கோலா குராவ்
கோலா குராவ் என்பது (மலாய்:Kuala Kurau; ஆங்கிலம்:Kuala Kurau; சீனம்:瓜拉古劳) மலேசியா, பேராக் மாநிலத்தில், கிரியான் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். மீன்பிடி தொழில்; விவசாயம் ஆகிய இரண்டும் இந்தப் பகுதியின் முக்கியத் தொழில்களாகும். கிளிஞ்சல் வளர்ப்பதற்கும் பெயர் பெற்ற இடம்.[1]
ஆள்கூறுகள்: 5°1′N 100°24′E / 5.017°N 100.400°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பேராக் |
உருவாக்கம் | 1840 |
பரப்பளவு | |
• மொத்தம் | 138.90 km2 (53.63 sq mi) |
மக்கள்தொகை (2015) | |
• மொத்தம் | 31,065 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
பினாங்குத் தீவிற்கு அருகாமையில் உள்ளது. கோலா குராவ் நகருக்கு அருகில் உள்ள நகரங்கள் நிபோங் திபால்; தைப்பிங். கோலா குராவ் நகருக்கு அருகில் செமாங்கோல்; அலோர் பொங்சு; பாரிட் புந்தார்; பாகன் செராய்; கோலா கூலா நகரங்கள் உள்ளன. கோலா குராவ் நகரத்தைச் சுற்றிலும் நிறைய ரப்பர், செம்பனைத் தோட்டங்கள் உள்ளன.
வரலாறு
தொகுகோலா குராவ் பகுதிக்கு மக்கள் எப்போது குடியேறினார்கள் என்பது இதுவரையிலும் கண்டுபிடிக்க முடியவில்லை.[2] ஆயினும் 1800-களில் காபி கரும்புத் தோட்டங்கள் திறக்கப்பட்டதும் மக்களின் முதல் குடியேற்றம் நடந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. 1840-ஆம் ஆண்டுகளில் தமிழர்களின் குடியேற்றம் நடந்து உள்ளது.
கோலா குராவ் தமிழர்கள்
தொகு1900-ஆம் ஆண்டுகளில் கோலா குராவ் பகுதியில் நிறைய ரப்பர் தோட்டங்கள் திறக்கப்பட்டன. அதற்கு முன்னர் 1870-ஆம் ஆண்டுகளில் அங்கே பெரும்பாலும் காபி கரும்புத் தோட்டங்கள். இந்தக் காபி கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்காகத் தமிழ் நாட்டில் இருந்து தமிழர்கள் அழைத்து வரப் பட்டார்கள்.[3]
1895-ஆம் ஆண்டுகளில் அனைத்துலக அளவில் காபியின் விலை குறைந்தது. காபிச் செடிகளுக்கும் அடுத்தடுத்து நோய்கள் வந்தன. அதனால் காபி தோட்ட முதலாளிகள் ரப்பர் பயிர் செய்வதில் தீவிரம் காட்டினர். காபி கரும்புத் தோட்டங்களில் வேலை செய்ய வந்த மலாயா தமிழர்கள் ரப்பர் தோட்டங்களுக்குள் புலம் பெயர்ந்தனர்.
கோலா குராவ் ஜின் ஹெங் தோட்டம்
தொகுஅந்த வகையில் கோலா குராவ் வட்டாரத்தில் பல ரப்பர் தோட்டங்கள் உருவாக்கப் பட்டன. அப்போது உருவானது தான் கோலா குராவ், ஜின் ஹெங் தோட்டம் (Jin Heng Estate, Kuala Kurau, Perak). இந்தத் தோட்டம் பினாங்கில் இருந்து 40 மைல் தொலைவில் உள்ளது. நீராவிக் கப்பல்கள் பயன்படுத்தப் பட்டன.[4]
அமைவு
தொகுகிரியான் மாவட்டத்தின் 8 துணை மாவட்டங்கள் உள்ளன. அவையாவன: பாரிட் புந்தார்; பாகன் தியாங்; தஞ்சோங் பியாண்டாங்; கோலா குராவ்; பெரியா; பாகன் செராய்; குனோங் செமாங்கோல்; மற்றும் செலின்சிங். இவற்றுள் கோலா குராவ் ஒன்றாகும்.
கோலா குராவ் தமிழ்ப்பள்ளிகள்
தொகு1. கோலா குராவ் தமிழ்ப்பள்ளி (SJKT Kuala Kurau). மாணவர்கள் எண்ணிக்கை: 24.
2. செர்சோனிஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி (SJKT Ladang Chersonese) மாணவர்கள் எண்ணிக்கை: 32.
3. கூலா தோட்டத் தமிழ்ப்பள்ளி (SJKT Ladang Gula) மாணவர்கள் எண்ணிக்கை: 24.
மேற்கோள்கள்
தொகு- ↑ Kuala Kurau, a small fishing village in the northern part of Perak is the one of the great getaway destination from the hustling city life.
- ↑ Setakat ini belum dapat dikesan tarikh sebenar Kuala Kurau dibuka. Namun berdasarkan kepada ingatan orang tua-tua diyakini bahawa ia dibuka sekitar tahun 1800-an dahulu.
- ↑ 1870-ஆம் ஆண்டுகளில் காபி கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்காகத் தமிழ் நாட்டில் இருந்து தமிழர்கள் அழைத்து வரப் பட்டார்கள்.
- ↑ Jin Heng estate, owned by Mr. Heah Swee Lee.