புத்ரா பன்னாட்டு மைய எல்ஆர்டி நிலையம்
புத்ரா பன்னாட்டு வணிக மைய எல்ஆர்டி நிலையம் அல்லது புத்ரா பன்னாட்டு வணிக மைய இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: PWTC LRT Station; மலாய்: Stesen LRT PWTC; சீனம்: 布特拉世界贸易中心站) என்பது மலேசியா, கோலாலம்பூர், அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம்; ஆகிய வழித்தடங்களுக்கான ஓர் இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.[3]
புத்ரா பன்னாட்டு மைய எல்ஆர்டி நிலையம் (2022) | |||||||||||||||||||||
பொது தகவல்கள் | |||||||||||||||||||||
வேறு பெயர்கள் | Stesen LRT PWTC (மலாய்) 布特拉世界贸易中心站 (சீனம்) | ||||||||||||||||||||
அமைவிடம் | புத்ரா சாலை 50350 கோலாலம்பூர் மலேசியா | ||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 3°9′59″N 101°41′36″E / 3.16639°N 101.69333°E | ||||||||||||||||||||
உரிமம் | பிரசரானா | ||||||||||||||||||||
இயக்குபவர் | ரேபிட் ரெயில்[1] | ||||||||||||||||||||
தடங்கள் | அம்பாங் செரி பெட்டாலிங் | ||||||||||||||||||||
நடைமேடை | 2 பக்க மேடைகள் | ||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||||||||||||
இணைப்புக்கள் | ரேபிட் கேஎல் இணைப்பு ⇌ KA04 புத்ரா கொமுட்டர் நிலையம் | ||||||||||||||||||||
கட்டமைப்பு | |||||||||||||||||||||
கட்டமைப்பு வகை | உயர்த்தப்பட்ட நிலையம் | ||||||||||||||||||||
நடைமேடை அளவுகள் | 2 | ||||||||||||||||||||
தரிப்பிடம் | இல்லை | ||||||||||||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | இல்லை | ||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | ||||||||||||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||||||||||||
நிலையக் குறியீடு | AG4 SP4 | ||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||
திறக்கப்பட்டது | 6 திசம்பர் 1998[2] | ||||||||||||||||||||
சேவைகள் | |||||||||||||||||||||
| |||||||||||||||||||||
|
இந்த நிலையம் பி.டபிள்யூ.டி.சி நிலையம் (PWTC Station) என பரவலாக அறியப்படுகிறது. புத்ரா பன்னாட்டு வணிக மையம் (Putra World Trade Center) எனும் ஆங்கிலப் பெயரின் சுருக்கமே பி.டபிள்யூ.டி.சி (PWTC) ஆகும். புத்ரா பன்னாட்டு வணிக மையம் என்பது தற்போது கோலாலம்பூர் பன்னாட்டு வணிக மையம் (World Trade Centre Kuala Lumpur) என அறியப்படுகிறது.[4]
கோலாலம்பூர் பன்னாட்டு வணிக மையம் என்பது மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள மாநாடு மற்றும் கண்காட்சி மையமாகும்.[5]
பொது
தொகுஇந்த நிலையம் கோலாலம்பூரின் தங்க முக்கோணப் பகுதியில் (Golden Triangle) அமைந்துள்ளது; மற்றும் கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் (Kuala Lumpur International Airport) (KLIA) இருந்து 45 நிமிடப் பயணத் தொலைவில் உள்ளது.
அத்துடன், இந்த நிலையத்திற்கு அருகில் ஒரு வணிகப் பேரங்காடி, உணவகங்கள், பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் 3 - 5 நட்சத்திரத் தங்கும் விடுதிகள் உள்ளன. அவை நடந்து செல்லும் தொலைவில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த நிலையத்திலிருந்து ஏறக்குறைய 400 மீட்டர் நடைப்பயணத்தில், பத்துமலை–புலாவ் செபாங் வழித்தடம்; மற்றும் தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம்; ஆகிய இரு வழித்தடங்கள் உள்ளன. அங்கு KA04 புத்ரா கொமுட்டர் நிலையம் உள்ளது.
சான் சோவ் லின் எல்ஆர்டி நிலையம்
தொகுபுத்ரா பன்னாட்டு வணிக மைய எல்ஆர்டி நிலையம் 1998-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், இஸ்டார் (LRT STAR) (Sistem Transit Aliran Ringan) அமைப்பின் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக திறக்கப்பட்டது.
இரண்டாவது கட்டமாக, கோலாலம்பூரில் உள்ள சான் சோவ் லின் எல்ஆர்டி நிலையத்தில் இருந்து செரி பெட்டாலிங் வரையில் 12 கிமீ நீட்டிப்பு செய்யப்பட்டது.
செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையம்
தொகுமற்றும் இந்த நிலையம், சுல்தான் இசுமாயில் எல்ஆர்டி நிலையம் முதல் செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையம் வரையிலான 3 கிமீ நீட்டிப்பையும் கொண்டுள்ளது.
இரண்டாம் கட்டத்தின் கீழ், கோலாலம்பூரின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்கு சேவை செய்ய 11 நிலையங்களைக் கொண்ட 15 கி.மீ. வழித்தடம் உருவாக்கப்பட்டது.
மேலும் காண்க
தொகுகாட்சியகம்
தொகுபுத்ரா பன்னாட்டு வணிக மைய நிலையக் காட்சிப் படங்கள்:
மேற்கோள்கள்
தொகு- ↑ "Rapid KL's LRT operation is run by Rapid Rail Sdn Bhd, which is responsible for overseeing the urban rail lines of Ampang Line and Sri Petaling Line, Kelana Jaya Line, other than the Monorail Line services". MyRapid. பார்க்கப்பட்ட நாள் 15 November 2024.
- ↑ "Rapid KL | DI SINI BERMULA KISAH REL URBAN MALAYSIA …". Facebook.
- ↑ "Prasarana is the owner-operator of the country's rail services, including LRT networks, KL Monorail and the MRT lines". Rapid Rail Explorer. பார்க்கப்பட்ட நாள் 17 November 2024.
- ↑ "PWTC LRT Station is a light rail transit station operated by RapidKL serving the city center of Kuala Lumpur, Malaysia". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 23 November 2024.
- ↑ "PWTC LRT station is an elevated LRT station in Kuala Lumpur that is served by the Ampang / Sri Petaling Line LRT. It is within short walking distance to UMNO HQ & Putra World Trade Center (PWTC)". klia2.info. 20 October 2017. பார்க்கப்பட்ட நாள் 23 November 2024.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் PWTC LRT station தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.