அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம்
அம்பாங் வழித்தடம் - செரி பெட்டாலிங் வழித்தடம் (ஆங்கிலம்: LRT Ampang Line - LRT Sri Petaling Line மலாய்: Laluan LRT Ampang - Laluan LRT Sri Petaling) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள இலகு விரைவு தொடருந்து வழித்தடங்கள் (Light Rapid Transit Line) (LRT) ஆகும்.
அம்பாங் வழித்தடம் Ampang Line செரி பெட்டாலிங் வழித்தடம் Sri Petaling Line | |
---|---|
6- பெட்டிகள் கொண்ட CRRC Zhuzhou இலகு தொடருந்து | |
கண்ணோட்டம் | |
பூர்வீக பெயர் | LRT Laluan Ampang LRT Laluan Sri Petaling |
உரிமையாளர் | பிரசரானா மலேசியா |
வழித்தட எண் | ஆரஞ்சு அரக்கு |
வட்டாரம் | கிள்ளான் பள்ளத்தாக்கு |
முனையங்கள் |
|
நிலையங்கள் | 36 நிலையங்கள் & 2 நிலையங்கள் இருப்புவைப்பு |
இணையதளம் | My Rapid |
சேவை | |
வகை | இலகு தொடருந்து |
அமைப்பு | ரேபிட் கேஎல் |
சேவைகள் | அம்பாங் வழித்தடம்: செந்தூல் தீமோர் - அம்பாங் செரி பெட்டாலிங் வழித்தடம்: செந்தூல் தீமோர் - புத்ரா அயிட்ஸ் |
செய்குநர்(கள்) | ரேபிட் ரெயில் |
பணிமனை(கள்) | அம்பாங் கிடங்கு கோலா சுங்கை பாரு கிடங்கு |
சுழலிருப்பு | CSR Zhuzhou இலகு தொடருந்து 50 ஆறு பெட்டிகள் கொண்ட தொடருந்துகள் அகலம்: 2.65 m (8 அடி 8 அங்) - குறுகிய அமைப்பு நீளம்: 84.0 m (275.6 அடி) |
தினசரி பயணிப்போர் | 172,517 (Q2 2024)[1] |
பயணிப்போர் | 50.59 மில்லியன் (2023) 65.15 மில்லியன் (2019)[2] |
வரலாறு | |
திறக்கப்பட்டது | கட்டம் 1: சுல்தான் இசுமாயில் - அம்பாங் 16 திசம்பர் 1996 கட்டம் 2: சுல்தான் இசுமாயில்- செந்தூல் தீமோர் & சான் சோவ் லின் - செரி பெட்டாலிங் சூலை 1998 |
கடைசி நீட்டிப்பு | செரி பெட்டாலிங் - புத்ரா அயிட்ஸ் 30 சூன் 2016 |
தொழில்நுட்பம் | |
வழித்தட நீளம் | 45.1 km (28.0 mi) |
குணம் | உயர்மட்டம்; தைரைநிலை |
தட அளவி | 1,435 mm (4 ft 8 1⁄2 in) |
மின்மயமாக்கல் | 750 V DC |
இயக்க வேகம் | மத்திமம்: 60 km/h (37 mph) |
சமிக்ஞை செய்தல் | தொடர்பாடல் சார்ந்த தொடருந்து கட்டுப்பாடு |
இந்த இரு வழித்தடங்களின் ஒருங்கிணைந்த வலையமைப்பு 36 நிலையங்களைக் கொண்டது; மற்றும் 45.1 கிலோமீட்டர் (28.0 மைல்) நீளம் கொண்ட தடங்களைக் கொண்டுள்ளது. மலேசியாவில் செந்தர இரும்புப் பாதை மற்றும் தானியங்கி தொடருந்துகளைப் பயன்படுத்திய முதல் வழித்தடங்கள் இவைவே ஆகும்.
பிரசரானா மலேசியாவின் துணை நிறுவனமான ரேபிட் ரெயில் நிறுவனத்தின் ரேபிட் கேஎல் அமைப்பின் ஒரு பகுதியாக இந்த வழித்தடங்கள் இயக்கப்படுகின்றன.
பொது
தொகுஎல்ஆர்டி அம்பாங் வழித்தடத்தில் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குச் செல்ல 41 நிமிடங்களும்; எல்ஆர்டி செரி பெட்டாலிங் வழித்தடத்தில் செல்ல 74 நிமிடங்களும் பிடிக்கும்.
எல்ஆர்டி அம்பாங் வழித்தடத்தின் கிழக்கு முனையமான அம்பாங் நிலையத்தின் பெயரில் அம்பாங் வழித்திடத்திற்குப் பெயரிடப்பட்டது. எல்ஆர்டி செரி பெட்டாலிங் வழித்தடத்தின் அதன் முன்னாள் தெற்கு முனையமான செரி பெட்டாலிங் நிலையத்தின் பெயரில் செரி பெட்டாலிங் வழித்திடத்திற்குப் பெயரிடப்பட்டது.
ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு
தொகுஇந்த வழித்தடங்கள் மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமல்படுத்தப்பட்ட கிள்ளான் பள்ளத்தாக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பின் (Klang Valley Integrated Transit System) ஒரு பகுதியாகும்.
இந்த வழித்தடங்களில் 36 நிலையங்கள் உள்ளன. 45.1 கிலோமீட்டர் நீளமுள்ள பாதையில் பெரும்பாலும் நிலத்தடி மற்றும் உயரமான மேம்பால அடுக்குகளில் எல்ஆர்டி நிலையங்கள் இயங்குகின்றன.
