பண்டாராயா எல்ஆர்டி நிலையம்

அம்பாங், செரி பெட்டாலிங் வழித்தடங்களில் அமைந்துள்ள எல்ஆர்டி நிலையம்

பண்டாராயா எல்ஆர்டி நிலையம் அல்லது பண்டாராயா இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Bandaraya LRT Station; மலாய்: Stesen LRT Bandaraya; சீனம்: 市政局站) என்பது மலேசியா, கோலாலம்பூர், அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம்; ஆகிய வழித்தடங்களில் அமைந்துள்ள ஓர் இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.[3][4]

 AG6   SP6 
பண்டாராயா
Bandaraya LRT Station
பண்டாராயா எல்ஆர்டி நிலையம் (2023)
பொது தகவல்கள்
வேறு பெயர்கள்Stesen LRT Bandaraya (மலாய்)
市政局站 (சீனம்)
அமைவிடம்ராஜா லாவுட் சாலை 50350
கோலாலம்பூர்  மலேசியா
ஆள்கூறுகள்3°9′20″N 101°41′39″E / 3.15556°N 101.69417°E / 3.15556; 101.69417
உரிமம் பிரசரானா
இயக்குபவர்Rapid_KL_Logo ரேபிட் ரெயில்[1]
தடங்கள்  அம்பாங் 
 செரி பெட்டாலிங் 
நடைமேடை2 பக்க மேடைகள்
இருப்புப் பாதைகள்2
இணைப்புக்கள்Rapid_KL_Logo ரேபிட் பேருந்து
இணைப்பு 140 மீ.
 KA03  பேங்க் நெகாரா
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைஉயர்த்தப்பட்ட நிலையம்
நடைமேடை அளவுகள்2
தரிப்பிடம் இல்லை
துவிச்சக்கர வண்டி வசதிகள்விசையுந்து இல்லை
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு AG6   SP6 
வரலாறு
திறக்கப்பட்டது16 திசம்பர் 1996[2]
சேவைகள்
முந்தைய நிலையம்   ரேபிட் கேஎல்   அடுத்த நிலையம்
   
புத்ரா
செந்தூல் தீமோர்
 
அம்பாங் வழித்தடம்
 
மஸ்ஜித் ஜமெயிக்
அம்பாங்
புத்ரா
செந்தூல் தீமோர்
 
செரி பெட்டாலிங்
 
மஸ்ஜித் ஜமெயிக்
புத்ரா
அமைவிடம்
Map
பண்டாராயா எல்ஆர்டி நிலையம்

பண்டாராயா எல்ஆர்டி நிலையம், 1996-ஆம் ஆண்டு திசம்பர் 16-ஆம் தேதி, அம்பாங் நிலையத்திற்கும் இந்த நிலையத்திற்கும் இடையே 13 நிலையங்கள் வழியாகச் சென்ற இஸ்டார் எல்ஆர்டி (STAR LRT) வழித்தடத்தின் (தற்போது அம்பாங் வழித்தடம்) முதல் பிரிவின் தொடக்கத்துடன் இந்த நிலையம் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது.[[5] பின்னர், செரி பெட்டாலிங் வழித்தடம் 11 சூலை 1998 அன்று, ஒரு புதிய சேவை தொடங்கப்பட்டது.

செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையத்திற்கும், செரி பெட்டாலிங் எல்ஆர்டி நிலையத்திற்கும் இடையே இஸ்டார் எல்ஆர்டி வழித்தடத்தின் இரண்டாவது பிரிவின் தொடக்கத்துடன் அந்தப் புதியச் சேவை தொடங்கியது.

அமைவு

தொகு

இந்த பண்டாராயா நிலையம் கோம்பாக் ஆற்றின் கிழக்குக் கரையிலும், ராஜா லாவுட் சாலைக்கு அருகிலும் உள்ளது.

