புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம்
புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம் அல்லது புத்ரா அயிட்ஸ் இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Putra Heights LRT Station; மலாய்: Stesen LRT Putra Heights; சீனம்: 布特拉高原站) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடம்; செரி பெட்டாலிங் ஆகிய வழித்தடங்கள் பரிமாறும் இடத்தில் அமைந்துள்ள ஓர் இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.[3]
SP25 புத்ரா அயிட்ஸ் | |||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
SP31 KJ37 | எல்ஆர்டி Putra Heights LRT Station | |||||||||||||||||||||
புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம் (2021) | |||||||||||||||||||||
பொது தகவல்கள் | |||||||||||||||||||||
வேறு பெயர்கள் | Stesen LRT Putra Heights (மலாய்) 布特拉高原站 (சீனம்) | ||||||||||||||||||||
அமைவிடம் | பெர்சியாரான் புத்ரா இண்டா புத்ரா அயிட்ஸ், 47650, சுபாங் ஜெயா, சா ஆலாம் சிலாங்கூர் மலேசியா | ||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 3°00′35″N 101°34′20″E / 3.00972°N 101.57222°E | ||||||||||||||||||||
உரிமம் | பிரசரானா | ||||||||||||||||||||
இயக்குபவர் | ரேபிட் ரெயில்[1] | ||||||||||||||||||||
தடங்கள் | செரி பெட்டாலிங் கிளானா ஜெயா | ||||||||||||||||||||
நடைமேடை | 1 தீவு மேடை; 2 பக்க மேடைகள் | ||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 4 | ||||||||||||||||||||
இணைப்புக்கள் | ரேபிட் கேஎல் | ||||||||||||||||||||
கட்டமைப்பு | |||||||||||||||||||||
கட்டமைப்பு வகை | உயர்த்தப்பட்ட நிலையம் | ||||||||||||||||||||
நடைமேடை அளவுகள் | 3 | ||||||||||||||||||||
தரிப்பிடம் | (452) கட்டணம் | ||||||||||||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | (20) இலவசம் | ||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | ||||||||||||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||||||||||||
நிலையக் குறியீடு | SP31 KJ37 | ||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||
திறக்கப்பட்டது | 30 சூன் 2016[2] | ||||||||||||||||||||
சேவைகள் | |||||||||||||||||||||
|
உயர்த்தப்பட்ட நிலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நிலையம், சிலாங்கூர், சா ஆலாம், சுபாங் ஜெயா, புத்ரா அயிட்ஸ், பெர்சியாரான் புத்ரா இண்டா அருகில் அமைந்துள்ளது.
அமைவு
தொகுபிரசரானாவின் போக்குவரத்து விரிவாக்கத் திட்டத்தின் கீழ் இந்த நிலையம் உருவாக்கப்பட்டது. மஸ்ஜித் ஜமெயிக் எல்ஆர்டி நிலையத்திற்குப் பிறகு, இந்த நிலையத்தில் தான் கிளானா ஜெயா வழித்தடம்; செரி பெட்டாலிங் ஆகிய இரு வழித்தடங்களும் இணைகின்றன.
பிரசரானாவின் போக்குவரத்து விரிவாக்கத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட 25 நிலையங்களில் இந்த நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையம் சூன் 2016-இல், திறக்கப்பட்டது. சுபாங் ஜெயா, புத்ரா அயிட்ஸ் பகுதியில் இந்த நிலையம் அமைந்து இருப்பதால், புத்ரா அயிட்ஸ் எனும் பெயர் இந்த நிலையத்திற்கும் சூட்டப்பட்டது.[4]
தனித்தனி வழித்தடங்கள்=
தொகுகிள்ளான் பள்ளத்தாக்கின் மிகப்பெரிய தொடருந்து நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த நிலையம் 2 பக்க மேடைகள் மற்றும் 1 தீவு மேடையுடன் நான்கு மேடைகளைக் கொண்டுள்ளது.
இரண்டு வழித்தடங்களிலும் உருவாக்கப்பட்ட வெவ்வேறு தொடருந்து அமைப்பின் காரணமாக, அவை ஒரே வழித்தடத்தைப் பகிர்ந்து கொள்ளாமல், அதற்குப் பதிலாக அவற்றுக்கான தனித்தனி வழித்தடத்தைப் பயன்படுத்துகின்றன. புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம், சிறப்பான ஓர் உள்கட்டமைப்பைக் கொண்ட நிலையமாக அறியப்படுகிறது.
கிளானா ஜெயா வழித்தடம்
தொகுகிளானா ஜெயா வழித்தடம் அல்லது கிளானா ஜெயா இலகு விரைவு தொடருந்து வழித்தடம் (LRT Kelana Jaya Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் இலகு விரைவு தொடருந்து வழித்தடம் (Light Rapid Transit Line) (LRT) ஆகும்.
இந்த வழித்தடம் மலேசியாவில் முதல் முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பைக் கொண்டதாகும்.[5]
ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு
தொகுஇந்த வழித்தடம் மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமல்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பின் (Klang Valley Integrated Transit System) ஒரு பகுதியாகும்.
கிளானா ஜெயா வழித்தடத்தில் 37 நிலையங்கள் உள்ளன. 46.4 கிமீ நீளமுள்ள பாதையில் பெரும்பாலும் நிலத்தடி மற்றும் உயரமான மேம்பால அடுக்குகளில் எல்ஆர்டி நிலையங்கள் இயங்குகின்றன.[6]
பேருந்து சேவைகள்
தொகுபேருந்து | தொடக்கம் | இலக்கு | பயண வழி |
---|---|---|---|
T759 | KJ37 SP31 புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம் | புக்கிட் லஞ்சோங் | மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலை, மத்திய இணைப்பு |
T760 | KJ37 SP31 புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம் | பண்டார் சவுஜானா புத்ரா சா ஆலாம், கோலா லங்காட் | மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலை, மத்திய இணைப்பு[7] |
காட்சியகம்
தொகுபுத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையக் காட்சிப் படங்கள்:
மேலும் காண்க
தொகு- KG04 PY01 குவாசா டாமன்சாரா எம்ஆர்டி நிலையம்; இதே போன்ற பரிமாற்றத் தளத்தைக் கொண்டது
- கோலாலம்பூர் பேருந்து வழித்தடங்களின் பட்டியல்
- #யூஎஸ்ஜே சுபாங் ஜெயா
- கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு
மேற்கோள்கள்
தொகு- ↑ "Rapid KL's LRT operation is run by Rapid Rail Sdn Bhd, which is responsible for overseeing the urban rail lines of Ampang Line and Sri Petaling Line, Kelana Jaya Line, other than the Monorail Line services". MyRapid. பார்க்கப்பட்ட நாள் 15 November 2024.
- ↑ "4 stesen baharu LRT beroperasi Jumaat ini". 28 March 2016.
- ↑ "Prasarana is the owner-operator of the country's rail services, including LRT networks, KL Monorail and the MRT lines". Rapid Rail Explorer. பார்க்கப்பட்ட நாள் 17 November 2024.
- ↑ "LRT Line Extension Project". Railway Technology. April 16, 2014. பார்க்கப்பட்ட நாள் October 14, 2018.
- ↑ "The LRT Kelana Jaya Line (Laluan Kelana Jaya) is a Light Rapid Transit train route operated by Rapid Rail that is part of the Klang Valley Integrated Transit System running through Kuala Lumpur city centre from Gombak to Putra Heights". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 9 August 2023.
- ↑ Menon, Priya (8 August 2014). "Work on railway line from Subang airport to KL Sentral has begun". The Star (Malaysia). http://www.thestar.com.my/News/Community/2014/08/08/Full-steam-ahead-Work-on-railway-line-from-Subang-airport-to-KL-Sentral-has-begun/.
- ↑ "Bus - Rapid KL | MyRapid Your Public Transport Portal". www.myrapid.com.my. பார்க்கப்பட்ட நாள் 2020-06-26.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Putra Heights LRT Station தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Putra Heights LRT Station