கெந்திங் கிள்ளான்-பகாங் நெடுஞ்சாலை

கெந்திங் கிள்ளான்-பகாங் நெடுஞ்சாலை (ஆங்கிலம்: Genting Klang–Pahang Highway); (மலாய்: Jalan Genting Klang Pahang), என்பது மலேசியா கோலாலம்பூர் நகரில் உள்ள ஒரு முக்கியமான நெடுஞ்சாலை ஆகும். இதைப் பொதுவாக கூட்டரசு சாலை 2 என அழைப்பார்கள்.[1]

கூட்டரசு சாலை 2
கெந்திங் கிள்ளான்-பகாங் நெடுஞ்சாலை
Genting Klang–Pahang Highway
Jalan Genting Klang
Jalan Pahang
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:கிள்ளான் கெட்ஸ்
 28 கோலாலம்பூர் மத்திய வட்ட சாலை 2
செத்தியாவங்சா-பந்தாய் விரைவுச்சாலை
68 2 கோம்பாக் சாலை
டூத்தா-உலு கிள்ளான் விரைவுச்சாலை
கோலாலம்பூர் மத்திய வட்ட சாலை 1
துவாங்கு அப்துல் ரகுமான் சாலை
தெற்கு முடிவு:சௌக்கிட்
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
செதாபாக்
கோம்பாக்
குவாந்தான்
உலு கிள்ளான்
நெடுஞ்சாலை அமைப்பு

கெந்திங் கிள்ளான்-பகாங் நெடுஞ்சாலை பல நகர்ப்புறப் பகுதிகளையும்; மற்றும் குடியிருப்பு பகுதிகளையும் இணைக்கிறது. பெரும்பாலான உள்ளூர்வாசிகள் இதை நெடுஞ்சாலையாகக் கருதுவதில்லை.[2]

பொது

தொகு

கெந்திங் கிள்ளான்-பகாங் நெடுஞ்சாலை, பல வணிக நிறுவனங்கள் மற்றும் பல அடுக்குமாடி மனை வானளாவிகளைக் கொண்ட ஒரு பரபரப்பான சாலையாகும். இந்தச் சாலை துங்கு அப்துல் பல்கலைக்கழக மாணவர்களிடையே பிரபலமானது. இந்தச் சாலை பல முக்கியமான இடங்களைக் கடந்து செல்கிறது. அவற்றில் சில முக்கியமான இடங்கள்;

கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை

தொகு

கோலாலம்பூர் நகரத்தில் இருந்து பகாங் மற்றும் கிழக்கு கடற்கரைக்கு செல்லும் முக்கிய நுழைவாயில் என்பதால் இந்த சாலைக்கு கெந்திங் கிள்ளான்-பகாங் நெடுஞ்சாலை என்று பெயர் சூட்டப்பட்டது.

இந்தச் சாலை கூட்டரசு சாலையின்   ஒரு பகுதியாகும். அதே வேளையில், கிழக்கு கடற்கரை விரைவுச்சாலையின் 0  மைல்கல்   இந்தச் சாலையில்தான் உள்ளது. 1980-களில் இந்த நெடுஞ்சாலை ஒற்றைப் பாதையில் இருந்து இரட்டைப் பாதையாக மேம்படுத்தப்பட்டது.

ஆறுவழி இரட்டைப் பாதை

தொகு

கோலாலம்பூர் நகர மையத்திற்கு செல்லும் பகாங் சாலையின் சுங்கச் சாவடி ஆகஸ்டு 1, 1995 முதல் இயங்கி வந்தது. 13 ஆகஸ்டு 2004 அன்று சாவடிக் கட்டணம் அகற்றப்படும் வரை வாகன ஓட்டிகள் ரிங்கிட் RM 0.50 கட்டணம் செலுத்தினார்கள். இந்த நெடுஞ்சாலை தற்போது கோலாலம்பூர் மாநகராட்சியால் பராமரிக்கப்படுகிறது.

செதாபாக் முதல் கிள்ளான் கேட்ஸ் வரையிலான கெந்திங் கிள்ளான் சாலைப் பகுதி; நான்கு வழிச்சாலையில் இருந்து ஆறுவழி இரட்டைப் பாதையாக மேம்படுத்தப்பட்டது. மேம்படுத்தல் 2012-இல் தொடங்கப்பட்டு 2015-இல் நிறைவடைந்தது. முழு திட்டத்திற்கான மொத்தச் செலவு ரிங்கிட் RM 39.6 மில்லியன் ஆகும்.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Heavy vehicles banned from using main roads to enter KL city centre during peak hours". The Edge Markets. 2022-06-03. பார்க்கப்பட்ட நாள் 2022-06-17.
  2. "Goods vehicles banned from city centre during peak hours". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-17.

வெளி இணைப்புகள்

தொகு