வரலாறு
தொகுஅம்பாங் வழித்தடம்; மற்றும் செரி பெட்டாலிங் வழித்தடங்கள், முன்பு இலகு தொடருந்து ஸ்டார் (LRT STAR) (Sistem Transit Aliran Ringan) வழித்தடம் என்று அழைக்கப்பட்டன. செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையத்தில் இருந்து அம்பாங் நிலையம் மற்றும் செரி பெட்டாலிங் நிலையம் வழியாக சோவ் லின் நிலையத்திற்கு இரண்டு தடங்களைக் கொண்டிருந்தது.
இலகு தொடருந்து ஸ்டார் திட்டம் முதன்முதலில் 1981-ஆம் ஆண்டு மலேசியப் போக்குவரத்து தலையாயத் திட்டத்தில் முன்மொழியப்பட்டது. கோலாலம்பூர் நகர மையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுடன் இணைக்கும் இலகு தொடருந்து வழித்தடங்களுக்கான ஒரு வலையமைப்பை அரசாங்கம் முன்மொழிந்தது.
ஒப்பந்தம்
தொகுடிசம்பர் 1992-இல் அரசாங்கத்திற்கும் ஸ்டார் நிறுவனத்திற்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது.[3]
25 நிலையங்களைக் கொண்ட அசல் அமைப்பு (27.4 கிமீ - 17.0 மைல்) நீளம் கொண்டது. இரண்டு கட்டங்களில் கட்டப்பட்டது. முதல் கட்டம் (12.4 கிமீ - 7.7 மைல்); 14 நிலையங்களைக் கொண்டது. இரண்டாம் கட்டம் (15 கிமீ - 9.3 மைல்); 11 நிலையங்களைக் கொண்டது. இரண்டு கட்டங்களும் முறையே டிசம்பர் 1996 மற்றும் சூலை 1998-இல் திறக்கப்பட்டன.[4][5]
கிள்ளான் பள்ளத்தாக்கு வழித்தடங்கள்
தொகு- பத்துமலை–புலாவ் செபாங் வழித்தடம்
- தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம்
- அம்பாங் வழித்தடம்
- செரி பெட்டாலிங் வழித்தடம்
- கிளானா ஜெயா வழித்தடம்
- கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து
- கேஎல்ஐஏ போக்குவரத்து
- கோலாலம்பூர் மோனோரெயில்
- காஜாங் வழித்தடம்
- கேஎல் சென்ட்ரல்–இஸ்கைபார்க்
- சா ஆலாம் வழித்தடம்
- புத்ராஜெயா வழித்தடம்
- எம்ஆர்டி சுற்று வழித்தடம்
- சன்வே விரைவுப் பேருந்து வழித்தடம்
அம்பாங் வழித்தட நிலையங்கள்
தொகு- AG - Ampang; SP - Sri Petaling; MR - Monorail; PY - Putrajaya
குறியீடு | நிலையத்தின் பெயர் | இணைப்பு நிலையங்கள் |
AG1 | செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையம் | - |
AG2 | செந்தூல் எல்ஆர்டி நிலையம் | - |
AG3 | தித்திவங்சா நிலையம் | MR11 மோனோரெயில் PY17 புத்ராஜெயா |
AG4 | புத்ரா பன்னாட்டு மைய எல்ஆர்டி நிலையம் | KA04 புத்ரா கொமுட்டர் நிலையம் |
AG5 | சுல்தான் இசுமாயில் எல்ஆர்டி நிலையம் | MR9 மேடான் துவாங்கு மோனோரெயில் |
AG6 | பண்டாராயா எல்ஆர்டி நிலையம் | KA03 பேங்க் நெகாரா கொமுட்டர் நிலையம் |
AG7 | மஸ்ஜித் ஜமெயிக் எல்ஆர்டி நிலையம் | KJ13 கிளானா ஜெயா |
AG8 | பிளாசா ராக்யாட் எல்ஆர்டி நிலையம் | KG17 மெர்டேகா நிலையம் |
AG9 | ஆங் துவா நிலையம் | MR4 மோனோரெயில் |
AG10 | புடு எல்ஆர்டி நிலையம் | - |
AG11 | சான் சோவ் லின் நிலையம் | PY24 புத்ராஜெயா |
AG12 | மிகார்ஜா எல்ஆர்டி நிலையம் | - |
AG13 | மலூரி நிலையம் | KG22 காஜாங் |
AG14 | பாண்டான் ஜெயா எல்ஆர்டி நிலையம் | - |
AG15 | பாண்டான் இண்டா எல்ஆர்டி நிலையம் | - |
AG16 | செம்பாக்கா எல்ஆர்டி நிலையம் | - |
AG17 | சகாயா எல்ஆர்டி நிலையம் | - |
AG18 | அம்பாங் எல்ஆர்டி நிலையம் | - |
செரி பெட்டாலிங் வழித்தடம்
தொகு- AG - Ampang; KA - Kajang Ampang; KA - Kajang Ampang; KJ - Kelana Jaya; SP - Sri Petaling; MR - Monorail; PY - Putrajaya
காட்சியகம்
தொகுசெரி பெட்டாலிங் வழித்தடத்தின் காட்சிப் படங்கள்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ridership". Rapid Rail Performance Update. RapidKL. 26 July 2024. Archived from the original on 7 August 2024. பார்க்கப்பட்ட நாள் 8 August 2024.
- ↑ "Public Transportation Dashboard". RapidKL. 18 January 2024. பார்க்கப்பட்ட நாள் 18 January 2024.
- ↑ An LRT-Bus strategy for greater Kuala Lumpur: What future integration?, page 9-10
- ↑ Trolley Wire, page 12-14
- ↑ Light Rail Transit Stations பரணிடப்பட்டது 20 ஆகத்து 2017 at the வந்தவழி இயந்திரம், page 4