பெட்டாலிங் ஜெயா நகரப் பிரிவுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

பெட்டாலிங் ஜெயா மாநகரத்தின் பிரிவுகள் அனைத்தும் எண்கள் இடப்பட்ட பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பிரிவும் செக்சன் (மலாய்: Seksyen; ஆங்கிலம்: Section); என்று அழைக்கப்படுகிறது.

அதே போல பெட்டாலிங் ஜெயா மாநகரத்தில் உள்ள பெரும்பாலான சாலைகளுக்கும் எண்களில் பெயர் வைக்கப்பட்டு உள்ளன. அந்தப் பிரிவுகளில் நகர்ப்புறங்கள்; வீட்டுமனைத் திட்டங்கள்; வணிக வளாகங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. அவற்றுக்கும் எண்களிலேயே பெயர்கள் வைக்கப்பட்டு உள்ளன.

பொது

தொகு
 
பெட்டாலிங் ஜெயா நகரப் பிரிவுகள்

1952-ஆம் ஆண்டில் பெட்டாலிங் ஜெயாவில் முதல் குடியேற்றம் நடைபெற்றது. பெட்டாலிங் ஜெயா பழைய நகரம் என்று தற்சமயம் அழைக்கப்படும் இடத்தில் எப்பிங்காம் ரப்பர் தோட்டம் (Effingham Estate) இருந்தது. அந்த ரப்பர் தோட்டத்தில், 1,200 ஏக்கர் (486 எக்டர்) பரப்பளவில், மூன்று புதியக் குடியேற்றப் பகுதிகள் உருவாக்கப்பட்டன.[1]

முதல் குடியேற்றப் பகுதிகள்

தொகு

அந்த குடியேற்றப் பகுதிகளுக்கு பிரிவு 1 (Section 1); பிரிவு 2 (Section 2) என்று பெயர் வைக்கப் பட்டன. பின்னர் 1954-ஆம் ஆண்டு இரண்டாவது குடியேற்றம் நடைபெற்றது. அந்தக் குடியேற்றப் பகுதிக்கு பிரிவு 3 (Section 3) என்று பெயர் வைக்கப் பட்டது. இந்தப் பகுதி மலாய்க்காரர்களுக்குத் தனியாக ஒதுக்கித் தரப்பட்டது.

அப்போது தொடங்கிய அந்த எண் பிரிவு முறை இன்றும் தொடர்கிறது. இந்த எண் முறைமை பெட்டாலிங் ஜெயா பழைய நகரத்தில் தொடங்கப் பட்டதால் பிரிவு 1 (Section 1)-இல் இருந்து பிரிவு 4 (Section 4) வரையிலான பிரிவுகள் அங்குதான் உள்ளன.[2]

விளக்கம்

தொகு

எடுத்துக்காட்டு

தொகு

எடுத்துக்காட்டாக ஒரு வீட்டின் முகவரி:

38 Jalan SS 21/58,
46000 Petaling Jaya,
Selangor.

அதில் 38 என்பது வீட்டு எண். SS 21 என்பது பிரிவு எண். 58 என்பது சாலை எண்; [3]

பெட்டாலிங் ஜெயா பிரிவுகள்

தொகு

பிரிவு: 1-5, 51, 51A, 52, 6-14, 16, 17, 17A, 18-22

தொகு
பிரிவுகள் வேறு பெயர்கள் அஞ்சல் குறியீடு
Seksyen 1 பெட்டாலிங் ஜெயா பழைய நகரம்
(PJ Old Town)
46000
Seksyen 2 பெட்டாலிங் ஜெயா பழைய நகரம்
(PJ Old Town)
46000
Seksyen 3 பெட்டாலிங் ஜெயா பழைய நகரம்
(PJ Old Town)
46000
Seksyen 4 பெட்டாலிங் ஜெயா பழைய நகரம்
(PJ Old Town)
46050
Seksyen 5 புக்கிட் காசிங்
(Bukit Gasing)
46000
Seksyen 51 46050
Seksyen 51A ஆசியா ஜெயா
(Asia Jaya)
46100
Seksyen 52 நியூ டவுன்
(PJ New Town)
46200
Seksyen 6 46000
Seksyen 7 46000
Seksyen 8 46050
Seksyen 9 தாமான் ஜெயா
(Taman Jaya)
46000
Seksyen 10 46000
Seksyen 11 46200
Seksyen 12 46200
Seksyen 13 46200
Seksyen 14 46100
Seksyen 16 46350
Seksyen 17 46400
Seksyen 17A 46400
Seksyen 18 46000
Seksyen 19 தாமான் கீ குவாட்
(Taman Gee Huat)
46300
Seksyen 20 தாமான் பாராமவுண்ட்
(Taman Paramount)
46300
Seksyen 21 சி பார்க்
(SEA Park)
46300
Seksyen 22 46300

பிரிவு: SS1-SS9, SS9A, SS10, SS11, SS20 - SS22, SS22A, SS23 - SS26

தொகு
பிரிவுகள் வேறு பெயர்கள் அஞ்சல் குறியீடு
SS1 கம்போங் துங்கு
(Kampung Tunku)
47300
SS2 47300
SS3 தாமான் சுபாங் (Taman Subang)
தாமான் யுனிவர்சிட்டி (Taman Universiti)
சீபோர்ட் (Seaport)
47300
SS4 கிளானா ஜெயா 47301
SS5 கிளானா ஜெயா 47301
SS6 கிளானா ஜெயா 47301
SS7 கிளானா ஜெயா 47301
SS8 சுங்கைவே 47300
SS9 சுங்கைவே 47300
SS9A சுங்கைவே 47300
SS10 47300
SS11 சுபாங் குழிப்பந்தாட்ட மன்றம்
Kelab Golf Negara Subang
47301
SS20 பண்டார் உத்தாமா 47400
SS21 பண்டார் உத்தாமா 47400
SS22 டாமன்சாரா ஜெயா 47400
SS22A டாமன்சாரா ஜெயா 47400
SS23 தாமான் சி
Taman SEA
47400
SS24 தாமான் மேகா
Taman Megah
47301
SS25 தாமான் மாயாங்
Taman Mayang
47301
SS26 தாமான் மாயாங் ஜெயா
Taman Mayang Jaya
47301

குறிப்பு: SS11 மற்றும் SS20 (SS12 முதல் SS19 வரையிலான) பிரிவுகள் சுபாங் ஜெயா; சுபாங் ஜெயா மாநகராட்சி அதிகார வரம்பிற்குள் உள்ளன.

பிரிவு: PJU1, PJU1A, PJU2 - PJU10

தொகு
பிரிவுகள் வேறு பெயர்கள் அஞ்சல் குறியீடு
PJU1 டாத்தாரான் பிரைமா (Dataran Prima)
அமான் சூரியா (Aman Suria)
கம்போங் செம்பாக்கா (Kampung Chempaka)
47301
PJU1A ஆரா டாமன்சாரா (Ara Damansara) 47301
PJU2 தாமான் ஜெயா (Taman Perindustrian Jaya) 47301
PJU3 துரோபிக்கானா (Tropicana)
டாமன்சாரா இண்டா (Damansara Indah)
சன்வே டாமன்சாரா (Sunway Damansara)
47410
PJU4 குவாசா டாமன்சாரா (Kwasa Damansara) 47410
PJU5 கோத்தா டாமன்சாரா (Kota Damansara) 47810
PJU6 பண்டார் உத்தாமா (BU1-BU12)
கம்போங் சுங்கை காயூ அரா (Kampung Sungai Kayu Ara)
47800
PJU7 முத்தியாரா டாமன்சாரா (Mutiara Damansara) 47810
PJU8 டாமன்சாரா பெர்டானா (Damansara Perdana) 47820
PJU9* பண்டார் ஸ்ரீ டாமன்சாரா (Bandar Sri Damansara) 52200
PJU10 டாமன்சாரா டாமாய் (Damansara Damai) 47830

பிரிவு: PJS1 - PJS6, PJS7, PJS8, PJS10

தொகு
பிரிவுகள் வேறு பெயர்கள் அஞ்சல் குறியீடு
PJS1 பெட்டாலிங் உத்தாமா (Petaling Utama) 46000
PJS2 கம்போங் மேடான் (Kampung Medan)
தாமான் டத்தோ அரூண் (Taman Dato' Harun)
46000
PJS3 தாமான் மேடான் (Taman Medan)
தாமான் ஸ்ரீ மஞ்சா (Taman Sri Manja)
46000
PJS4 தாமான் மேடான் (Taman Medan) 46000
PJS5 தாமான் டேசா ரியா (Taman Desaria) 46150
PJS6 கம்போங் லிண்டோங்கான் (Kampung Lindungan) 46150
PJS7* பண்டார் சன்வே (கிழக்கு) (Bandar Sunway) (Eastern) 47500
PJS8 பண்டார் சன்வே (Bandar Sunway) 46150
PJS10 பண்டார் சன்வே (வடக்கு) (Bandar Sunway) (Northern) 46150

மேற்கோள்கள்

தொகு
  1. "In the early 50's, Kuala Lumpur experienced congestion as a result of a rapid population growth and squatters existing in the outskirts of Kuala Lumpur. To overcome this problem, the State Government identified "Effingham Estate", a 1,200-acre rubber plantation in Jalan Klang Lama to create a new settlement known as Petaling Jaya". Official Portal of Petaling Jaya City Council (MBPJ). 16 September 2015. பார்க்கப்பட்ட நாள் 7 September 2022.
  2. Kok, Bernice (15 July 2018). "Here's What 'SS' & 3 Other Selangor Area Acronyms Stand For & How They Came to Be - WORLD OF BUZZ". worldofbuzz.com. பார்க்கப்பட்ட நாள் 8 September 2022.
  3. "Addresses in PJ are remarkably bureaucratic. The town is divided into numbered sections (seksyen". www.malaxi.com. பார்க்கப்பட்ட நாள் 10 September 2022.

மேலும் காண்க

தொகு