சுங்கை பீசி நிலையம்

கோலாலம்பூர், சுங்கை பீசி பகுதியில் அமைந்துள்ள எல்ஆர்டி, எம்ஆர்டி மாற்றுவழிப் போக்குவரத்து

சுங்கை பீசி நிலையம் (ஆங்கிலம்: Sungai Besi Station; மலாய்: Stesen Sungai Besi; சீனம்: 新街場) என்பது மலேசியா, கோலாலம்பூர், சுங்கை பீசி பகுதியில் அமைந்துள்ள எல்ஆர்டி, எம்ஆர்டி மாற்றுவழிப் போக்குவரத்து (Interchange station) நிலையமாகும்.

 SP16   PY29 
சுங்கை பீசி
| எல்ஆர்டி | எம்ஆர்டி
Sungai Besi Station
சுங்கை பீசி நிலையம் (2023)
பொது தகவல்கள்
அமைவிடம்சுங்கை பீசி கோலாலம்பூர்
 மலேசியா
ஆள்கூறுகள்3°3′50.2″N 101°42′28.8″E / 3.063944°N 101.708000°E / 3.063944; 101.708000
உரிமம் பிரசரானா
இயக்குபவர்Rapid_KL_Logo ரேபிட் ரெயில்[1]
தடங்கள்  செரி பெட்டாலிங் 
 புத்ராஜெயா 
நடைமேடை4 பக்க மேடைகள்
இருப்புப் பாதைகள்2 எல்ஆர்டி; 2 எம்ஆர்டி
இணைப்புக்கள்திட்டத்தில்: மாஜு கேஎல் நிலையம்
பத்துமலை–புலாவ் செபாங்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகை SP16   PY29  உயர்த்தப்பட்ட நிலை
நடைமேடை அளவுகள்4
தரிப்பிடம் இல்லை
துவிச்சக்கர வண்டி வசதிகள்விசையுந்து இல்லை
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு SP16   PY29 
வரலாறு
திறக்கப்பட்டது SP16  16 திசம்பர் 1996
 PY29  16 மார்ச் 2003
சேவைகள்
முந்தைய நிலையம்   ரேபிட் கேஎல்   அடுத்த நிலையம்
   
தாசேக் செலாத்தான்
தீமோர்
 
 ரேபிட் கேஎல் 
செரி பெட்டாலிங்
 
புக்கிட் ஜாலில் எல்ஆர்டி
புத்ரா அயிட்ஸ்
தாமான் நாகா இமாஸ்
குவாசா டாமன்சாரா
 
 ரேபிட் கேஎல் 
புத்ராஜெயா வழித்தடம்
 
செர்டாங் ராயா
புத்ரா சென்ட்ரல்
அமைவிடம்
Map
சுங்கை பீசி நிலையம்

இந்த நிலையத்திற்கு செரி பெட்டாலிங் வழித்தடம் (LRT Sri Petaling Line), புத்ராஜெயா வழித்தடம் (MRT Putrajaya Line) ஆகிய 2 வழித்தடங்கள் சேவை செய்கின்றன.[2]

சுங்கை பீசி நிலையத்தைப் பயன்படுத்தும் இரண்டு தொடருந்து வழித்தடங்களுக்கும் இடையே ஒரு தடையற்ற கட்டண ஒருங்கிணைப்பு முறைமை பயன்பாட்டில் உள்ளது.

அமைவு

தொகு

சுங்கை பீசி விரைவுச் சாலை மற்றும் சா ஆலாம் விரைவுச்சாலை (KESAS Highway) ஆகிய இரு விரைவுச்சாலைகள், சுங்கை பீசி வட்டாரத்தில் மிகவும் பரபரப்பான சாலைகளாகும். அவற்றின் சந்திப்புகளில் தான் இந்த நிலையமும் அமைந்துள்ளது.

