செந்தர இரும்புப் பாதை

செந்தர இருப்புப் பாதை (standard gauge) அல்லது செந்தரப் பாட்டை பரவலாகப் பயன்படுத்தப்படும் இருப்புப் பாதை அகலமாகும். இது சில நேரங்களில் ஜார்ஜ் ஸ்டீபென்சன் நினைவாக இசுடீபென்சன் பாதை என்றும் , பன்னாட்டு இருப்புப் பாதை அல்லது வழமை பாதை என்றும் அறியப்படுகின்றது. உலகின் 60% இருப்புப் பாதைகள் இந்த அகலத்தில் அமைந்துள்ளன. உருசியா, உசுபெகிசித்தான், பின்லாந்து தவிர அனைத்து அதிவிரைவு தொடர்வண்டிகள் இந்த செந்தரப் பாட்டையில் அமைந்துள்ளன. இரண்டு இருப்புப் பாதைகளின் உட்புற விளிம்புகளுக்கிடையேயானத் தொலைவு 1,435 மில்லி மீட்டராக வரையறுக்கப்பட்டுள்ளது; ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும் இது 4 அடி 8 12 அங்; ஆக வரையறுக்கப்படுகின்றது (இது 1,435 மிமீயாகும்). இது UIC பாட்டை, அல்லது UIC இருப்புப் பாதை என்றும்[1][2][3] ஐரோப்பிய ஒன்றியத்திலும் உருசியாவில் ஐரோப்பிய பாட்டை என்றும்[4] and Russia,[5] குயின்சுலாந்தில் சீரான அளவி என்றும் அறியப்படுகின்றது.

உலகின் பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படும் இருப்புப்பாதைகளின் அகல அளவிகள்
இருப்புப்பாதை அளவிகளின் வரைபட பட்டியல்

இந்தியாதொகு

இந்தியாவில் அதிவிரைவு நகரிய தொடருந்து அமைப்புகள் மட்டுமே செந்தரப் பாதை அகலத்தைப் பின்பற்றுகின்றன; அவையாவன: நம்ம மெட்ரோ, சென்னை மெட்ரோ, தில்லி மெட்ரோ (இரண்டாம் கட்ட கட்டமைப்பிலிருந்து), குட்கான் மெட்ரோ, ஐதராபாத் மெட்ரோ, ஜெய்பூர் மெட்ரோ, கொச்சி மெட்ரோ, கொல்கத்தா மெட்ரோ கொல்கத்தா அமிழ் தண்டூர்தி, இலக்னோ மெட்ரோ, மும்பை மெட்ரோ, நவிமும்பை மெட்ரோ.

இந்திய இரயில்வேயின் நெடுந்தொலைவு தொடருந்துகள் 1,676 மிமீ (5 அடி 6 அங்) இந்திய அகலப் பாதை அளவியைப் பயன்படுத்துகின்றன. பெரும்பாலும் கட்டமைக்கப்படும் புதிய பாதைகளும் மெட்ரோ தொடருந்துப் பாதைகளும் இத்தரத்தில் உள்ளன.

சான்றுகள்தொகு

  1. Francesco FALCO (23 January 2013). "EU support to help convert the Port of Barcelona's rail network to UIC gauge". TEN-T Executive Agency. 11 பிப்ரவரி 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 August 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Spain: opening of the first standard UIC gauge cross-border corridor between Spain and France". UIC Communications. 20 August 2013 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Displaceable rolling bogie for railway vehicles". IP.com. 29 ஜூன் 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 August 2013 அன்று பார்க்கப்பட்டது.
  4. Francesco FALCO (31 December 2012). "2007-EE-27010-S". TEN-T Executive Agency. 27 பிப்ரவரி 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 August 2013 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Japan". Speedrail.ru. 1 October 1964. 29 ஜூன் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 August 2013 அன்று பார்க்கப்பட்டது.