பாகன் செராய் தொடருந்து நிலையம்
பாகன் செராய் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Bagan Serai Railway Station மலாய்: Stesen Keretapi Bagan Serai); சீனம்: 巴力文打火车站) என்பது தீபகற்ப மலேசியா, பேராக், கிரியான் மாவட்டம், பாகன் செராய் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் பாகன் செராய் நகரத்திற்கும்; மற்றும் கிரியான் மாவட்டத்தின் சுற்றுப் புறங்களுக்கும் சேவை செய்கிறது.[1]
பாகன் செராய் Bagan Serai | ||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பாகன் செராய் தொடருந்து நிலையம் | ||||||||||||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||||||||||||
அமைவிடம் | பாகன் செராய் பேராக் மலேசியா | |||||||||||||||||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து | |||||||||||||||||||||||||
தடங்கள் | 1 கேடிஎம் கொமுட்டர் மலாயா மேற்கு கடற்கரை ETS கேடிஎம் இடிஎஸ் | |||||||||||||||||||||||||
நடைமேடை | 2 நடை மேடைகள் | |||||||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | |||||||||||||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||||||||||||
தரிப்பிடம் | கட்டணம் | |||||||||||||||||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உண்டு | |||||||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | |||||||||||||||||||||||||
வரலாறு | ||||||||||||||||||||||||||
மறுநிர்மாணம் | 2013 | |||||||||||||||||||||||||
மின்சாரமயம் | 2015 | |||||||||||||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||
|
மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் எனும் தீபகற்ப மலேசிய மேற்கு கரை வழித்தடத்தில் (KTM Wast Coast Railway Line), பேராக் மாநிலத்தின் பாகன் செராய் நகரில் இந்த நிலையம் உள்ளது. இந்த நிலையம் வடக்கில் பாரிட் புந்தார் நிலையத்திற்கும்; தெற்கில் கமுந்திங் நகரத்திற்கும் இடையில் உள்ளது.[2]
பொது
தொகுஈப்போ - பாடாங் பெசார் மின்மயமாக்கல்; மற்றும் இரட்டை தண்டவாளத் திட்டத்தின் ஒரு பகுதியாக 2013-ஆம் ஆண்டில், பாகன் செராய் நகரில் புதிய தொடருந்து நிலையம் கட்டப்பட்டது. 2015-இல் செயல்படத் தொடங்கிய இந்த நிலையம் கேடிஎம் கொமுட்டர்; கேடிஎம் இடிஎஸ் தொடருந்துகளால் சேவை செய்யப் படுகிறது.
பாகன் செராய் நகரம்
தொகுபாகன் செராய் (Bagan Serai) பேராக் மாநிலத்தில், கிரியான் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். பினாங்கு பெருநகரத்தில் இருந்து 52 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கிரியான் நெல் அறுவடை திட்டத்தின் கீழ், பாகன் செராய் நகரம் ஒரு முக்கியமான நெல் சேகரிப்பு மையமாக விளங்குகிறது.
இதற்கு கிரியான் நீர்ப் பாசனத் திட்டம் (Kerian Irrigation Scheme) என்றும் பெயர். மலேசியாவில் மிகப் பழைமையான நீர்ப் பாசனத் திட்டம் ஆகும். பாகன் செராய் நகருக்கு அருகில் செமாங்கோல்; அலோர் பொங்சு; பாரிட் புந்தார்; கோலா குராவ்; கோலா கூலா நகரங்கள் உள்ளன.[3]
போக்குவரத்து
தொகுபொது போக்குவரத்தைப் பொறுத்த வரையில் ’தி ரெட் ஆம்னிபஸ்’ (The Red Omnibus) எனும் தனியார் நிறுவனம் நிர்வகிக்கிறது. பாகன் செராய் நகரம் ஒரு முக்கியப் பேருந்து நிலையத்தைக் கொண்டு உள்ளது. பாகன் செராய் புதிய நகரத்தில் பாகன் செராய் பிரதான சந்தைக்கு அருகில் அமைந்து உள்ளது. பேருந்து நிலையத்தில் வாடகைக்கார் சேவையும் உள்ளது.
விரைவு பேருந்துகள் பாகன் செராய் நகரில் இருந்து கோலாலம்பூர்; ஜார்ஜ் டவுன்; கூலிம்; அலோர் ஸ்டார்; ஈப்போ உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்கின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Bagan Serai KTM Railway Station is a KTM train station located at and named after the town of Bagan Serai, Perak". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 20 July 2023.
- ↑ "The station is between the Parit Buntar Railway Station in the north and the Kamunting Railway Station in the south". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 20 July 2023.
- ↑ Kerian Irrigation Scheme, situated at the northwest corner of the state of Perak in Peninsular Malaysia, is one of the oldest schemes in Malaysia.