சுல்தான் இசுமாயில் எல்ஆர்டி நிலையம்
சுல்தான் இசுமாயில் எல்ஆர்டி நிலையம் அல்லது சுல்தான் இசுமாயில் இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Sultan Ismail LRT Station; மலாய்: Stesen LRT Sultan Ismail; சீனம்: 苏丹依斯迈) என்பது மலேசியா, கோலாலம்பூர், அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம்; ஆகிய வழித்தடங்களில் அமைந்துள்ள ஓர் இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.[3][4]
சுல்தான் இசுமாயில் எல்ஆர்டி நிலையம் (2022) | |||||||||||||||||||||
பொது தகவல்கள் | |||||||||||||||||||||
வேறு பெயர்கள் | Stesen LRT Sultan Ismail (மலாய்) 苏丹依斯迈 (சீனம்) | ||||||||||||||||||||
அமைவிடம் | சுல்தான் இசுமாயில் சாலை 50250 கோலாலம்பூர் மலேசியா | ||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 3°9′40″N 101°41′38″E / 3.16111°N 101.69389°E | ||||||||||||||||||||
உரிமம் | பிரசரானா | ||||||||||||||||||||
இயக்குபவர் | ரேபிட் ரெயில்[1] | ||||||||||||||||||||
தடங்கள் | அம்பாங் செரி பெட்டாலிங் | ||||||||||||||||||||
நடைமேடை | 2 பக்க மேடைகள் | ||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||||||||||||
இணைப்புக்கள் | ரேபிட் பேருந்து இணைப்பு ⇌ MR09 மேடான் துவாங்கு நிலையம் | ||||||||||||||||||||
கட்டமைப்பு | |||||||||||||||||||||
கட்டமைப்பு வகை | உயர்த்தப்பட்ட நிலையம் | ||||||||||||||||||||
நடைமேடை அளவுகள் | 2 | ||||||||||||||||||||
தரிப்பிடம் | இல்லை | ||||||||||||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | இல்லை | ||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | ||||||||||||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||||||||||||
நிலையக் குறியீடு | AG5 SP5 | ||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||
திறக்கப்பட்டது | 16 திசம்பர் 1996[2] | ||||||||||||||||||||
சேவைகள் | |||||||||||||||||||||
| |||||||||||||||||||||
|
இலகுரக விரைவுப் போக்குவரத்து, செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையம் வரை நீட்டிக்கப் படுவதற்கு முன்பு இந்த நிலையம், அம்பாங்-சுல்தான் இஸ்மாயில் வழித்தடத்தின் (Ampang-Sultan Ismail Route) முடிவிடமாக இருந்தது.
பொது
தொகுஇந்த சுல்தான் இசுமாயில் எல்ஆர்டி நிலையம்; பத்து சாலை ஆண்கள் தேசியப் பள்ளிக்கும் (Sekolah Kebangsaan Lelaki Jalan Batu), சுங் குவாக் தொடக்கப் பள்ளிக்கும் (Chung Kwok Primary School) இடையில் உள்ளது. இந்த நிலையத்திற்கு வடக்கே அமைந்துள்ள சுல்தான் இசுமாயில் சாலையின் பெயரால் இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டது.
மலேசியாவின் முன்னணி பன்னாட்டு நிறுவனமான சைம் டார்பி (Sime Darby) நிறுவனத்தின் தலைமை அலுவலகம் இந்த நிலையத்திற்கு எதிரே உள்ளது.
கட்டுமானம்
தொகுஇந்த சுல்தான் இசுமாயில் எல்ஆர்டி நிலையம், 1996-ஆம் ஆண்டு திசம்பர் 16-ஆம் தேதி, அம்பாங் நிலையத்திற்கும் இந்த நிலையத்திற்கும் இடையே 14 நிலையங்கள் வழியாகச் சென்ற இஸ்டார் எல்ஆர்டி (STAR LRT) வழித்தடத்தின் (தற்போது அம்பாங் வழித்தடம்) முதல் பிரிவின் தொடக்கத்துடன் இந்த நிலையம் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது.[[5]
பின்னர், செரி பெட்டாலிங் வழித்தடம் 11 சூலை 1998 அன்று, ஒரு புதிய சேவை தொடங்கப்பட்டது.
செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையத்திற்கும், செரி பெட்டாலிங் எல்ஆர்டி நிலையத்திற்கும் இடையே இஸ்டார் எல்ஆர்டி வழித்தடத்தின் இரண்டாவது பிரிவின் தொடக்கத்துடன் அந்தப் புதியச் சேவை தொடங்கியது.
பாதசாரி மேம்பாலம்
தொகுகூடுதலாக, இந்த நிலையத்தை MR09 மேடான் துவாங்கு நிலையத்துடன் இணைக்கும் ஒரு பாதசாரி மேம்பாலம் உள்ளது.[6]
மேடான் துவாங்கு நிலையத்தில் கோலாலம்பூர் மோனோரெயில் சேவை உள்ளது.
செரி பெட்டாலிங் வழித்தடம்
தொகுஅம்பாங் வழித்தடம்; மற்றும் செரி பெட்டாலிங் வழித்தடங்கள், முன்பு இலகு தொடருந்து இஸ்டார் (LRT STAR) (Sistem Transit Aliran Ringan) வழித்தடம் என்று அழைக்கப்பட்டன. செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையத்தில் இருந்து அம்பாங் நிலையம் மற்றும் செரி பெட்டாலிங் நிலையம் வழியாக சோவ் லின் நிலையத்திற்கு இரண்டு தடங்களைக் கொண்டிருந்தது.
இலகு தொடருந்து இஸ்டார் திட்டம் முதன்முதலில் 1981-ஆம் ஆண்டு மலேசியப் போக்குவரத்து தலையாயத் திட்டத்தில் முன்மொழியப்பட்டது.
கோலாலம்பூர் நகர மையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுடன் இணைக்கும் இலகு தொடருந்து வழித்தடங்களுக்கான ஒரு வலையமைப்பை அரசாங்கம் முன்மொழிந்தது. டிசம்பர் 1992-இல் அரசாங்கத்திற்கும் இஸ்டார் நிறுவனத்திற்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது.[7]
காட்சியகம்
தொகுசுல்தான் இசுமாயில் எல்ஆர்டி நிலையக் காட்சிப் படங்கள்:
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Rapid KL's LRT operation is run by Rapid Rail Sdn Bhd, which is responsible for overseeing the urban rail lines of Ampang Line and Sri Petaling Line, Kelana Jaya Line, other than the Monorail Line services". MyRapid. பார்க்கப்பட்ட நாள் 15 November 2024.
- ↑ "Rapid KL | DI SINI BERMULA KISAH REL URBAN MALAYSIA …".
- ↑ "Prasarana is the owner-operator of the country's rail services, including LRT networks, KL Monorail and the MRT lines". Rapid Rail Explorer. பார்க்கப்பட்ட நாள் 17 November 2024.
- ↑ "Sultan Ismail LRT Station | mrt.com.my". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 25 November 2024.
- ↑ Webb, Mary; Clarke, Jackie (2007). Jane's Urban Transport Systems. Jane's Information Group. p. 249.
- ↑ "Sultan Ismail LRT station connected to Medan Tuanku Monorail station". klia2.info. 20 October 2017. பார்க்கப்பட்ட நாள் 25 November 2024.
- ↑ An LRT-Bus strategy for greater Kuala Lumpur: What future integration?, page 9-10
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Sultan Ismail LRT station தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.