டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை
டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை , (ஆங்கிலம்: Damansara–Puchong Expressway; மலாய்: Lebuhraya Damansara–Puchong) (LDP) என்பது மலேசியாவில் சிலாங்கூர் பெட்டாலிங் மாவட்டத்தில் அமைந்துள்ள 40-கி.மீ. (24.9 மைல்) நெடுஞ்சாலை ஆகும்.[1]
டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை Damansara–Puchong Expressway Lebuhraya Damansara–Puchong | |
---|---|
வழித்தடத் தகவல்கள் | |
பராமரிப்பு Lingkaran Trans Kota Holdings Bhd | |
நீளம்: | 40.0 km (24.9 mi) முக்கிய பாதை: 32.5 km (20.2 mi) பூச்சோங் மேற்கு இணைப்பு:7.5 km (4.7 mi) |
பயன்பாட்டு காலம்: | 1997 இன்று வரையில் – |
வரலாறு: | டிசம்பர் 1998-இல் கட்டி முடிக்கப்பட்டு; சனவரி 1999-இல் திறக்கப்பட்டது |
முக்கிய சந்திப்புகள் | |
வடக்கு முடிவு: | சுங்கை பூலோ நெடுஞ்சாலை கோலாலம்பூர் வளைவு 2 பண்டார் ஸ்ரீ டாமன்சாரா |
டாமன்சாரா–சா ஆலாம் கோலாலம்பூர்-கிள்ளான் சா ஆலாம் விரைவுச்சாலை B11 பூச்சோங்-பெட்டாலிங் ஜெயா புக்கிட் ஜாலில் நெடுஞ்சாலை சா ஆலாம்-பூச்சோங் நெடுஞ்சாலை ஸ்ரீ கெம்பாங்கான் சாலை | |
South முடிவு: | சிலாங்கூர், புத்ரா பெர்மாய், அருகில் புத்ராஜெயா–சைபர்ஜெயா விரைவுச்சாலை |
அமைவிடம் | |
முதன்மை இலக்குகள்: | புக்கிட் லாஞ்சான், டாமன்சாரா பெர்டானா, முத்தியாரா டாமன்சாரா, பண்டார் உத்தாமா டாமன்சாரா, தாமான் துன் டாக்டர் இசுமாயில், கிளானா ஜெயா, பண்டார் சன்வே , சுபாங் ஜெயா, பெட்டாலிங் ஜெயா, பூச்சோங், யூஇபி சுபாங் ஜெயா, சுங்கை பீசி, சா ஆலாம், புத்ராஜெயா, சைபர்ஜெயா |
நெடுஞ்சாலை அமைப்பு | |
இந்த அதிவேக நெடுஞ்சாலை பண்டார் ஸ்ரீ டாமன்சாரா மற்றும் புத்ரா பெர்மாய் நகரங்களுக்கு இடையே வடக்கு - தெற்கு திசையில் புத்ராஜெயாவிற்கு அருகில் செல்கிறது. அத்துடன் பெட்டாலிங் ஜெயா மற்றும் பூச்சோங் நகரங்களுக்கு ஒரு பெரிய சாலையாகவும் அமைகிறது.
இதன் தடத்தில் அமைந்துள்ள ஒரு குறுகிய கிழக்கு - மேற்கு துணைச் சாலை பண்டார் பூச்சோங்கையும் யூஇபி சுபாங் ஜெயாவின் புறநகர் பகுதியையும் இணைக்கிறது.
விளக்கம்
தொகு- விரைவுச்சாலை: (ஆங்கிலம்: Expressway; மலாய்: Lebuhraya).
- மலேசிய விரைவுச்சாலை: (ஆங்கிலம்: Malaysian Expressway; மலாய்: Lebuhraya Malaysia)
- நெடுஞ்சாலை (ஆங்கிலம்:: Highway; மலாய்: Laluan)
- மலேசிய நெடுஞ்சாலை: (ஆங்கிலம்: Malaysian Highway; மலாய்: Laluan Malaysia).
- கூட்டரசு சாலை (ஆங்கிலம்: Federal Route; மலாய்: Laluan Persekutuan)
- மலேசியக் கூட்டரசு சாலை (ஆங்கிலம்: Malaysia Federal Route; மலாய்: Laluan Persekutuan Malaysia)
பொது
தொகுசுங்கை பூலோ நெடுஞ்சாலை (Sungai Buloh Highway); கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2 (Kuala Lumpur Middle Ring Road 2) ஆகிய இரு சாலைகளும் சந்திக்கும் பரிமாற்றச் சந்திப்பில் டாமன்சாரா - பூச்சோங் விரைவுச்சாலை தொடங்குகிறது.
- கிளானா ஜெயா இலகு தொடருந்து வழித்தடம் (LRT Kelana Jaya Line);
- காஜாங் விரைவு தொடருந்து வழித்தடம் (MRT Kajang Line);
- அம்பாங் ஸ்ரீ பெட்டாலிங் இலகு தொடருந்து வழித்தடம்; (LRT Ampang Line; LRT Sri Petaling Line)
ஆகிய வழித்தடங்கள், இந்த டாமன்சாரா - பூச்சோங் விரைவுச்சாலையின் கணிசமான இடங்களில் மிக அருகில் செல்கின்றன.
வரலாறு
தொகுடாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலையின் கட்டுமானப் பணிகள் லிங்காரான் டிரான்ஸ் கோத்தா ஓல்டிங்சு (Lingkaran Trans Kota Holdings Bhd) (Litrak) எனும் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
23 ஏப்ரல் 1996-இல், டாமன்சாரா-பூச்சோங் விரைவுச் சாலையின் மேம்பாடு, வடிவமைப்பு, கட்டுமானம், பராமரிப்பு, செயல்பாடுகள் மற்றும் மேலாண்மை ஆகியவற்றிற்காக மலேசியா அரசாங்கத்திற்கும் லிட்ராக் நிறுவனத்திற்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது.
கட்டுமானப் பணிகள் செப்டம்பர் 1996-இல் தொடங்கி 1998 டிசம்பரில் முடிவடைந்தது. தொடக்கச் செலவு RM 1.1 பில்லியன்; மொத்தச் செலவு RM 1.4 பில்லியன். இந்த அதிவேக நெடுஞ்சாலை 25 ஜனவரி 1999-இல் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.