கிள்ளான் லாமா சாலை

கோலாலம்பூர் மாநகர்ப் பகுதியில் உள்ள கூட்டரசு நெடுஞ்சாலை

கிள்ளான் லாமா சாலை (ஆங்கிலம்: Old Klang Road; அல்லது Federal Route 2); மலாய்: Jalan Klang Lama) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரம், சிலாங்கூர் மாநிலம்; ஆகிய பகுதிகளில் உள்ள கூட்டரசு நெடுஞ்சாலை ஆகும். கோலாலம்பூரின் மிகப் பழமையான சாலை என்றும்; முதல் பெரிய சாலை என்றும் அறியப்படுகிறது.[1]


கிள்ளான் லாமா சாலை
Jalan Klang Lama
Old Klang Road, Federal Route 2

வழித்தட தகவல்கள்
பயன்பாட்டு
காலம்:
1956 –
வரலாறு:கட்டுமான முடிவு: 1959
முக்கிய சந்திப்புகள்
மேற்கு முடிவு:PJS 8, பெட்டாலிங் ஜெயா சிலாங்கூர்
 

E10 பந்தாய் புதிய விரைவுச்சாலை

B11 பூச்சோங் சாலை பெட்டாலிங் ஜெயா கூச்சாய் லாமா சாலை

2 கோலாலம்பூர்-கிள்ளான்

E37 கிழக்கு–மேற்கு இணைப்பு

2 சையது புத்ரா சாலை
கிழக்கு முடிவு:செபுத்தே, கோலாலம்பூர்
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
பெட்டாலிங் ஜெயா, பூச்சோங், கூச்சாய் லாமா
நெடுஞ்சாலை அமைப்பு

இந்தச் சாலை, மலேசிய கூட்டரசு நெடுஞ்சாலை கட்டப் படுவதற்கு முன்பாகவே, 1956 - 1959-ஆம் ஆண்டுகளில் மலாயா அரசாங்கத்தால் கட்டப்பட்டது. மலேசிய கூட்டரசு நெடுஞ்சாலை 1965-ஆம் ஆண்டில்தான் கட்டப்பட்டது.

சுங்கைவே-பெட்டாலிங் ஜெயா

தொகு

1959 சனவரி 14 அன்று, அப்போதைய மலேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் சார்டன் ஜூபிர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட இந்தச் சாலை, கோலாலம்பூர், சுங்கைவே மற்றும் பெட்டாலிங் ஜெயா ஆகிய நகரங்கள் வழியாகச் செல்கிறது.

கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலை (Kuala Lumpur–Klang Highway) 14 சனவரி 1959 அன்று போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.[2]

பத்து தீகா லாமா சாலை

தொகு

பெர்சியாரான் சிலாங்கூர் (Persiaran Selangor), சுங்கை ரசாவ் சாலை (Jalan Sungai Rasau); பத்து தீகா லாமா சாலை (Jalan Batu Tiga Lama) அறியப்படும் தற்போதைய கிள்ளான் லாமா சாலை அமைப்பிற்கு மாற்றாக கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலை உருவாக்கப்பட்டது.

இதன் விளைவாக, கிள்ளான் லாமா சாலை என்பது சிலாங்கூர் மாநிலச் சாலை (Selangor State Road B14) என தரமிறக்கப்பட்டது.[3]

கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலை

தொகு

கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலை (Malaysia Federal Highway) என்பது மலேசியா, கோலாலம்பூர்; சிலாங்கூர் மாநிலப் பகுதிகளில் உள்ள கூட்டரசு நெடுஞ்சாலை ஆகும்.[1]

கோலாலம்பூர், செபுத்தே பகுதியில் தொடங்கும் இந்த நெடுஞ்சாலை 45 கிமீ (28 மைல்) நீளம் கொண்டது; கோலாலம்பூர்; பெட்டாலிங் ஜெயா; சா ஆலாம்; கிள்ளான், கிள்ளான் துறைமுகம் ஆகிய நகரங்களை இணைக்கிறது.

கிள்ளான் பள்ளத்தாக்கின் பரபரப்பான நெடுஞ்சாலைகளில் இதுவே முதல்நிலை வகிக்கிறது. இந்தச் சாலை, மலேசிய கூட்டரசு சாலை (Malaysia Federal Route 2) அல்லது மலேசிய கூட்டரசு 2 என குறியிடப்பட்டுள்ளது.[4]

காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Statistik Jalan (Edisi 2013). Kuala Lumpur: Malaysian Public Works Department. 2013. pp. 16–64. பன்னாட்டுத் தர தொடர் எண் 1985-9619.
  2. I REMEMBER WHEN... Federal Highway was constructed பரணிடப்பட்டது 10 ஏப்பிரல் 2009 at the வந்தவழி இயந்திரம்
  3. "Sejarah lengkap Jalan Lingkaran Tengah 1 (JLT1) Kuala Lumpur". Blog Jalan Raya Malaysia (in Malay). 14 January 2015. பார்க்கப்பட்ட நாள் 31 May 2015.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. "Blog Jalan Raya Malaysia (Malaysian Highway Blog): Federal highways". Blog Jalan Raya Malaysia (Malaysian Highway Blog). பார்க்கப்பட்ட நாள் 26 October 2024.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிள்ளான்_லாமா_சாலை&oldid=4145633" இலிருந்து மீள்விக்கப்பட்டது