கோலாலம்பூர் சாலைகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

கோலாலம்பூர் சாலைகளின் பட்டியல் (ஆங்கிலம்: List of roads in Kuala Lumpur; மலாய்: Senarai jalan raya di Kuala Lumpur) என்பது மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூர் மாநகரத்தில் உள்ள சாலைகளின் பட்டியல் ஆகும்.

மலேசிய தேசிய நூலகத்திற்கு அருகில் துன் ரசாக் சாலை; முன்பு: பெக்கிலிலிங் சாலை (Jalan Pekeliling)
கோலாலம்பூர் செமந்தான் சாலை

கோலாலம்பூர் மாநகரம்; புதிதாக உருவாகப்பட்ட நவீனமய விரைவுச் சாலைகள்; நெடுஞ்சாலைகள்; சுற்றுவட்டச் சாலைகள்; 200 ஆண்டுகளுக்கும் முந்தைய பழைய சாலைகள்; பழைய தெருக்கள், போன்ற பல்வகையான வழித்தடங்களைக் கொண்டுள்ளது.[1]

கோலாலம்பூர் மாநகரம்; மற்றும் அதைச் சுற்றியுள்ள புறநகர்களின் சாலைப் பெயர்கள், பிரித்தானிய மலாயா ஆட்சிக் காலத்தின் போது பெயரிடப்பட்டவை ஆகும். அவை பெரும்பாலும் ஆங்கில மொழியில் பெயரிடப்பட்டன.[2]

பொது

தொகு

பிரித்தானியப் பிரமுகர்கள், உள்ளூர்ப் பிரமுகர்கள், மலாயா அரசப் பரம்பரையினர், மாநில மாவட்டங்கள், வட்டாரங்கள், உள்ளூர் மக்கள், உள்ளூர் அடையாளங்கள் அல்லது உள்ளூர்ப் புவியியல் அடையாளங்கள் ஆகியவற்றின் பெயரால் கோலாலம்பூர் சாலைகளின் பழைய பெயர்கள் பெயரிடப்பட்டு இருந்தன.[3]

வரலாறு

தொகு
 
மாரோப் சாலை, பங்சார் பாரு

1957-இல் மலாயா விடுதலை அடைந்து 1963-இல் மலேசியா உருவானது. 1967-இல் மலேசியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக மலாய் மொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து, கோலாலம்பூரில் உள்ள தெருக்களின் பெயர்கள் மலாய் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன.

எடுத்துக்காட்டாக, பழைய சந்தைச் சதுக்கம் (Old Market Square) என்பது 'மேடான் பசார் பெசார்' என்றும் போச் அவென்யூ (Foch Avenue) என்பது 'போச் சாலை' என்றும் எளிய நடைமுறையில் மொழிபெயர்க்கப்பட்டன.

காலனித்துவ நடைமுறை

தொகு

1981-ஆம் ஆண்டில், மலேசியாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மகாதீர் முகமது, காலனித்துவ நடைமுறையை நீக்கம் செய்ய வேண்டும் எனும் கொள்கைப்பாட்டிற்கு முன்னுரிமை வழங்கினார். அதன் ஒரு பகுதியாக, பெரும்பாலான தெருக்களின் பெயர்கள் ஒட்டுமொத்தமாக மறுபெயரிடப்பட்டன.

முன்னர் ஆங்கிலத் தனமையைக் கொண்டிருந்த தெருக்களின் பெயர்கள்; உள்ளூர் மலாய்ப் பிரமுகர்கள், மலாய்ப் பண்பாடு மற்றும் மலாயா/மலேசியாவில் உள்ள முக்கிய அரசியல்வாதிகளை நினைவுகூரும் பெயர்களுக்கு மாற்றம் செய்யப்பட்டன. 2007-இன் பிற்பகுதியில் கோலாலம்பூர் மாநகராட்சி மேலும் பல சீரமைப்புகளைக் கோன்டு வந்தது. அந்த வகையில், பழைய தெருப் பெயர்களை மறுப்பெயரிடும் கொள்கைப்பாடு, இன்றுவரை தொடர்கிறது.

சர்ச்சைகள்

தொகு
 
அம்பாங் உயர்த்தப்பட்ட விரைவுச்சாலை

மலாயா விடுதலைக்கு முந்தைய தெருக்களின் பெயர்களில் மாற்றங்கள் செய்வதைப் பொதுமக்கள் பொதுவாக ஏற்றுக் கொண்டாலும், தொடர்ச்சியான மறுபெயரிடுதல் கொள்கை, உள்ளூர்ச் சமூகங்களின் தாக்கத்தை ஈர்த்தது. கோலாலம்பூர் தெருக்களின் வரலாறு குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு வரும் காலக் கட்டத்தில், தொடர்ச்சியான பெயர் மாற்றங்கள் அவர்களிடையே வெறுப்பையும் மனநிறைவின்மையையும் ஏற்படுத்தியதாகவும் அறியப்படுகிறது.[4]

முன்புள்ள பெயர்கள் சுருக்கமாக இருந்தன. அவற்றை எளிதாக நினைவில் வைத்துக் கொள்ள முடிந்தது. புதிதாக வைக்கப்படும் பெயர்கள் நீண்ட பெயர்களாக இருப்பதாலும்; சுற்றி வளைக்கப்பட்ட பெயர்களாக இருப்பதாலும்; அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள சிரமங்கள் ஏற்படுவதாகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

குறிப்பாக, சாலையைப் பயன்படுத்துபவர்கள், அஞ்சல் பயனர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் போன்றவர்கள் தங்களின் மனக்குறைகளைத் தெரிவித்தனர். பொதுமக்களிடம் இருந்து எதிர்ப்புகளும் தோன்றின.

இத்தகைய சர்ச்சைகளுக்கு மத்தியிலும் பெயர் மாற்றங்கள் தொடர்ந்தன. இன்று வரையிலும் தொடர்கின்றன.[5]

மலேசிய சாலை வகை

தொகு
 
கெப்போங் சாலை
 
கூச்சிங் சாலை
  • நெடுஞ்சாலை - Highway -Lebuhraya
  • சுற்றுவட்டம் - Circular - Pekeliling
  • சுற்று - Circus - Bulatan
  • முனை - Close - Pinggir/Pinggiran (e.g. Ridley Close/Pinggir Ridley)
  • வளைவு - Crescent - Lengkok (e.g. Bellamy Crescent/Lengkok Bellamy)
  • பகுதி - Drive – Persiaran (e.g. Hampshire Drive/Persiaran Hampshire)
  • மனைப் பூங்கா - Gardens – Taman (e.g. Maxwell Garden/Taman Maxwell)
  • சிறு தொகுதி - Grove - Gerbang (e.g. Lower Ampang Grove/Gerbang Ampang Hilir)
  • குன்று - Hill - Langgak (e.g. Tunku Hill/Langgak Tunku)
  • வழிச் சாலை - Lane – Lorong (e.g. Horse Lane/Lorong Kuda)
  • மலை - Mount - Puncak
  • இடம் - Place - Laman (e.g. Seputeh Place/Laman Seputeh)
  • உயர்விடம் - Rise - Changkat (e.g. Bukit Bintang Rise/Changkat Bukit Bintang)
  • சாலை - Road – Jalan (e.g. Perak Road/Jalan Perak)
  • சுற்றுச் சாலை - Ring Road - Lingkaran (e.g. Lingkaran Syed Putra)
  • சதுக்கம் - Square – Medan (e.g. Old Market Square/Medan Pasar Lama)
  • தெரு -Street – Lebuh (e.g. Menjalara Street/Lebuh Menjalara)
  • நடைபாதை - Walk - Pintas

பழைய சாலைகள்

தொகு
தமிழ் மொழியில் ஆங்கில மொழியில் மலாய் மொழியில்
அலெக்சாண்டர் சாலை
உலு பாலாங் சாலை
01. Jalan Alexander Jalan Hulubalang
பாகோட் சாலை
ஜொகூர் சாலை
02. Jalan Bagot Jalan Johor
பர்ச் சாலை
மகாராஜாலேலா சாலை
03. Jalan Birch Jalan Maharajalela
பிளப் சாலை
புக்கிட் அமான் சாலை
04. Jalan Bluff Jalan Bukit Aman
புரோடரிக் சாலை
சுல்தான் இசுமாயில் சாலை
05. Jalan Broadrick Jalan Sultan Ismail & Jalan MARA
புரோக்மன் சாலை
டத்தோ ஓன் சாலை
06. Jalan Brockman Jalan Dato Onn
கேம்பல் சாலை
டாங் வாங்கி சாலை
07. Jalan Campbell Jalen Dang Wangi
சிசில் சாலை
ஆங் லெக்கிர் சாலை
08. Jalan Cecil Jalan Hang Lekir
லோரோங் சிசில்
லோரோங் ஆங் லெக்கிர்
09. Lorong Cecil Lorong Hang Lekir
கிளார்க் சாலை
பெலான்டா சத்து சாலை
10. Jalan Clarke Jalan Belanda Satu
கிளிபர்ட் சாலை
தாமிங் சாரி சாலை
11. Jalan Clifford Jalan Taming Sari
டேவிட்சன் சாலை
ஆங் ஜெபாட் சாலை
12. Jalan Davidson Jalan Hang Jebat
லோரோங் டேவிட்சன்
லோரோங் ஆங் ஜெபாட்
13. Lorong Davidson Lorong Hang Jebat
டகளஸ் சாலை
பகாங் சாலை
14. Jalan Douglas Jalan Pahang
துருரி சாலை
சாங் குணா சாலை
15. Jalan Drury Jalan Sang Guna
போச் சாலை
செங் லோக் சாலை
16. Jalan Foch Jalan Cheng Lock
பிரிமேன் சாலை
ஊ தான்ட் சாலை
17. Jalan Freeman Jalan U Thant
லோரோங் பிரிமேன் சத்து
லோரோங் ஊ தான்ட் சத்து
18. Lorong Freeman Satu Lorong U Thant Satu
லோரோங் பிரிமேன் டுவா
லோரோங் ஊ தான்ட் டுவா
19. Lorong Freeman Dua Lorong U Thant Dua
தாமான் பிரிமேன் சாலை
தாமான் ஊ தான்ட் சாலை
20. Jalan Taman Freeman Jalan Taman U Thant
தாமான் பிரிமேன் டுவா
தாமான் ஊ தான்ட் டுவா
21. Taman Freeman Dua Taman U Thant Dua
தாமான் பிரிமேன் தீகா
தாமான் ஊ தான்ட் தீகா
22. Taman Freeman Tiga Taman U Thant Tiga
தாமான் பிரிமேன் அம்பாட்
தாமான் ஊ தான்ட் அம்பாட்
23. Taman Freeman Empat Taman U Thant Empat
கிரே சாலை
செமாஞ்சோங் சாலை
24. Jalan Gray Jalan Semenanjung, Jalan Sabah & Jalan Kinabalu
குயில்மார்ட் சாலை
லேடாங் சாலை
25. Jalan Guillemard Jalan Ledang
லெம்பா குயில்மார்ட் சாலை
லெம்பா லேடாங் சாலை
26. Jalan Lembah Guillemard Jalan Lembah Ledang
புக்கிட் குயில்மார்ட்
புக்கிட் லேடாங்
27. Bukit Guillemard Bukit Ledang
பெர்சியாரான் குயில்மார்ட்
பெர்சியாரான் லேடாங்
28. Pesiaran Guillemard Pesiaran Ledang
கர்னி சாலை
செமாராக் சாலை
29. Jalan Gurney Jalan Semarak
ஏல் சாலை
ராஜா அப்துல்லா சாலை
30. Jalan Hale Jalan Raja Abdullah
அன்னிகான் சாலை
சிலாங்கூர் சாலை
31. Jalan Hannigan Jalan Selangor
இக்ஸ் சாலை
சங்காட் புக்கிட் பிந்தாங்
32. Jalan Hicks Changkat Bukit Bintang & Changkat Raja Chulan
லோரோங் இக்ஸ்
லோரோங் ராஜா சூலான்
33. Lorong Hicks Lorong Raja Chulan
ஓஸ் சாலை
விசுமா புத்ரா சாலை
34. Jalan Hose Jalan Wisma Putra
உசே சாலை
பேராக் சாலை
35. Jalan Hussey Jalan Perak
ஜான் ஏண்ட்ஸ் சாலை
அப்துல் மனான் நோர்டின் சாலை
36. Jalan John Hands Jalan Abdul Manan Nordin
கென்னி சாலை
துங்கு சாலை
37. Jalan Kenny Jalan Tunku
கென்னி தீமோர் சாலை
லங்காக் துங்கு
38. Jalan Kenny Timor Langgak Tunku
கென்னி தெப்பி சாலை
தெப்பியான் துங்கு
39. Jalan Kenny Tepi Tepian Tunku
கென்னி கெந்திங் சாலை
சிம்பாங்கான் துங்கு
40. Jalan Kenny Genting Simpangan Tunku
கென்னி செலெக்கோ சாலை
செலெக்கோ துங்கு
41. Jalan Kenny Selekoh Selekoh Tunku
கென்னி உத்தாரா சாலை
டாத்தாரான் துங்கு
42. Jalan Kenny Utara Dataran Tunku
கென்னி ரெண்டா சாலை
லூரா துங்கு
43. Jalan Kenny Rendah Lurah Tunku
கென்னி திங்கி சாலை
திங்கியான் துங்கு
44. Jalan Kenny Tinggi Tinggian Tunku
கென்னி செலாத்தான் சாலை
தாமான் துங்கு
45. Jalan Kenny Selatan Taman Tunku
கென்னி கீரி சாலை
லாமான் துங்கு
46. Jalan Kenny Kiri Laman Tunku
கென்னி பெர்த்தாமா சாலை
லெம்பா துங்கு சாலை
47. Jalan Kenny Pertama Jalan Lembah Tunku
கென்னி கானான் சாலை
செறுனான் துங்கு
48. Jalan Kenny Kanan Cerunan Tunku
கென்னி டாலாம் சாலை
டாலாமான் துங்கு
49. Jalan Kenny Dalam Dalaman Tunku
கென்னி செந்தோசா சாலை
சங்காட் துங்கு
50. Jalan Kenny Sentosa Changkat Tunku
சங்காட் கென்னி
சங்காட் துங்கு
51. Changkat Kenny Changkat Tunku
பெர்சியாரான் புக்கிட் கென்னி
பெர்சியாரான் புக்கிட் துங்கு
52. Pesiaran Bukit Kenny Pesiaran Bukit Tunku
லோரோங் கென்னி பகாகியா
லிக்கு துங்கு
53. Lorong Kenny Bahagia Liku Tunku
கென்னி ஹில்
புக்கிட் துங்கு
54. Kenny Hill Bukit Tunku
கென்னி தெங்கா சாலை
பிங்கிரான் துங்கு
55. Jalan Kenny Tengah Pinggiran Tunku
கிளைன் சாலை
ஆங் லெக்கியூ துங்கு
56. Jalan Klyne Jalan Hang Lekiu
லோரோங் கிளைன்
லோரோங் ஆங் லெக்கியூ
57. Lorong Klyne Lorong Hang Lekiu
லாங்சோர்த்தி சாலை
மலாக்கா சாலை
58. Jalan Langworthy Jalan Melaka
லோர்னி சாலை
சையது புத்ரா சாலை
59. Jalan Lornie Jalan Syed Putra
லோரோங் லோர்னி கிரி
லோரோங் சையது புத்ரா கிரி
60. Lorong Lornie Kiri Lorong Syed Putra Kiri
