சிம்பாங் அம்பாட் தொடருந்து நிலையம்

மலேசியா, பினாங்கு மாநிலத்தில் சிம்பாங் அம்பாட் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம்

சிம்பாங் அம்பாட் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Simpang Ampat Railway Station மலாய்: Stesen Keretapi Simpang Ampat); சீனம்: 新邦安拔火车站) என்பது தீபகற்ப மலேசியா, பினாங்கு மாநிலத்தில் சிம்பாங் அம்பாட் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் சிம்பாங் அம்பாட் மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.[1]

சிம்பாங் அம்பாட்
மலாயா தொடருந்து நிறுவனம் கேடிஎம் கொமுட்டர்

Simpang Ampat Railway Station
சிம்பாங் அம்பாட் (2024)
பொது தகவல்கள்
அமைவிடம்சிம்பாங் அம்பாட்
பினாங்கு  மலேசியா
ஆள்கூறுகள்5°17′10″N 100°28′51″E / 5.2860°N 100.4809°E / 5.2860; 100.4809
உரிமம் மலாயா தொடருந்து நிறுவனம்
தடங்கள் 1   மலாயா மேற்கு கடற்கரை 
நடைமேடை2 நடை மேடைகள்
இருப்புப் பாதைகள்2
இணைப்புக்கள்உள்ளூர் போக்குவரத்து
கட்டமைப்பு
தரிப்பிடம்Parking இலவசம்
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
வரலாறு
திறக்கப்பட்டது1917
மின்சாரமயம்2015
சேவைகள்
முந்தைய நிலையம்   கேடிஎம் கொமுட்டர்   அடுத்த நிலையம்
   
புக்கிட் மெர்தாஜாம்
பட்டர்வொர்த்
 
  Komuter  
 Ipoh Butterworth 
 
நிபோங் திபால்
ஈப்போ
அமைவிடம்
Map
சிம்பாங் அம்பாட் தொடருந்து நிலையம்

மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் எனும் தீபகற்ப மலேசிய மேற்கு கரை வழித்தடத்தின் (KTM Wast Coast Railway Line), ஈப்போ - பட்டர்வொர்த் துணைத் தடத்தில் (KTM Komuter Northern Sector Route No. 1.) உள்ளது.

ஈப்போ - பாடாங் பெசார் மின்மயமாக்கல்; மற்றும் இரட்டை தண்டவாளத் திட்டத்தின் ஒரு பகுதியாக கொடியாங் நகரில் புதிய தொடருந்து நிலையம் கட்டப்பட்டது. 2015-ஆம் ஆண்டில் செயல்படத் தொடங்கிய இந்த நிலையம் கேடிஎம் கொமுட்டர் நிறுவனத்தின் தொடருந்துகளால் சேவை செய்யப் படுகிறது.[2]

சிம்பாங் அம்பாட்

தொகு

சிம்பாங் அம்பாட் (Simpang Ampat) என்பது மலேசியா, பினாங்கு, தென் செபராங் பிறை மாவட்டத்தில் (Central Seberang Perai District), பத்து காவான் மக்களவை தொகுதியில் (Bukit Mertajam Federal Constituency) உள்ள ஒரு சிறு நகரம் ஆகும். பட்டர்வொர்த் நகரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.

இந்த நகரத்தின் வடக்கில் புக்கிட் மெர்தாஜாம் நகரம்; கிழக்கில் சூன்சாங் நகரம்; தெற்கில் சுங்கை பாக்காப் நகரம்; மேற்கில் பத்து காவான் நகரம் ஆகிய நகரங்கள் உள்ளன. நான்கு நகரங்களுக்கு நடுவில் இந்த நகரம் அமைந்து இருப்பதால் இதற்கு சிம்பாங் அம்பாட் என பெயர் வைக்கப்பட்டது.

சிம்பாங் (Simpang) என்றால் மலாய் மொழியில் சந்திப்பு அல்லது சந்திக்கும் இடம்; அம்பாட் (Ampat) என்றால் எண்ணிக்கையில் நான்கு என்று பொருள்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Simpang Ampat Railway Station". Transport Malaysia. 24 November 2010. பார்க்கப்பட்ட நாள் 8 December 2024.
  2. "KTM Simpang Ampat Railway Station (Stesen Keretapi Simpang Ampat) is a small railway station located in the state of Penang and is served by regular Komuter Trains (commuter) on the Ipoh - Bukit Mertajam - Butterworth Komuter Utara Route". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 8 December 2024.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு