இசுபிரிண்ட் விரைவுச்சாலை

கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள முக்கிய விரைவுச்சாலை

இசுபிரிண்ட் விரைவுச்சாலை E23 , (ஆங்கிலம்: Sprint Expressway அல்லது Western KL Traffic Dispersial System; மலாய்: Lebuhraya Sprint அல்லது Sistem Penyuraian Trafik KL Barat) என்பது மலேசியாசிலாங்கூர்கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள முக்கிய விரைவுச்சாலை பிணையம் ஆகும்.

Expressway 23
இசுபிரிண்ட் விரைவுச்சாலை
Sprint Expressway
(Western KL Traffic Dispersial System)
Lebuhraya Sprint
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு
Sistem Penyuraian Trafik KL Barat Sdn Bhd (Sprint)
நீளம்:26.5 km (16.5 mi)
கெரிஞ்சி இணைப்பு: 11.5 km (7.1 mi)
டாமன்சாரா இணைப்பு: 9.5 km (5.9 mi)
பெஞ்சாலா இணைப்பு: 5.5 km (3.4 mi)
பயன்பாட்டு
காலம்:
1999
இன்று வரையில் –
வரலாறு:2004-இல் கட்டி முடிக்கப்பட்டது
Component
highways:
 கெரிஞ்சி இணைப்பு
(கெரிஞ்சி–மொன்ட் கியாரா)
 பெஞ்சாலா இணைப்பு
(ஜாலான் டூத்தா–சுங்கை பெஞ்சாலா)
  டாமன்சாரா இணைப்பு
(செமந்தான்–டாமன்சாரா இடைமாற்றம்)
முக்கிய சந்திப்புகள்
    புதிய கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச்சாலை
E31   டாமன்சாரா–சா ஆலம் உயர்த்தப்பட்ட விரைவுச்சாலை
  டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை
2  கூட்டரசு நெடுஞ்சாலை (மலேசியா)
ஜாலான் துவாங்கு அப்துல் அலீம் (ஜாலான் டூத்தா)
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
பண்டார் உத்தாமா டாமன்சாரா, டாமன்சாரா நகரம், பெட்டாலிங் ஜெயா, தாமான் துன் டாக்டர் இசுமாயில், மான்ட் கியாரா, தேசிய அறிவியல் மையம், ஸ்ரீ அர்த்தாமாஸ், பங்சார், கோலாலம்பூர், கெரிஞ்சி, ஜாலான் டூத்தா
நெடுஞ்சாலை அமைப்பு

பெட்டாலிங் ஜெயா; டாமன்சாரா போன்ற மேற்கு புறநகர்ப் பகுதிகளில் இருந்து கோலாலம்பூர் நகரின் நெரிசலான உள் நகரச் சாலைகளுக்குள் செல்லும் போக்குவரத்தைக் கலையச் செய்வதற்காக இந்த விரைவுச்சாலை கட்டப்பட்டது. இது மூன்று-வழி இரட்டைப் பாதையாகும்.[1]

பொது

தொகு

இந்த விரைவுச் சாலை மேற்குப் பரவல் இணைப்புத் திட்டம் (Western Dispersal Link Scheme) என்றும் அழைக்கப் படுகிறது. கோலாலம்பூரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள நேரங்களில், அந்த நெரிசலைக் குறைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் அதிவேக நெடுஞ்சாலைகளில் இதுவும் ஒன்றாகும்.

26.5 km (16.5 mi) நீளம் கொண்ட இந்த விரைவுச்சாலை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது:

  • கெரிஞ்சி இணைப்பு (Kerinchi Link)
  • டாமன்சாரா இணைப்பு (Damansara Link)
  • பெஞ்சாலா இணைப்பு (Penchala Link)

வரலாறு

தொகு
 
கிள்ளான் பள்ளத்தாக்கின் இஸ்பிரிண்ட் விரைவுச்சாலையின் டாமன்சாரா இணைப்புப் பகுதி.

இஸ்பிரிண்ட் அதிவேக விரைவுச்சாலையை அமைப்பதற்கான திட்டம் 1997-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அந்தக் கட்டத்தில் ஜாலான் டாமன்சாராவில் போக்குவரத்து நெரிசல்கள் அளவுக்கு அதிகமாக இருந்தன. அதைக் கட்டுப்படுவதற்கு மாற்றுவழி தேடும் போது இந்த விரைவுச்சாலை அமைப்பதற்கான திட்டம் உருவானது.

இந்த விரைவுச்சாலையை அமைப்பதற்கான திட்டம் சிஸ்டம் பென்யுரையான் டிராபிக் (Sistem Penyuraian Trafik KL Barat Sdn Bhd - Sprint) (இசுபிரிண்ட்) எனும் நிறுவனத்திடம் வழங்கப்பட்டது.