சுங்கை பீசி நகரின் சுங்கை பீசி சாலையில் இந்த நிலையம் அமைந்துள்ளது. பாங்சபுரி பெர்மாய் குடியிருப்புகள், பிபிஆர் ராயா பெர்மாய் குடியிருப்புகளில் இருந்து இணைப்புப் பாலம் வழியாக இந்த நிலையத்தை அணுகலாம்.

வசதிகள்

தொகு

இலகு விரைவுப் போக்குவரத்து வழித்தடங்களில் உள்ள நிலையங்களைப் போலவே இந்த நிலையமும் உயரத்தப்பட்ட நிலையில் உள்ளது.

மேல் தளத்தில் இயங்குதளங்கள் உள்ளன. நடு தளத்தில் பயணச்சீட்டு தானியங்கிகள், பொருட்கள் வைக்குமிடம்; பயணத்திற்காகக் காத்திருக்கும் வசதிகள் உள்ளன.

புத்ராஜெயா வழித்தடம்

தொகு

புத்ராஜெயா வழித்தடம் அல்லது புத்ராஜெயா கொமுட்டர் வழித்தடம் என்பது மலேசியா, கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள எம்ஆர்டி (Mass Rapid Transit) தொடருந்து வழித்தடம் ஆகும்.

இந்த வழித்தடம் மலேசிய நாட்டின் மூன்றாவது முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து வழித்தடமாக அறியப்படுகிறது. முன்பு இந்த வழித்தடம் எம்ஆர்டி சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா வழித்தடம் (MRT Sungai Buloh–Serdang–Putrajaya Line) (SSP Line) என அறியப்பட்டது.

குவாசா டாமன்சாரா எம்ஆர்டி நிலையத்தில் இருந்து புத்ராஜெயா சென்ட்ரல் வரை நீண்டு செல்லும் இந்த வழித்தடமானது; செரி டாமன்சாரா, கெப்போங், பத்து, ஈப்போ சாலை, செந்தூல், கம்போங் பாரு, துன் ரசாக் சாலை, கோலாலம்பூர் கோபுரம், துன் ரசாக் எக்ஸ்சேஞ்ச், கூச்சாய் லாமா, செரி கெம்பாங்கான் மற்றும் சைபர்ஜெயா போன்ற மக்கள் அடர்த்தியான பகுதிகள் வழியாகச் செல்கிறது.

குவாசா டாமன்சாரா

தொகு

குவாசா டாமன்சாரா மற்றும் கம்போங் பத்து ஆகிய புறநகர்ப் பகுதிகளின் இடையிலான பாதையின் முதல் கட்டச் செயல்பாடுகள் 16 சூன் 2022-இல் தொடங்கின.[3] 2023 மார்ச் 16-ஆம் தேதி நிலத்தடி சுரங்கப்பாதை உட்பட மீதமுள்ள பாதையை உள்ளடக்கிய 2-ஆம் கட்டம் திறக்கப்பட்டது.[4]

அதிகாரப்பூர்வ போக்குவரத்து வரைபடங்களில், புத்ராஜெயா வழித்தடத்தின் எண் 12 என மஞ்சள் நிறத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது. இந்த வழித்தடம் எம்ஆர்டி நிறுவனத்திற்கு (MRT Corp) சொந்தமானது.

காட்சியகம்

தொகு

சுங்கை பீசி நிலையக் காட்சிப் படங்கள் (2023):

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Rapid KL's LRT operation is run by Rapid Rail Sdn Bhd". MyRapid. பார்க்கப்பட்ட நாள் 15 November 2024.
  2. "LRT Ampang Line / Sri Petaling Line meant both stations are designated in transit maps as interchange stations". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 25 November 2024.
  3. "MRT Corp". www.facebook.com (in ஆங்கிலம்). Archived from the original on 19 May 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-03-20.
  4. "Putrajaya MRT line set for full opening on March 16". Free Malaysia Today. பார்க்கப்பட்ட நாள் 3 March 2023.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுங்கை_பீசி_நிலையம்&oldid=4166089" இலிருந்து மீள்விக்கப்பட்டது