சுங்கை பாக்காப்
சுங்கை பாக்காப் (ஆங்கிலம்: Sungai Bakap; மலாய்: Sungai Bakap; சீனம்: 双溪峇甲); என்பது மலேசியா, பினாங்கு, தென் செபராங் பிறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம். இந்த நகரத்திற்கு தெற்கில் ஜாவி ஆறு (Sungai Jawi); வடக்கில் சிம்பாங் அம்பாட் (Simpang Ampat) நகரமும்; வால்டோர் கிராமமும் உள்ளன.[1]
சுங்கை பாக்காப் | |
---|---|
Sungai Bakap | |
மலேசியாவில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 5°12′00″N 100°30′00″E / 5.20000°N 100.50000°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பினாங்கு |
மாவட்டம் | தென் செபராங் பிறை |
அரசு | |
• உள்ளூராட்சி | செபராங் பிறை |
• நகராண்மைக் கழகத் தலைவர் | ரொசாலி முகமட் |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 14200 |
மலேசியத் தொலைபேசி | +6045 |
மலேசியப் போக்குவரத்து எண் | P |
இணையதளம் | http://www.mpsp.gov.my |
நிபோங் திபால் நகரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. இருப்பினும் மிக அருகாமையில் உள்ள பெரிய நகரம் புக்கிட் மெர்தாஜாம்.
ஈப்போ, கோலாலம்பூர், பினாங்கு, அலோர் ஸ்டார் போன்ற மாநகரங்களில் இருந்து சுற்றுப் பயணிகள் இங்கு வந்து ஓய்வு எடுத்துக் கொள்வது வழக்கம். இங்கு மலிவான விலையில் உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன. அதனால் அதிகமான அளவில் சுற்றுப் பயணிகள் இங்கு வருகிறார்கள்.
கிராமப் பகுதிகள்
தொகுசுங்கை பாக்காப் நகர்ப் பகுதியில் சில கிராமங்கள் உள்ளன. அவற்றுள் வால்டோர் கிராமம் இந்த நகரத்திற்கு மிக முக்கியமான இடமாகும். இங்கு நிறைய உணவகங்கள் உள்ளன.
- ஜாலான் ஸ்டேசன் கிராமம் (Kampung Jalan Stesen)
- தித்தி ஈத்தாம் கிராமம் (Kampung Titi Hitam)
- மஸ்ஜித் பாரு கிராமம் (Kampung Masjid Baru)
- ஜாவி, சுங்கை பாக்காப் கிராமம் (Kampung Jawi, Sungai Bakap)
- லீமா கொங்சி கிராமம் (Kampung Lima Kongsi)
- வால்டர் கிராமம் (Kampung Valdor)
சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிகள்
தொகுசுங்கை பாக்காப் நகர்ப்புறத்தில் 3 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 392 மாணவர்கள் பயில்கிறார்கள். 42 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
PBD4029 | சுங்கை பாக்காப் | SJK(T) Ldg Sempah | செம்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி | 14200 | சுங்கை ஜாவி | 82 | 10 |
PBD4032 | சுங்கை பாக்காப் | SJK(T) Ladang Valdor | வால்டோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 14200 | சுங்கை பாக்காப் | 189 | 17 |
PBD4034 | சுங்கை பாக்காப் | SJK(T) Sungai Bakap | சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி | 14200 | சுங்கை ஜாவி | 121 | 15 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sungai Bakap is a town in Seberang Perai Selatan. It is located immediately to the south of Valdor". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 April 2022.
வெளி இணைப்புகள்
தொகு