ஒப்பந்தம்

தொகு

1997 அக்டோபர் 23-ஆம் தேதி, இஸ்பிரிண்ட் விரைவுச் சாலையின் மேம்பாடு, வடிவமைப்பு, கட்டுமானம், பராமரிப்பு, செயல்பாடுகள் மற்றும் மேலாண்மை ஆகியவற்றிற்காக மலேசியா அரசாங்கத்திற்கும் லிட்ராக் நிறுவனத்திற்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது.

அத்துடன் பெஞ்சாலா இணைப்பின் (Penchala Link) கட்டுமானத்திற்காக மேலும் ஒரு துணை ஒப்பந்தம் 1998 செப்டம்பர் 4-இல் கையெழுத்தானது. சாவடிக் கட்டணம் வசூலிக்கும் காலம் 1998 டிசம்பர் 15-அம் தேதி தொடங்கி 33 ஆண்டுகள்; அதன் பின்னர், கட்டண வசூல் நிறுத்தப்பட்டு, நெடுஞ்சாலைகள் மலேசிய அரசிடம் ஒப்படைக்கப்படும் என ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

விரைவுச்சாலை கட்டுமானம்

தொகு

1999-இல் கட்டுமானம் தொடங்கியது. ஜாலான் டாமன்சாரா, ஜாலான் காயூ ஆரா, ஜாலான் ஸ்ரீ அர்த்தாமாஸ் மற்றும் ஜாலான் செமாந்தான் போன்ற பல முக்கிய சாலைகளைக் கையகப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவை இசுபிரிண்ட் விரைவுச்சாலை கட்டுமானத்தில் அடங்கும்.

கெரிஞ்சி இணைப்பு; டாமன்சாரா இணைப்பு; ஆகிய இரு இணைப்புகளும் 2001-இல் திறக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து 2004-இல் பெஞ்சாலா இணைப்பு திறக்கப்பட்டது.

முன்னோடி சாலைகள்

தொகு

இசுபிரிண்ட் விரைவுச் சாலையின் கட்டுமானம் பின்வரும் பல முக்கிய சாலைகளைக் கையகப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றையும் உள்ளடக்கியது:

கெரிஞ்சி இணைப்பு

தொகு
சாலைகள் பிரிவுகள்
ஜாலான் ஸ்ரீ அர்த்தாமாஸ் ஸ்ரீ அர்த்தாமாஸ்
ஜாலான் புக்கிட் கியாரா ஸ்ரீ அர்த்தாமாஸ்–புக்கிட் கியாரா

டாமன்சாரா இணைப்பு

தொகு
சாலைகள் பிரிவுகள்
ஜாலான் செமாந்தான் ஜாலான் டூத்தா–டாமன்சாரா நகர மையம்
ஜாலான் பெரிங்கின் தெற்குப் பக்கம்
ஜாலான் சொகார்–செமாந்தான்
ஜாலான் சொகார் ஜாலான் பெரிங்கின்–ஜாலான் டாமன்சாரா
ஜாலான் டாமன்சாரா டாமன்சாரா நகர மையம்–டாமன்சாரா
ஜாலான் காயூ ஆரா டாமன்சாரா–காயூ ஆரா

அம்சங்கள்

தொகு

இந்த விரைவுச்சாலை சில குறிப்பிடத்தக்க அம்சங்களைக் கொண்டுள்ளது:

  • கெரிஞ்சி இணைப்பு: மலேசியாவின் முதல் இரட்டை அடுக்கு வழித்தடம்
  • பெஞ்சாலா சுரங்கப் பாதை: மலேசியாவின் முதல் அகலமான சுரங்கப்பாதை.
  • கட்டணமில்லா சாலை: பெட்டாலிங் ஜெயாவின் பிரிவு 16 (Section 16); மற்றும் பிரிவு 17- (Section 17); ஆகிய இரு பிரிவுகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு, டாமன்சாரா இணைப்பில் 3 கி.மீ. சாலைக்கு கட்டணமில்லா சாலை

மேற்கோள்கள்

தொகு
  1. "Sprint Expressway is a three-lane dual carriageway that was built to disperse traffic from congested inner city roads and narrow residential roads leading into the city of Kuala Lumpur from the western suburbs of Petaling Jaya and Damansara and surrounding areas". பார்க்கப்பட்ட நாள் 11 September 2022.

மேலும் பார்க்க

தொகு

மலேசிய விரைவுச்சாலை முறைமை

வெளி இணைப்புகள்

தொகு