவனத்தின் தொடருந்துகளால் சேவை செய்யப் படுகிறது.[2]
மலேசியா-தாய்லாந்து எல்லை
தொகுஇந்த நிலையம் கொடியாங் நகரத்தில் இருந்து 3.4 கி.மீ. தொலைவில் உள்ளது. பெர்லிஸ்-கெடா மாநில எல்லைகள் வெகு தொலைவில் இல்லை. இந்த நிலையம் கேடிஎம் கொமுட்டர் (KTM Komuter) தொடருந்து சேவையை மட்டும் வழங்குகிறது.
கொடியாங் நகரம், சாங்லூன் நகருக்கு அருகில் உள்ளது. மற்றும் தாய்லாந்தின் கெடா எல்லை நகரங்களான சிந்தோக் மற்றும் புக்கிட் காயூ ஈத்தாம் ஆகியவற்றிற்கு மிக அருகில் உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "The KTM Kodiang Railway Station (Stesen Keretapi Kodiang) lies in the state of Kedah, Malaysia and is located along the KTMB North - South Line. The station is served by regular KTM Komuter Trains (commuter trains)". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 17 July 2023.
- ↑ "Kodiang Railway Station • RailTravel Station". RailTravel Station. பார்க்கப்பட்ட நாள் 17 July 2023.