கமுந்திங் தொடருந்து நிலையம்

மலேசியா, பேராக் மாநிலத்தில் கமுந்திங் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம்

கமுந்திங் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Kamunting Railway Station மலாய்: Stesen Keretapi Kamunting); சீனம்: 甘文丁火车站) என்பது தீபகற்ப மலேசியா, பேராக் மாநிலத்தில் கமுந்திங் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் கமுந்திங் மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.

கமுந்திங்
Kamunting
மலாயா தொடருந்து நிறுவனம் கேடிஎம் இடிஎஸ் கேடிஎம் கொமுட்டர்
பொது தகவல்கள்
அமைவிடம்கமுந்திங்
பேராக்  மலேசியா
ஆள்கூறுகள்5°17′10″N 100°28′51″E / 5.2860°N 100.4809°E / 5.2860; 100.4809
உரிமம் மலாயா தொடருந்து நிறுவனம்
தடங்கள் 1  கேடிஎம் கொமுட்டர்  மலாயா மேற்கு கடற்கரை 
நடைமேடை2 நடை மேடைகள்
இருப்புப் பாதைகள்4
இணைப்புக்கள்உள்ளூர் போக்குவரத்து
கட்டமைப்பு
தரிப்பிடம்Parking இலவசம்
துவிச்சக்கர வண்டி வசதிகள் உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
வரலாறு
திறக்கப்பட்டது1890[1]
மறுநிர்மாணம்1900s-1910; அக்டோபர் 2013
மின்சாரமயம்2015
சேவைகள்
முந்தைய நிலையம்   கேடிஎம் கொமுட்டர்   அடுத்த நிலையம்
   
பாகன் செராய்
பட்டர்வொர்த்
 
  Komuter  
 Ipoh Butterworth 
 
தைப்பிங்
ஈப்போ
அமைவிடம்
Map
கமுந்திங் தொடருந்து நிலையம்

இந்த நிலையம் மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் எனும் தீபகற்ப மலேசிய மேற்கு கரை வழித்தடத்தின் (KTM Wast Coast Railway Line), ஈப்போ - பட்டர்வொர்த் துணைத் தடத்தில் (KTM Komuter Northern Sector Route No. 1.) உள்ளது.

பொது

தொகு

ஈப்போ - பாடாங் பெசார் மின்மயமாக்கல்; மற்றும் இரட்டை தண்டவாளத் திட்டத்தின் ஒரு பகுதியாக க்முந்திங் நகரில் புதிய தொடருந்து நிலையம் கட்டப்பட்டது. அக்டோபர் 2013-இல் செயல்படத் தொடங்கிய இந்த நிலையம் கேடிஎம் கொமுட்டர் நிறுவனத்தின் தொடருந்துகளால் சேவை செய்யப் படுகிறது.[2]

கமுந்திங்

தொகு

கமுந்திங் (Kamunting) என்பது மலேசியா, பேராக், லாருட், மாத்தாங், செலாமா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். தைப்பிங் நகரத்தின் பெரும் துணைநகரமாகவும் விளங்குகிறது. ஈப்போ மாநகரில் இருந்து 72 கி.மீ. தொலைவில் வடக்கே உள்ளது. மிக அருகாமையில் இருப்பது தைப்பிங் பெருநகரம் ஆகும்.

இந்த நகரத்தைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் இருப்பதால், இதை ஒரு தொழிற்துறைப் பூங்கா என்று அழைப்பதும் உண்டு.[3] இங்குதான் கமுந்திங் தடுப்பு மையம் உள்ளது.

ஈய உற்பத்தி

தொகு

1890-ஆம் ஆண்டுகளில் கமுந்திங் ஓர் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்தது. தைப்பிங் நகரம் ஈய உற்பத்தியில் புகழ்பெற்று விளங்கிய காலத்தில், அப்பகுதி வாழ் மக்கள், ஈய மூட்டைகளைச் சுமந்து செல்ல யானைகளைப் பயன்படுத்தினர்.[4]

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு காட்டுப் பகுதியாக இருந்த கமுந்திங், தற்போது தொழில் வளர்ச்சி பெற்ற நகரமாக இயங்கி வருகிறது. இதை தைப்பிங் பெருநகரத்தின், துணை நகரம் என்று அழைக்கிறார்கள்.

மேற்கோள்கள்

தொகு
  1. Sunderland, David, ed. (2014). "Fifty Years of Railways in Malaya". British Economic Development in South East Asia, 1880–1939, Volume 3. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84893-488-7.
  2. "KTM Simpang Ampat Railway Station (Stesen Keretapi Simpang Ampat) is a small railway station located in the state of Penang and is served by regular Komuter Trains (commuter) on the Ipoh - Bukit Mertajam - Butterworth Komuter Utara Route". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 8 December 2024.
  3. Greater Kamunting Industrial Area near Taiping as the current Kamunting Industrial Area has almost reached its maximum capacity.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. An elephant which was used by the miners escaped into the nearby Kamunting jungles and when recaptured was found to be covered with mud rich in tin ore.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு