செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையம்
செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையம் அல்லது செந்தூல் தீமோர் இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Sentul Timur LRT Station; மலாய்: Stesen LRT Sentul Timur; சீனம்: 冼都东) என்பது மலேசியா, கோலாலம்பூர், அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம்; ஆகிய வழித்தடங்கள் பரிமாறும் இடத்தில் அமைந்துள்ள ஓர் இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.[3]
செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையம் (2022) | |||||||||||||||||||||
பொது தகவல்கள் | |||||||||||||||||||||
வேறு பெயர்கள் | Stesen LRT Sentul Timur (மலாய்) 冼都东 (சீனம்) | ||||||||||||||||||||
அமைவிடம் | சாலை 2/48A, செந்தூல் கோலாலம்பூர் மலேசியா | ||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 3°11′9″N 101°41′43″E / 3.18583°N 101.69528°E | ||||||||||||||||||||
உரிமம் | பிரசரானா | ||||||||||||||||||||
இயக்குபவர் | ரேபிட் ரெயில்[1] | ||||||||||||||||||||
தடங்கள் | அம்பாங் செரி பெட்டாலிங் | ||||||||||||||||||||
நடைமேடை | 2 பக்க மேடைகள் | ||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 4 | ||||||||||||||||||||
இணைப்புக்கள் | ரேபிட் கேஎல் | ||||||||||||||||||||
கட்டமைப்பு | |||||||||||||||||||||
கட்டமைப்பு வகை | உயர்த்தப்பட்ட நிலையம் | ||||||||||||||||||||
நடைமேடை அளவுகள் | 2 | ||||||||||||||||||||
தரிப்பிடம் | (55) கட்டணம் | ||||||||||||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உண்டு | ||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | ||||||||||||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||||||||||||
நிலையக் குறியீடு | AG1 SP1 | ||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||
திறக்கப்பட்டது | 6 திசம்பர் 1998[2] | ||||||||||||||||||||
சேவைகள் | |||||||||||||||||||||
| |||||||||||||||||||||
|
உயர்த்தப்பட்ட நிலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நிலையம், கோலாலம்பூர், செந்தூல் நகர்ப்புறத்தில் அமைந்துள்ளது. நடுத்தர மற்றும் குறைந்த விலை மனைத்திட்டங்களால் சூழப்பட்டுள்ள இந்த நிலையத்திற்கு அருகில் பங்சாபுரி மெலூர் (Pangsapuri Melur) எனும் பிரபலமான அடுக்குமாடி மனை வளாகம் உள்ளது.
பொது
தொகுசெந்தூல் என்பது கோலாலம்பூரில் உள்ள ஒரு முக்கிய நகரமாகும். இது செந்தூல் பாராட் (Sentul Barat) மற்றும் செந்தூல் தீமோர் (Sentul Timur) என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. செந்தூல் சாலை மற்றும் ஈப்போ சாலை ஆகியவை இப்பகுதிகளுக்குச் சேவை செய்யும் இரண்டு முக்கிய சாலைகள் ஆகும்.
இந்தச் செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையம், ஒரு பரிமாற்ற நிலையமாக நியமிக்கப்படாவிட்டாலும், இதே SP1 செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையத்திலிருந்து பத்துமலை–புலாவ் செபாங் வழித்தடத்தில் உள்ள KC01 செந்தூல் கொமுட்டர் நிலையம் வரை பயணிகள் நடந்தே செல்லலாம். நடந்து செல்ல ஏறக்குறைய 15 - 20 நிமிடங்கள் பிடிக்கும்.
வரலாறு
தொகுஇந்த நிலையம் அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம்; ஆகிய இரு வழித்தடங்கள் மூலமாக்ச் சேவை செய்யப்படுகிறது. முன்னாள் இஸ்டார் எல்ஆர்டி அமைப்பின் இரண்டாம் கட்ட கட்டுமானத்தின் ஒரு பகுதியாக, 1998-இல் இந்த நிலையம் திறக்கப்பட்டது.
இந்த நிலையம் செந்தூல் தீமோர் நகரையும்; மற்றும் சுற்றியுள்ள பகுதிகளையும் இணைக்கும் இலக்கைக் கொண்டது.
செரி பெட்டாலிங் வழித்தடம்
தொகுஅம்பாங் வழித்தடம்; மற்றும் செரி பெட்டாலிங் வழித்தடங்கள், முன்பு இலகு தொடருந்து இஸ்டார் (LRT STAR) (Sistem Transit Aliran Ringan) வழித்தடம் என்று அழைக்கப்பட்டன. செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையத்தில் இருந்து அம்பாங் நிலையம் மற்றும் செரி பெட்டாலிங் நிலையம் வழியாக சோவ் லின் நிலையத்திற்கு இரண்டு தடங்களைக் கொண்டிருந்தது.
இலகு தொடருந்து இஸ்டார் திட்டம் முதன்முதலில் 1981-ஆம் ஆண்டு மலேசியப் போக்குவரத்து தலையாயத் திட்டத்தில் முன்மொழியப்பட்டது. கோலாலம்பூர் நகர மையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுடன் இணைக்கும் இலகு தொடருந்து வழித்தடங்களுக்கான ஒரு வலையமைப்பை அரசாங்கம் முன்மொழிந்தது.
ஒப்பந்தம்
தொகுடிசம்பர் 1992-இல் அரசாங்கத்திற்கும் இஸ்டார் நிறுவனத்திற்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது.[4]
25 நிலையங்களைக் கொண்ட அசல் அமைப்பு (27.4 கிமீ - 17.0 மைல்) நீளம் கொண்டது. இரண்டு கட்டங்களில் கட்டப்பட்டது. முதல் கட்டம் (12.4 கிமீ - 7.7 மைல்); 14 நிலையங்களைக் கொண்டது. இரண்டாம் கட்டம் (15 கிமீ - 9.3 மைல்); 11 நிலையங்களைக் கொண்டது. இரண்டு கட்டங்களும் முறையே டிசம்பர் 1996 மற்றும் சூலை 1998-இல் திறக்கப்பட்டன.[5][6]
செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலைய தள அமைப்பு
தொகுL2 - இரண்டாவது மாடி | தீவு மேடையின் கதவுகள் இடதுபுறத்தில் திறக்கப்படும் | |
AG/SP தெற்கு திசை | → (→) AG18 அம்பாங் (செந்தூல்) → (→) SP31 புத்ரா அயிட்ஸ் (செந்தூல்) | |
AG/SP வடக்கு திசை | இந்த நிலையத்தில் முடிகிறது, வெளியேறவும் | |
பக்க மேடை, தீவு மேடையின் கதவுகள் இடதுபுறத்தில் திறக்கப்படும் | ||
L1 - முதலாவது மாடி | பொருட்கள் வைக்குமிடம் | கட்டணம் கட்டுப்பாடு, பயணச்சீட்டு தானியங்கி, நிலையக் கட்டுப்பாடு, கடைகள் |
G - தெருநிலை | சாலைவழி | நுழைவு/வெளியேறுதல், வாகன நிறுத்தம், பேருந்து நிறுத்தங்கள், வாடகை வாகனங்கள் மற்றும் தனியார் வாகனங்கள் |
காட்சியகம்
தொகுசெந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையக் காட்சிப் படங்கள்:
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Rapid KL's LRT operation is run by Rapid Rail Sdn Bhd, which is responsible for overseeing the urban rail lines of Ampang Line and Sri Petaling Line, Kelana Jaya Line, other than the Monorail Line services". MyRapid. பார்க்கப்பட்ட நாள் 15 November 2024.
- ↑ "4 stesen baharu LRT beroperasi Jumaat ini". 28 March 2016.
- ↑ "Prasarana is the owner-operator of the country's rail services, including LRT networks, KL Monorail and the MRT lines". Rapid Rail Explorer. பார்க்கப்பட்ட நாள் 17 November 2024.
- ↑ An LRT-Bus strategy for greater Kuala Lumpur: What future integration?, page 9-10
- ↑ Trolley Wire, page 12-14
- ↑ Light Rail Transit Stations பரணிடப்பட்டது 20 ஆகத்து 2017 at the வந்தவழி இயந்திரம், page 4
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Sentul Timur LRT station தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.