டாமன்சாரா ஜெயா

சிலாங்கூர் பெட்டாலிங் மாவட்டத்தில் ஒரு புறநகர்

டாமன்சாரா ஜெயா (மலாய்: Damansara Jaya; ஆங்கிலம்: Damansara Jaya); சீனம்: 白沙罗卫星市); என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டத்தின் செக்சன் SS22 (Section SS22); செக்சன் SS22A (Section SS22A); எனும் நகர்ப்புறப் பிரிவுகளை உள்ளடக்கிய புறநகர் ஆகும்.[1]

டாமன்சாரா ஜெயா
Damansara Jaya
Map
டாமன்சாரா ஜெயா is located in மலேசியா
டாமன்சாரா ஜெயா
      டாமன்சாரா ஜெயா
ஆள்கூறுகள்: 3°7′39.4″N 101°37′21.95″E / 3.127611°N 101.6227639°E / 3.127611; 101.6227639
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
மாவட்டம்பெட்டாலிங் மாவட்டம்
மாநகராட்சி பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி
அரசு
 • வகைஉள்ளாட்சி
 • நிர்வாகம்பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி
நேர வலயம்ஒசநே+8 (மலேசிய நேரம்)
மலேசிய அஞ்சல் குறியீடு
47400

இந்த டாமன்சாரா ஜெயா புறநகர்ப் பகுதி, பெட்டாலிங் மாவட்டம்; சுங்கை பூலோ முக்கிம்; துணைப் பிரிவுக்குள் அமைந்துள்ளது. 1.21 கி.மீ.2 (0.467 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ள இந்தப் புறநகர்ப் பகுதியில், 11,678 குடியிருப்பாளர்கள் உள்ளனர்.

பொது

தொகு

பெட்டாலிங் ஜெயா மாநகரம்; எண்கள் இடப்பட்ட பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பிரிவும் செக்சன் (Section) என்று அழைக்கப்படுகிறது.[2]

  • S என்றால் கிழக்கு பெட்டாலிங் ஜெயா (Section)
  • SS என்றால் மத்திய மற்றும் மேற்கு பெட்டாலிங் ஜெயா (Sungai Way - Subang)
  • PJU என்றால் வடக்கு பெட்டாலிங் ஜெயா (Petaling Jaya Utara)
  • PJS என்றால் தெற்கு பெட்டாலிங் ஜெயா (Petaling Jaya Selatan)

அமைவு

தொகு

டாமன்சாரா ஜெயா நகர்ப்புறத்தில் ஏறக்குறைய 2000 குடியிருப்பு வீடுகள் (Residential Dwellings); 1538 அடுக்கு மாடி வீடுகள் (Terraced Houses); 179 இருபிரிவு வீடுகள் (Semi-Detached Houses) மற்றும் 42 வளமனைகள் (Bungalows) உள்ளன. ஏட்ரியா (Atria), இந்த பகுதியின் மையத்தில் அமைந்துள்ள ஒரு பல்கடை அங்காடி ஆகும்.[3]

வரலாறு

தொகு

1970-களின் நடுப் பகுதியில் சி ஓய் சான் ஓல்டிங்ஸ் (See Hoy Chan Holdings Sdn. Bhd.) என்ற நிறுவனத்தின் துணை நிறுவனமான பாரமவுண்ட் கார்டன் (Paramount Garden) நிறுவனத்தின் கீழ் டாமன்சாரா ஜெயா கட்டுமானம் தொடங்கியது.

முதலில் பெட்டாலிங் ஜெயாவின் SS22 பிரிவை மட்டுமே உள்ளடக்கி இருந்தது. பின்னர் SS22A பிரிவு டாமன்சாரா ஜெயா வீடமைப்புத் திட்டத்தில் சேர்க்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் இருபிரிவு வீடுகளும்; வளமனைகளும் கட்டப்பட்டன.[4]

சாலைகள் அமைப்பின் தாக்கங்கள்

தொகு

டாமன்சாரா ஜெயா சற்று அமைதியான; ஒதுக்குப்புறமான இடமாகக் கருதப் படுகிறது. இருப்பினும், அண்மையில் இந்த நகர்ப்புறத்திற்கு அருகில்;

ஆகிய மூன்று சாலை அமைப்புகள் உருவாக்கப்பட்டு விட்டன. அதனால் இங்குள்ள மக்களும் அதன் தாக்கத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

டாமன்சாரா ஜெயாவில் வசிக்கும் பெரும்பான்மையான மக்கள் சீனர்; மலாய் இனத்தைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலும் நடுத்தர வருமானம் அல்லது மேல் வருமானம் கொண்டவர்கள். இவர்களில் பலர் இந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்த இடத்தின் அமைப்பு; மற்றும் நெடுஞ்சாலைகளுடனான நல்ல இணைப்பு போன்ற காரணங்களினால் இங்குள்ள வீடுகளின் விலையும் எப்போதும் அதிகரித்தவாறு உள்ளது.[1]

போக்குவரத்து

தொகு

டாமன்சாரா ஜெயா நகர்ப் பகுதியை அணுகுவதற்கு மூன்று நெடுஞ்சாலைகள் உள்ளன. அவையாவன:

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Damansara Jaya is considered to be a very small and old locality, developed in the 70s. The entire residential area in Damansara Jaya consists of only landed properties; of bungalows and semi-detached homes". PropSocial (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 10 September 2022.
  2. Kok, Bernice (15 July 2018). "Here's What 'SS' & 3 Other Selangor Area Acronyms Stand For & How They Came to Be - WORLD OF BUZZ". worldofbuzz.com. பார்க்கப்பட்ட நாள் 8 September 2022.
  3. "Damansara Jaya shoplots holding steady". Edgeprop.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-02.
  4. "Property Insight - Rejuvenation Of Damansara Jaya". propertyinsight.com.my (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-02.

வெளி இணைப்புகள்

தொகு

மேலும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டாமன்சாரா_ஜெயா&oldid=3996847" இலிருந்து மீள்விக்கப்பட்டது