கூச்சாய் லாமா சாலை

கோலாலம்பூர் மாநகரத்தில் உள்ள முக்கிய சாலை

கூச்சாய் லாமா சாலை அல்லது கூச்சாய் லாமா நெடுஞ்சாலை (ஆங்கிலம்: Kuchai Lama Road; மலாய்: Jalan Kuchai Lama) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரத்தில் உள்ள முக்கிய சாலை ஆகும். கோலாலம்பூரின் பழமையான சாலைகளில் இந்தச் சாலையும் ஒன்றாக அறியப்படுகிறது.[1] இருப்பினும், அண்மைய காலங்களில் இந்தச் சாலை மறுசீரமைக்கப்பட்டு ஒரு விரைவுச்சாலைத் தரத்திற்கு நிலை உயர்த்தப்பட்டு உள்ளது.


கூச்சாய் லாமா சாலை
Jalan Kuchai Lama

முக்கிய சந்திப்புகள்
மேற்கு முடிவு:தாமான் குட்வூட்
 

2 கிள்ளான் லாமா சாலை

E9 பெஸ்ராயா விரைவுச்சாலை

கிழக்கு முடிவு:கூச்சாய் இடைமாற்று வழி

E9 பெஸ்ராயா விரைவுச்சாலை

அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
கூச்சாய் லாமா, சாலாக் சவுத்
சுங்கை பீசி
நெடுஞ்சாலை அமைப்பு

இந்த சாலை, கோலாலம்பூர் மாநகராட்சி (Dewan Bandaraya Kuala Lumpur) (DBKL) எனும் கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத்தால் பராமரிக்கப்படுகிறது.

பொது

தொகு

ஆகஸ்டு 2004-இல் கட்டுமானம் தொடங்கப்பட்டு, சனவரி 2008-இல் நிறைவடைந்தது. புதிய சாலைப் பரிமாற்ற இணைப்புகள் 28 பிப்ரவரி 2008 அன்று போக்குவரத்திற்கு திறக்கப்பட்டன.

2010-களில், பந்தாய் புதிய விரைவுச்சாலை மற்றும் சுங்கை பீசி விரைவுச்சாலை ஆகிய விரைவுச்சாலைகளை இணைக்கும் வகையில், ஐஜேஎம் நிறுவனம் (IJM Corporation), சிறப்புச் சரிவுப் பாதைகளை உருவாக்கியது.

பந்தாய் புதிய விரைவுச்சாலை

தொகு

பந்தாய் புதிய விரைவுச்சாலை   ( New Pantai Expressway) என்பது தீபகற்ப மலேசியாவின் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள கூட்டரசு விரைவுச்சாலை ஆகும். 19.6-கிலோமீட்டர் (12.2-மைல்) நீளம் கொண்டது. சிலாங்கூரின் தென்மேற்குப் பகுதியில், சுபாங் ஜெயாவிற்கு அருகில் உள்ள மலேசிய கூட்டரசு நெடுஞ்சாலைக்கு இணையாகச் செல்கிறது. அதே வேளையில், வட கிழக்கில் பங்சார் பகுதியில் தொடங்குகிறது.[2]

30 ஏப்ரல் 2004-இல் திறக்கப்பட்ட இந்த விரைவுச்சாலை, சுபாங் உத்தாமா சாலை, கிள்ளான் லாமா சாலை, பந்தாய் டாலாம் சாலை என முன்பு அறியப்பட்டது.[3]

காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Jalan Kuchai Lama is a major road in Kuala Lumpur, Malaysia". பார்க்கப்பட்ட நாள் 19 November 2024.
  2. "New Pantai Expressway – Lebuhraya Baru Pantai (NPE) – HiSCS" (in அமெரிக்க ஆங்கிலம்). 2016-11-08. பார்க்கப்பட்ட நாள் 2024-05-22.
  3. "New Pantai Expressway / NPE (E10)". klia2.info. 23 October 2017. பார்க்கப்பட்ட நாள் 19 November 2024.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூச்சாய்_லாமா_சாலை&oldid=4145632" இலிருந்து மீள்விக்கப்பட்டது