புலாத்தான் லோர்னி
புலாத்தான் சையது புத்ரா
61. Bulatan Lornie Bulatan Syed Putra
பெர்சியாரான் லோர்னி
பெர்சியாரான் சையது புத்ரா
62. Pesiaran Lornie Pesiaran Syed Putra
மெக்னமாரா சாலை
திராங்கானு சாலை
63. Jalan Macnamara Jalan Terengganu
மார்ஷ் சாலை
துன் சம்பந்தன் சாலை 4
64. Jalan Marsh Jalan Tun Sambanthan 4
மெக்சுவெல் சாலை
துன் இசுமாயில் சாலை
65. Jalan Maxwell Jalan Tun Ismail
லோரோங் மெக்சுவெல்
லோரோங் துன் இசுமாயில்
66. Lorong Maxwell Lorong Tun Ismail
மெக்சுவெல் டிரைவ்
பெர்சியாரான் துன் இசுமாயில்
67. Maxwell Drive Pesiaran Tun Ismail
மெக்கர்த்தர் சாலை
ஆங் நாடிம் சாலை
68. Jalan McArthur Jalan Hang Nadim
மவுண்ட்பேட்டன் சாலை
துன் பேராக் சாலை
69. Jalan Mountbatten Jalan Tun Perak
ஓ கொனேல் சாலை
சரவாக் சாலை
70. O'Connell Park Jalan Sarawak
பாரி சாலை
பி. ராம்லி சாலை
71. Jalan Parry Jalan P. Ramlee
பெக்கிலிலிங் சாலை
துன் ரசாக் சாலை
72. Jalan Pekeliling Jalan Tun Razak
பெர்க்கின்ஸ் சாலை
ராஜா ஆலாங் சாலை
73. Jalan Perkins Jalan Raja Alang
குயின்ஸ் வழி
லோரோங் பெலியோங்
74. Queen's Terrace Lorong Beliong
ரோட்ஜர் சாலை
ஆங் கஸ்தூரி சாலை
75. Jalan Rodger Jalan Hang Kasturi
சீவோய் சாலை
தித்திவாங்சா சாலை
76. Jalan Seavoy Jalan Titiwangsa
ஷா சாலை
ஆங் துவா சாலை
77. Jalan Shaw Jalan Hang Tuah
இஸ்பூனர் சாலை
சந்திராவாசே சாலை
78. Jalan Spooner Jalan Cenderawasih
இஸ்டோனி சாலை
டேவான் சுல்தான் சுலைமான் சாலை
79. Jalan Stoney Jalan Dewan Sultan Sulaiman
சுவெட்டன்காம் சாலை
சுல்தான் சலாவுதீன் சாலை
80. Jalan Swettenham Jalan Mahameru & Jalan Sultan Salahuddin
பெர்சியாரான் சுவெட்டன்காம்
பெர்சியாரான் மகாமேரு
81. Persiaran Swettenham Persiaran Mahameru
திரவெர்ஸ் சாலை
ராக்யாட் சாலை
82. Jalan Travers Split into Jalan Rakyat and Jalan Travers.
திரேச்சர் சாலை
சுல்தான் இசுமாயில் சாலை
83. Jalan Treacher Jalan Sultan Ismail
வென்னிங் சாலை
பெர்தானா சாலை
84. Jalan Venning Jalan Perdana, Jalan Ria & Jalan Tembusu
வாட்கின்ஸ் சாலை
பெந்தாரா சாலை
85. Jalan Watkins Jalan Bentara
வாட்சன் சாலை
அஜி யகாயா சாலை
86. Jalan Watson Jalan Haji Yahya Sheikh Ahmad
வெல்ட் சாலை
ராஜா சூலான் சாலை
87. Jalan Weld Jalan Raja Chulan
பெர்சியாரான் வெல்ட்
சதிராவாசே சாலை
88. Pesiaran Weld Jalan Cenderasari
வைன் சாலை
கிளாந்தான் சாலை
89. Jalan Wynne Jalan Kelantan
யாங் சாலை
சந்திராசாரி சாலை
90. Jalan Young Jalan Cenderasari