பண்டாராயா நிலையம் கோம்பாக் ஆற்றின் தெற்குப் பகுதியில் உள்ள கடைசி இலகு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் பல வணிக வளாகங்கள்; தற்போதைய கோலாலம்பூர் மாநகராட்சி கட்டிடம், பேங்க் நெகாரா (Bank Negara) தலைமையகம்; மற்றும் லிட்டில் இந்தியா வளாகத்திற்கும் (Little India Precinct) அருகாமையில் உள்ளது.

பேங்க் நெகாரா கொமுட்டர் நிலையம்

தொகு

இந்த நிலையம்  KA03  பேங்க் நெகாரா கொமுட்டர் நிலையத்திலிருந்து 140 மீ தொலைவில் உள்ளது. இரண்டு நிலையங்களும் ஒரு மேம்பால நடைபாதையால் இணைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், கட்டணம் அல்லது பயணச் சீட்டு அடிப்படையில் இரண்டு நிலையங்களுக்கும் இடையில் ஒருங்கிணைப்பு வழங்கப்படவில்லை. ராஜா லாவுட் சாலை (Jalan Raja Laut), டாங் வாங்கி சாலை (Jalan Dang Wangi), மற்றும் துவாங்கு அப்துல் ரகுமான் சாலைகளின் பேருந்து நிறுத்தங்களுக்கு அருகில் இந்த நிலையம் உள்ளது.

இந்த நிலையம் மூன்று நிலைகளைக் கொண்ட அடுக்கு நிலையமாகும். இந்த நிலையத்தில்   அம்பாங் வழித்தடம் மற்றும்   செரி பெட்டாலிங் வழித்தடம் ஆகிய இரு தடங்களுக்கும் சேவை செய்யஇரண்டு பக்க தளங்கள் உள்ளன.

செரி பெட்டாலிங் வழித்தடம்

தொகு

அம்பாங் வழித்தடம்; மற்றும் செரி பெட்டாலிங் வழித்தடங்கள், முன்பு இலகு தொடருந்து இஸ்டார் (LRT STAR) (Sistem Transit Aliran Ringan) வழித்தடம் என்று அழைக்கப்பட்டன. செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையத்தில் இருந்து அம்பாங் நிலையம் மற்றும் செரி பெட்டாலிங் நிலையம் வழியாக சோவ் லின் நிலையத்திற்கு இரண்டு தடங்களைக் கொண்டிருந்தது.

இலகு தொடருந்து இஸ்டார் திட்டம் முதன்முதலில் 1981-ஆம் ஆண்டு மலேசியப் போக்குவரத்து தலையாயத் திட்டத்தில் முன்மொழியப்பட்டது.

கோலாலம்பூர் நகர மையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுடன் இணைக்கும் இலகு தொடருந்து வழித்தடங்களுக்கான ஒரு வலையமைப்பை அரசாங்கம் முன்மொழிந்தது. டிசம்பர் 1992-இல் அரசாங்கத்திற்கும் இஸ்டார் நிறுவனத்திற்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது.[6]

காட்சியகம்

தொகு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Rapid KL's LRT operation is run by Rapid Rail Sdn Bhd, which is responsible for overseeing the urban rail lines of Ampang Line and Sri Petaling Line, Kelana Jaya Line, other than the Monorail Line services". MyRapid. பார்க்கப்பட்ட நாள் 15 November 2024.
  2. "Rapid KL | DI SINI BERMULA KISAH REL URBAN MALAYSIA …".
  3. "Prasarana is the owner-operator of the country's rail services, including LRT networks, KL Monorail and the MRT lines". Rapid Rail Explorer. பார்க்கப்பட்ட நாள் 17 November 2024.
  4. "Bandaraya LRT Station | mrt.com.my". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 8 November 2024.
  5. Webb, Mary; Clarke, Jackie (2007). Jane's Urban Transport Systems. Jane's Information Group. p. 249.
  6. An LRT-Bus strategy for greater Kuala Lumpur: What future integration?, page 9-10

வெளி இணைப்புகள்

தொகு