டாங் வாங்கி எல்ஆர்டி நிலையம்
டாங் வாங்கி எல்ஆர்டி நிலையம் அல்லது டாங் வாங்கி இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Dang Wangi LRT Station; மலாய்: Stesen LRT Dang Wangi; சீனம்: 金马律) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் அமைந்துள்ள ஒரு நிலத்தடி இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.
டாங் வாங்கி எல்ஆர்டி நிலையம் (2024) | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
வேறு பெயர்கள் | Stesen LRT Dang Wangi 金马律 | ||||||||||
அமைவிடம் | அம்பாங் சாலை, கோலாலம்பூர் மாநகர மையம் கோலாலம்பூர் மலேசியா | ||||||||||
ஆள்கூறுகள் | 3°9′24″N 101°42′6″E / 3.15667°N 101.70167°E | ||||||||||
உரிமம் | பிரசரானா மலேசியா | ||||||||||
இயக்குபவர் | ரேபிட் ரெயில்[1] | ||||||||||
தடங்கள் | கிளானா ஜெயா | ||||||||||
நடைமேடை | நிலத்தடி தீவு மேடை | ||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
கட்டமைப்பு வகை | நிலத்தடி நிலையம் | ||||||||||
நடைமேடை அளவுகள் | 3 | ||||||||||
தரிப்பிடம் | இல்லை | ||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உண்டு | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | ||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | KJ12 | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | 1 சூன் 1999 (எல்ஆர்டி) | ||||||||||
சேவைகள் | |||||||||||
|
இந்த நிலையத்தின் வழித்தடம் முன்பு புத்ரா வழித்தடம் என்று அழைக்கப்பட்டது. பசார் செனி இலகுத் தொடருந்து நிலையம் தொடங்கி கோம்பாக் எல்ஆர்டி நிலையம் வரையிலான இரண்டாவது கட்டமைப்புப் பிரிவின் 12 நிலையங்கள் கட்டப்பட்டன. அவற்றில் ஒரு பகுதியாக 1 சூன் 1999 அன்று இந்த நிலையம் கட்டப்பட்டது. இரண்டாவது கட்டமைப்பில் செரி ரம்பாய் எல்ஆர்டி நிலையம் சேர்க்கப்படவில்லை.
பொது
தொகுகம்போங் பாரு எல்ஆர்டி நிலையம், கிளானா ஜெயா வழித்தடத்தில் தற்போது உள்ள ஐந்து நிலத்தடி நிலையங்களில் ஒன்றாகும்.
நிலையத்தின் அணுகல் நுழைவாயில், மத்திய கோலாலம்பூரின் வடகிழக்கு முனையில் அம்பாங் சாலையில் அமைந்துள்ளது. புக்கிட் நானாஸ் நேரடியாக அம்பாங் சாலையின் குறுக்கே உள்ளது; மற்றும் கிள்ளான் ஆறு நிலையத்திற்குப் பின்னால் உள்ளது.
டாங் வாங்கி சாலை
தொகுநிலையத்தின் பெயரான டாங் வாங்கி என்பது டாங் வாங்கி சாலையில் இருந்து பெறப்பட்டது. இந்த நிலையம் மத்திய கோலாலம்பூரின் வடகிழக்கு பகுதிகளுக்குச் சேவை செய்வதை இலக்காகக் கொண்டுள்ளது.
டாங் வாங்கி எல்ஆர்டி நிலையம், கிளானா ஜெயா வழித்தடத்தின் மற்ற நிலத்தடி நிலையங்களைப் போலவே, மூன்று அடுக்கு நிலைகளைக் கொண்ட ஓர் எளிமையான கட்டுமானமாகும்: தெரு மட்டத்தில் ஒரு நுழைவு நிலை; நிலத்தடியில் ஒரு நிலை; மற்றும் நடைபாதையில் ஒரு நிலை என மூன்று நிலைகள் உள்ளன.
தீவு மேடை
தொகுஅனைத்து அடுக்கு நிலைகளும், மின்படிக்கட்டுகள் மற்றும் படிக்கட்டுகள் வழியாக இணைக்கப்பட்டுள்ளன. அதே வேளையில், தொடருந்து நின்று செல்லும் இடத்திற்கும் நடைபாதைக்கும் இடையில் சுமைதூக்கிச் சேவையும் வழங்கப்படுகிறது. நிலையத்தின் இரண்டு எதிர்த் திசைகளுக்கும் ஒரே ஒரு தீவு மட்டுமே மேடை உள்ளது.
இந்த நிலையத்தில், தெருநிலை மட்டத்திலிருந்து ஒரே ஓர் அணுகல் வாயில் மட்டுமே உள்ளது. அதுவே முதன்மை நுழைவாயிலாகவும் செயல்படுகிறது.
காட்சியகம்
தொகுமேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "ABOUT RAPID RAIL". பார்க்கப்பட்ட நாள் May 8, 2020.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Kampung Baru LRT station தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.