முக்கிய சாலைகள்

தொகு
ஆங்கில மொழியில் மலாய் மொழியில் தமிழ் மொழியில் தோற்றம் குறிப்புகள்
Ampang Road Jalan Ampang அம்பாங் சாலை   அம்பாங் மாவட்டம், அம்பாங் வணிக வளாகம், மாநகரச் சதுக்கம் சூரியா கேஎல்சிசி
Bangsar Road Jalan Bangsar பங்சார் சாலை   அப்துல்லா உக்கும், பங்சார்[6]
Bintang Walk Jalan Bukit Bintang புக்கிட் பிந்தாங் சாலை   புக்கிட் பிந்தாங்
Cheras Main Road Jalan Cheras செராஸ் சாலை   செராஸ், சிலாங்கூர், செராஸ்–காஜாங் விரைவுச்சாலை
Chow Kit Road Jalan Chow Kit சௌக்கிட்   லோக் சௌக்கிட், சௌக்கிட் நிலையம்
Cochrane Road Jalan Cochrane காக்ரேன் சாலை (சார்லஸ் வால்டர் அமில்டன் காக்ரேன்) (1929–1930)
Damansara Road Jalan Damansara டாமன்சாரா சாலை   டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை, டாமன்சாரா பெர்டானா, டாமன்சாரா ஜெயா, ஆரா டாமன்சாரா, முத்தியாரா டாமன்சாரா, பண்டார் உத்தாமா டாமன்சாரா, டாமன்சாரா உத்தாமா, பண்டார் செரி டாமன்சாரா, கோத்தா டாமன்சாரா, ஆரா டாமன்சாரா எல்ஆர்டி நிலையம்
Campbell Road Jalan Dang Wangi டாங் வாங்கி சாலை   டக்ளஸ் கேம்பல் (1867–1918), நெகிரி செம்பிலான், ஜொகூர் மாநிலங்களின் முதல் பிரித்தானிய மாநில முதல்வர். கேம்பல் வணிக வளாகம்.
Old Airport Road Jalan Dewan Bahasa பழைய வானூர்திச் சாலை [7] டேவான் பகாசா புசுதாகா, சுங்கை பீசி இராணுவ வானூர்தி நிலையம்
Straits Road Jalan Esfahan நீரிணைச் சாலை   மலாக்கா நீரிணை, நீரிணை குடியேற்றங்கள்
Genting Klang-Pahang Highway Genting Klang–Pahang Highway கெந்திங் கிள்ளான்-பகாங் நெடுஞ்சாலை   கெந்திங் கிள்ளான்-பகாங் நெடுஞ்சாலை
Davidson Road Jalan Hang Jebat ஆங் ஜெபாட் சாலை   மெர்டேக்கா 118
Rodger Street Jalan Hang Kasturi ஆங் கஸ்தூரி சாலை   ஜான் பிக்கர்ஸ்கில் ரோஜர் (1851-1910), தலைமை நீதிபதி, சிலாங்கூர் (1882)
Cecil Street Jalan Hang Lekir ஆங் லெக்கிர் சாலை   சிசில் கிளெமெந்தி ஸ்மித், (1840-1916); 1887 - 1893 நீரிணை குடியேற்றங்கள் ஆளுநர்
Klyne Street Jalan Hang Lekiu ஆங் லெக்கியூ சாலை  
Shaw Road (1938–1981)[8]
Jail Road (<1938)
Jalan Hang Tuah ஆங் துவா சாலை   கோலாலம்பூர் உள்வட்டச் சாலை
Imbi Road Jalan Imbi இம்பி சாலை   புக்கிட் பிந்தாங், புக்கிட் பிந்தாங் நகர மையம், பெர்ஜாயா சதுக்கம், புக்கிட் பிந்தாங் சாலை
Ipoh Road Jalan Ipoh ஈப்போ சாலை   துவாங்கு அப்துல் அலீம் சாலை (டூத்தா சாலை). துவாங்கு அப்துல் ரகுமான் சாலை, சுல்தான் அசுலான் சா சாலை, மலேசிய கூட்டரசு சாலை 1
Taylor Road (1960) Jalan Istana இசுதானா சாலை   வில்லியம் தாமஸ் டெய்லர், இசுதானா நெகாரா, கோலாலம்பூர்–சிரம்பான் விரைவுச்சாலை, டாமன்சாரா சாலை
Kepong Main Road Jalan Kepong கெப்போங் சாலை   கெப்போங், கெப்போங்–செலாயாங் நெடுஞ்சாலை, கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2, மலேசிய கூட்டரசு சாலை 54
Old River Road Jalan Kinabalu கினபாலு சாலை   கோலாலம்பூர் மத்திய உள்வட்டச் சாலை
Klang Road Jalan Klang Lama கிள்ளான் லாமா சாலை   சையது புத்ரா சாலை, பந்தாய் புதிய விரைவுச்சாலை
Kuching Road Jalan Kuching கூச்சிங் சாலை   கோலாலம்பூர் மத்திய உள்வட்டச் சாலை, கோலாலம்பூர்-ரவாங் நெடுஞ்சாலை.
Loke Yew Road Jalan Loke Yew லோக் இயூ சாலை   செராஸ் நெடுஞ்சாலை
Maarof Road Jalan Maarof மாரோப் சாலை   பங்சார்
Birch Road (1960) Jalan Maharajalela மகாராஜா லேலா சாலை   ஜேம்ஸ் பர்ச், மகாராஜா லேலா
