மஸ்ஜித் ஜமெயிக் எல்ஆர்டி நிலையம்
மஸ்ஜித் ஜமெயிக் எல்ஆர்டி நிலையம் அல்லது மஸ்ஜித் ஜமெயிக் இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Masjid Jamek LRT Station; மலாய்: Stesen LRT Masjid Jamek; சீனம்: 占美清真寺站) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடம்; அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் ஆகிய மூன்று வழித்தடங்களில் அமைந்துள்ள நிலத்தடி; மற்றும் உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.[2]
மஸ்ஜித் ஜமெயிக் எல்ஆர்டி நிலையம் (2024) | ||||||||||||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||||||||||||
வேறு பெயர்கள் | Stesen LRT Masjid Jamek 占美清真寺站 | |||||||||||||||||||||||||
அமைவிடம் | துன் ரசாக் சாலை, 50050 கோலாலம்பூர் மாநகர மையம் கோலாலம்பூர் மலேசியா | |||||||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 3°8′58.8″N 101°41′47.1″E / 3.149667°N 101.696417°E | |||||||||||||||||||||||||
உரிமம் | பிரசரானா மலேசியா | |||||||||||||||||||||||||
இயக்குபவர் | ரேபிட் ரெயில்[1] | |||||||||||||||||||||||||
தடங்கள் | அம்பாங் வழித்தடம் கிளானா ஜெயா வழித்தடம் | |||||||||||||||||||||||||
நடைமேடை | 2 பக்க நடைமேடை (அம்பாங் & செரி பெட்டாலிங் வழித்தடம்) 1 தீவு மேடை (கிளானா ஜெயா வழித்தடம்) | |||||||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 2 (அம்பாங் & செரி பெட்டாலிங் வழித்தடம்) 2 (கிளானா ஜெயா வழித்தடம்) | |||||||||||||||||||||||||
இணைப்புக்கள் | AG7 SP7 KJ13 | |||||||||||||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||||||||||||
தரிப்பிடம் | இல்லை | |||||||||||||||||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | இல்லை | |||||||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | |||||||||||||||||||||||||
மற்ற தகவல்கள் | ||||||||||||||||||||||||||
நிலையக் குறியீடு | AG7 SP7 KJ13 | |||||||||||||||||||||||||
வரலாறு | ||||||||||||||||||||||||||
திறக்கப்பட்டது | 16 திசம்பர் 1996 (அம்பாங் & செரி பெட்டாலிங் வழித்தடம்) 1 சூன் 1999 (கிளானா ஜெயா வழித்தடம்) | |||||||||||||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||
|
இலகுரக விரைவுப் போக்குவரத்து வழித்தடங்களை ஒருங்கிணைக்கும் இரண்டு நிலையங்களில் இந்த நிலையமும் ஒன்றாகும்; மற்றொன்று புத்ரா அயிட்ட்ஸ் நிலையம் ஆகும்.
கோலாலம்பூர் மாநகர மையத்தில் உள்ள ஜாமிஃ பள்ளிவாசலின் பெயரால் இந்த நிலையத்திற்கும் பெயரிடப்ப்ட்டது.[3][4]
பொது
தொகுஇந்த நிலையம் தற்போது ஓர் இடைமாற்று நிலையம் என்று அழைக்கப்பட்டாலும், 28 நவம்பர் 2011 வரை, செயல்பாட்டு அடிப்படையில் இரண்டு மஸ்ஜித் ஜமெயிக் நிலையங்கள் இருந்தன.
ஒரு நிலையம், ஓர் உயத்தப்பட்ட மஸ்ஜித் ஜமெயிக் நிலையம் ஆகும். இந்த நிலையம் அம்பாங் வழித்தடம் மற்றும் செரி பெட்டாலிங் வழித்தடம்; ஆகிய இரு வழித்தடங்களுக்குச் சேவை செய்தது.
பயணச் சீட்டு முகைமைகள்
தொகுமற்றும் ஒரு நிலத்தடி நிலையமான மஸ்ஜித் ஜமெயிக் நிலையம்; கிளானா ஜெயா வழித்தடத்திற்குச் சேவை செய்கிறது.
ஒவ்வொன்றும் ஒருங்கிணைக்கப்படாத தனித்தனியான பயணச் சீட்டு முகைமைகளைக் கொண்டிருந்தன.
ஒரு வழித்தடத்தில் இருந்து மற்றொரு வழித்தடத்திற்கு பயணிகள் மாற விரும்பினால், அவர்கள் ஒரு வழித்தட அமைப்பிலிருந்து வெளியேறி, மற்ற அமைப்பில் நுழைவதற்கு முன், ஒரு புதிய பயணச் சீட்டை வாங்க வேண்டிய நிலை இருந்தது.[5]
தனித்தனி கட்டிடங்கள்
தொகு2006-ஆம் ஆண்டுக்கு முன், கிள்ளான் ஆற்றின் மேல் பிளாசா வணிக வளாகம் கட்டப்பட்டது. அப்போது, அம்பாங் வழித்தடம் மற்றும் செரி பெட்டாலிங் வழித்தடங்களுக்கு என தனி ஒரு மஸ்ஜித் ஜமெயிக் நிலையம் இருந்தது.
அதே போல கிளானா ஜெயா வழித்தடத்திற்கும் தனி ஒரு மஸ்ஜித் ஜமெயிக் நிலையம் இருந்தது. அந்த இரு நிலையங்களும் தனித்தனிக் கட்டிடங்களாக இயங்கின.[6]
துன் பேராக் சாலை
தொகுஅந்தக் கட்டத்தில் இரண்டு நிலையங்களுக்கும் இடையில் குறைந்த அளவிலான பாதசாரி நடைபாதைகள் இருந்தன. இதன் விளைவாகப் பயணிகள் வெயில் மழைக்கு உட்பட வேண்டியிருந்தது.
அத்துட்ன் ஒரு வழித்தடத்தில் இருந்து அடுத்த வழித்தடத்திற்கு மாற வேண்டும் என்றால் அதிலேயும் சிரமங்கள் இருந்தன. வாகன நெரிசல் நிறைந்த துன் பேராக் சாலையைச் சிரமப்பட்டுக் கடக்க வேண்டியிருந்தது.
28 நவம்பர் 2011 அன்று, இரண்டு அமைப்புகளையும் பிரிக்கும் கட்டண வாயில்கள் அகற்றப்பட்டன. அந்த வகையில் இரு நிலையங்களாக இருந்த மஸ்ஜித் ஜமெயிக் நிலையம்; தனி ஒரு நிலையமாக மாற்றம் கண்டது.
செரி பெட்டாலிங் வழித்தடம்
தொகுஅம்பாங் வழித்தடம்; மற்றும் செரி பெட்டாலிங் வழித்தடங்கள், முன்பு இலகு தொடருந்து இஸ்டார் (LRT STAR) (Sistem Transit Aliran Ringan) வழித்தடம் என்று அழைக்கப்பட்டன. செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையத்தில் இருந்து அம்பாங் நிலையம் மற்றும் செரி பெட்டாலிங் நிலையம் வழியாக சோவ் லின் நிலையத்திற்கு இரண்டு தடங்களைக் கொண்டிருந்தது.
இலகு தொடருந்து இஸ்டார் திட்டம் முதன்முதலில் 1981-ஆம் ஆண்டு மலேசியப் போக்குவரத்து தலையாயத் திட்டத்தில் முன்மொழியப்பட்டது.
கோலாலம்பூர் நகர மையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுடன் இணைக்கும் இலகு தொடருந்து வழித்தடங்களுக்கான ஒரு வலையமைப்பை அரசாங்கம் முன்மொழிந்தது. டிசம்பர் 1992-இல் அரசாங்கத்திற்கும் இஸ்டார் நிறுவனத்திற்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது.[7]
காட்சியகம்
தொகுமேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "ABOUT RAPID RAIL". பார்க்கப்பட்ட நாள் May 8, 2020.
- ↑ "Masjid Jamek LRT Station is a light rail transit station operated by RapidKL serving city center of Kuala Lumpur, Malaysia. It is the interchange station between three of RapidKL's light rapid transit (LRT) systems". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 13 November 2024.
- ↑ "This LRT station is situated near, and named after the Masjid Jamek in central Kuala Lumpur". klia2.info. 10 October 2017. பார்க்கப்பட்ட நாள் 13 November 2024.
- ↑ "LRT train from KL Sentral to Masjid Jamek takes you to this interchange station for the Sri Petaling Line and the Ampang Line for connections to many popular destinations within KL city centre". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 13 November 2024.
- ↑ "At Masjid Jamek itself there are two lines are easier for interchange each other. Kelana Jaya and Ampang/Putra Heights line well design for smooth journey whether you are using of smart card (cashless) or token (single journey)". KUALA LUMPUR TRANSIT WORDPRESS (in ஆங்கிலம்). 9 December 2020. பார்க்கப்பட்ட நாள் 13 November 2024.
- ↑ "LRT Update: Proposals for improvements for Masjid Jamek Interchange". Transit Malaysia (in ஆங்கிலம்). 2010-02-10. பார்க்கப்பட்ட நாள் 2024-01-08.
- ↑ An LRT-Bus strategy for greater Kuala Lumpur: What future integration?, page 9-10
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Kampung Baru LRT station தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.