Broadrick Road Jalan MARA மாரா சாலை மாரா (Majlis Amanah Rakyat); எட்வர்ட் ஜார்ஜ் பிராடரிக் (பி. 1864 – இ. 1929)
Dickson Street Jalan Masjid India மஸ்ஜீத் இந்தியா சாலை   மஸ்ஜீத் இந்தியா, போர்டிக்சன்
Market Street Lebuh Pasar Besar லெபோ பசார் பெசார்   மேடான் பசார் பெசார், கிள்ளான் ஆறு, மெர்டேக்கா சதுக்கம்
Old Market Square Medan Pasar Besar மேடான் பசார் பெசார்   கோலாலம்பூர் மத்தியச் சந்தை (1888 - 1889); மேடான் பசார் பேருந்து முனையம்.
Pahang Road Jalan Pahang பகாங் சாலை பகாங், கெந்திங் கிள்ளான்-பகாங் நெடுஞ்சாலை
Parliament Road Jalan Parlimen மலேசிய நாடாளுமன்றச் சாலை   மலேசிய நாடாளுமன்றக் கட்டிடம்
Pantai Baharu Avenue Jalan Pantai Baharu பந்தாய் பாரு சாலை  
Petaling Street Jalan Petaling பெட்டாலிங் தெரு   கோலாலம்பூர் சீன நகர்
Pinang Street Jalan Pinang பினாங்கு தெரு   கோலாலம்பூர் மாநாட்டு மையம், கோலாலம்பூர் மாநகர மையம்
Puchong Road Jalan Puchong பூச்சோங்–பெட்டாலிங் ஜெயா சாலை பூச்சோங், கிள்ளான் லாமா சாலை, பூச்சோங் ஜெயா
Pudu Road, Pudoh Street (1960) Jalan Pudu புடு சாலை   புடு, புடு சிறைச்சாலை, புடு சென்ட்ரல், பிளாசா ராக்யாட்
Parry Road Jalan P. Ramlee பி. ராம்லி சாலை   மலேசிய மலாய் நடிகர் பி. ராம்லி
Raja Road Jalan Raja ராஜா சாலை
கோம்பாக் சாலை
  சுல்தான் அப்துல் சமாட் கட்டிடம், மெர்டேக்கா சதுக்கம், கோம்பாக் ஆறு.
Weld Road (1960) Jalan Raja Chulan ராஜா சூலான் சாலை   ராஜா சூலான், (Raja di Hilir Perak), பிரடெரிக் வெல்ட் (1823–1891)
Raja Laut Road Jalan Raja Laut ராஜா லாவுட் சாலை   ராஜா லாவுட், கோலாலம்பூர் பெங்குலு
Segambut Road Jalan Segambut சிகாம்புட் சாலை சிகாம்புட்
Semantan Road Jalan Semantan செமந்தான் சாலை   டாமன்சாரா அயிட்ஸ், இசுபிரிண்ட் விரைவுச்சாலை
Sentul Road Jalan Sentul செந்தூல் சாலை செந்தூல்
Treacher Road Jalan Sultan Ismail சுல்தான் இசுமாயில் சாலை   கோலாலம்பூர் உள்வட்டச் சாலை, வில்லியம் ஊட் திரீச்சர் (பிரித்தானிய வடக்கு போர்னியோவின் முதல் ஆளுநர்) (1881-1887)
Sungai Besi Road Jalan Sungai Besi சுங்கை பீசி சாலை  is சுங்கை பீசி
Lornie Road Jalan Syed Putra சையத் புத்ரா சாலை   பெர்லிஸ் இராஜா புத்ரா, மூன்றாவது மலேசிய அரசர்
Batu Road (1960) Jalan Tuanku Abdul Rahman துவாங்கு அப்துல் ரகுமான் சாலை   பத்து, கோலாலம்பூர், துவாங்கு அப்துல் ரகுமான், முதலாவது மலேசிய அரசர்
High Street (1960) Jalan Tun H S Lee துன் எச் எஸ் லீ சாலை   எச். எஸ். லீ, மலேசியாவின் முதலாவது நிதியமைச்சர் (1957–1959)
Java Street, Mountbatten Road (1960) Jalan Tun Perak துன் பேராக் சாலை   துன் பேராக், மவுண்ட்பேட்டன் பிரபு, ஜாவா
Circular Road Jalan Tun Razak துன் ரசாக் சாலை   பெக்கிலிலிங் சாலை, அப்துல் ரசாக் உசேன், துன் ரசாக் எக்ஸ்சேஞ்ச் (TRX), கோலாலம்பூர் மத்திய வட்டச்சாலை 1.
Brickfields Road (1960) Jalan Tun Sambanthan துன் சம்பந்தன் சாலை   வீ. தி. சம்பந்தன், பிரிக்பீல்ட்ஸ்
Foch Avenue Jalan Tun Tan Cheng Lock துன் டான் செங் லோக் சாலை   டான் செங் லோக், மலேசிய சீனர் சங்கம் (முதல் தலைவர்)
Cross Street Jalan Tun Tan Siew Sin துன் டான் சியூ சின் சாலை   முன்னாள் மலேசிய நிதி அமைச்சர் டான் சியூ சின்
Yap Ah Loy Road Jalan Yap Ah Loy யாப் ஆ லோய் சாலை யாப் ஆ லோய் (1837–1885), காப்பித்தான் சீனா (1869–1885)
Yap Kwan Seng Road Jalan Yap Kwan Seng யாப் குவான் செங் சாலை   யாப் குவான் செங், காப்பித்தான் சீனா (1889–1902)

குறிப்பிடத்தக்க சாலைகள்

தொகு

மேலும் காண்க

தொகு

காட்சியகம்

தொகு

கோலாலம்பூர் சாலைகளின் காட்சிப் படங்கள்:

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "The secret lives of KL street names, as told by authors Mariana Isa and Maganjeet Kaur in their book 'Kuala Lumpur Street Names'". Time Out Group. பார்க்கப்பட்ட நாள் 24 November 2024.
  2. Seng, Alan Teh Leam (21 October 2019). "How KL's streets got their names | New Straits Times". NST Online (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 November 2024.
  3. "Kuala Lumpur has several main streets that are known by both their contemporary names and their historical or English names". பார்க்கப்பட்ட நாள் 24 November 2024.
  4. "Brickfields community leaders who slammed the sudden renaming of Jalan Travers to Jalan Rakyat, labelling the change as "shocking" and saying the local residents were never consulted". www.dailyexpress.com.my (in ஆங்கிலம்). 20 January 2015.
  5. "Erasing history by replacing street names". www.dailyexpress.com.my (in ஆங்கிலம்). 1 November 2020. பார்க்கப்பட்ட நாள் 25 November 2024.
  6. "Call to document forgotten history of Kuala Lumpur". The Star. 9 April 2012. பார்க்கப்பட்ட நாள் 15 April 2012.
  7. "National Language and Literature Publishing House". 21 March 2010.
  8. "The Story of the Houses". The Victoria Institution Web Page. பார்க்கப்பட்ட நாள் 18 January 2014.

வெளி இணைப்புகள்

தொகு